குடும்பத்தோட பயணிக்கும் 7 சீட்டர் காருக்கு செம டிமாண்ட்! இவ்வளவு பேர் வாங்கிட்டாங்களா?

இந்தியாவில் கார் வாங்கும் வாடிக்கையாளர்கள் அதிக இடவசதி மற்றும் அதிக நபர்கள் பயணிக்கும் வகையிலான எஸ்யூவி மற்றும் எம்பிவி ரக கார்களை அதிகம் விரும்புவதாக சமீபத்தில் வெளியான ஆய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது. இந்த ரக கார்கள் மக்களுக்கு பிடிக்க காரணம் என்ன? இந்த ஆய்வு சொல்லும் முழுமையான தகவல் என்ன விரிவாக காணலாம் வாருங்கள்.

சமீபத்தில் எக்னாமிக்ஸ் டைம்ஸ் நிறுவனம் ஜேட்டோ டைனமிக்ஸ் நிறுவனத்தின் தரவுகளை வைத்து ஒரு ஆய்வு அறிக்கையை வெளியிட்டது. அதில் 7 சீட்டர் கொண்ட கார் இந்திய மக்கள் மத்தியில் அதிகம் விரும்பப்படும் காராக இருப்பதாக தெரியவந்துள்ளது. பெரிய யூட்டிலிட்டி வாகனங்களை மக்கள் அதிகம் விரும்பி வருகின்றனர் என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது.

7 Seater Car Demand

இந்த வாகனங்கள் சாலையில் சிறப்பான ஃபெர்பார்மென்ஸை வெளிப்படுத்துவதாலும், குடும்பத்துடன் பயணிக்க ஏற்றதாக இருப்பதாலும், அதிகமான பொருட்களை இதில் ஏற்றி செல்ல வசதியாக இருப்பதாலும் இந்த ரக காருக்கான டிமாண்ட் அதிகரித்து வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 4.5 மீட்டர் அல்லது அதற்கும் அதிக நீளம் கொண்ட எஸ்யூவி கார்களில் 7 சீட்டர் மாடல் தான் 78 சதவீதம் விற்பனையாகியுள்ளதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது. இது கடந்த 2022ம் ஆண்டு வெறும் 52 சதவீதமாக தான் இருந்தது கடந்த 3 ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் இந்த செக்மெண்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

7 Seater Car Demand

இந்த செக்மெண்டில் இந்தியாவில் டாடா சஃபாரி, மஹிந்திரா எக்ஸ்யூவி 700, மஹிந்திரா ஸ்கார்பியோ, மஹிந்திரா ஸ்கார்பியோ என், மஹிந்திரா பொலிரோ நியோ, ஹூண்டாய் அல்கஸார் ஆகிய கார்கள் இந்திய மார்கெட்டில் தயாரிக்கப்பட்ட விற்பனை செய்யப்படுகிறது. இதில் மஹிந்திரா நிறுவனத்தின் ஆதிக்கம் தான் இருக்கிறது.

இதுபோல எம்பிவி செக்மெண்டில் 4 மீட்டருக்கும் அதிகமான மாடல்களில் 86 சதவீதம் 7 சீட்டர் மாடல் தான் இருக்கிறது. இந்த செக்மெண்டில் ஏகப்பட்ட கார்கள் விற்பனையாகிறது. டொயோட்டா இன்னோவா கிரைஸ்டா, இன்னோவா ஹைகிராஸ், மாருதி எர்டிகா, கியா கேரன்ஸ், கியா கேரன்ஸ் கிளாவிஸ் ஆகிய கார்கள் இருக்கிறது. இந்த செக்மெண்டில் போட்டி கடுமையாக இருக்கிறது.

7 Seater Car Demand

4 மீட்டருக்கு குறைவான நீளம் கொண்ட கார்களில் ரெனால்ட் டிரைபர் கார் மட்டுமே ஒரே எம்பிவி காராக இருக்கிறது. இந்த காரின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட நிஸான் வெர்ஷன் அடுத்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இ்நத காரும் குறைந்த விலையில் விற்பனைக்கு வந்தால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெறும் என எதிர்பார்க்கலாம்.

பெரிய கூட்டு குடும்பம் மட்டுமல்ல சிறிய குடும்பங்களும் 7 சீட்டர் மாடல் காரை தான் விரும்புகின்றனர். இது அதிக சீட்டர் வசதிக்காக மட்டுமல்லாமல் நீண்ட தூரம் பயணிக்கும் போது அதிக இட வசதி, மற்றும் அதிக லக்கேஜ்களை உடன் எடுத்து செல்லும் வசதி எல்லாம் கணக்கிட்டு பார்த்து இந்த பெரிய ரக காரை பலர் வாங்க விரும்புவதாக தெரிவிக்கின்றனர்.

7 Seater Car Demand

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சிறிய ரக கார்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருவது நமக்கு நன்றாக தெரிகிறது. இதனால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இந்த செக்மெண்டில் புதிய கார்களையும் ஏற்கனவே விற்பனையாகி வரும் கார்களில் அப்டேட்கள், புதிய வேரியன்ட்கள், மற்றும் கூடுதல் அம்சங்கள் இணைப்பது உள்ளிட்ட பல விஷயங்களை செய்யும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 10, 2025, 8:40 [IST]
English summary
7 seater car demand rising in india suvs mpvs trend
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X