சொந்த ஊருக்கு குடும்பத்தோட கெத்தா போகலாம்.. இந்தியாவில் சீக்கிரமே விற்பனைக்கு வரவிருக்கும் 7 சீட்டர் கார்கள்!

இந்தியாவில் அதிக இருக்கைகள் கொண்ட கார் மாடல்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதனைக் கருத்தில் கொண்ட வாகன உற்பத்தியாளர்கள், அதிக இருக்கைகளைக் கொண்ட கார்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கி வருகின்றனர். இதை உறுதிப்படுத்தும் விதமாகவே சமீபத்தில் நடைபெற்ற 'பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025' (Bharat Mobility Global Expo 2025)-வும் அமைந்துள்ளது. அதிக எண்ணிக்கையில் 7 சீட்டர் கார்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டன. இந்திய வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் நோக்கிலேயே, வாகன உற்பத்தியாளர்கள் இந்த உலக புகழ்பெற்ற வாகன கண்காட்சியைப் பயன்படுத்தி அதிக இருக்கை கார்களைக் காட்சிப்படுத்தி இருக்கின்றனர்.

இங்கு காட்சிப்படுத்தப்பட்ட சில 7 சீட்டர் கார் மாடல்கள் சீக்கிரமே விற்பனைக்கு வர இருக்கின்றன. அந்தவகையில் வெகு விரைவில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படும் 7 சீட்டர் கார் மாடல்கள் பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

7-seater suv s set to launch

எம்ஜி எம்9 (MG M9): ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியாவை அலங்கரிக்கும் விதமாக சீக்கிரமே சில கார் மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. அதில் ஒன்றே எம்ஜி எம்9 ஆகும். இது ஓர் மின்சாரத்தில் இயங்கும் எம்பிவி (Electirc MPV) ரக கார் மாடல் ஆகும்.

மிகப் பெரிய உருவம் கொண்ட இந்த கார் மாடலில் 7 சீட்டர் ஆப்ஷன் வழங்கப்பட இருப்பது உறுதியாகி இருக்கின்றது. இதுதவிர இன்னும் சில சீட்டர் ஆப்ஷன்களும் இந்த காரில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 8 சீட்டர் ஆப்ஷனிலும் இந்த கார் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த காரை வருகின்ற மார்ச் மாதத்தில் விற்பனைக்கு எதிர்பார்க்கலாம். ஏற்கனவே இதற்கான ப்ரீ புக்கிங் பணிகள் இந்தியாவில் தொடங்கிவிட்டன. டெலிவரி பணிகள் வருகின்ற ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மிக அதிக ஆடம்பர அம்சங்கள் நிறைந்த காராகவே இதுவும் இருக்கப்போகின்றது.

குறிப்பாக, இதன் இருக்கை அதிக ஆடம்பர வசதியை வழங்கக் கூடியதாக இருக்கும். மசாஜ் செய்யும் வசதி, ஹீட் மற்றும் குளிர்விக்கும் வசதி உள்ளிட்டவை அதில் எதிர்பார்க்கப்படுகின்றது. இதேபோல் நவீன கால தொழில்நுட்ப வசதிகளையும் இந்த கார் மிக அதிக அளவில் தாங்கி இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.

அந்தவகையில், பெரிய பொழுதுபோக்கு திரை, இரண்டுக்கும் மேற்பட்ட யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், எலெக்ட்ரிக் ஸ்லைடிங் டோர் மற்றும் டெயில்கேட், லெவல் 2 அடாஸ் அம்சம் உள்ளிட்டவையும் எம்ஜி எம்9 காரில் இடம் பெற இருக்கின்றன. இதுமட்டுமில்லைங்க, இந்த கார் ரேஞ்ச் தருவதிலும் மிக சிறந்ததாக இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.

எம்ஜி மேஜஸ்டர் (MG Majestor): எம்ஜி நிறுவனம் எம்9 கார் மாடலை மட்டுமல்ல இன்னும் சில கார் மாடல்களையும் ஆட்டோ எக்ஸ்போ வாயிலாக காட்சிப்படுத்தியது. இதுவும் ஓர் 7 சீட்டர் கார் மாடல் ஆகும். இந்தியாவில் இப்போது விற்பனையில் இருக்கும் மற்ற 7 சீட்டர் கார் மாடல்களைக் காட்டிலும் இது சற்றே அதிக இட வசதியைக் கொண்டதாக இருக்கும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இந்த காரை சாலையில் தனித்துவமாகக் காட்சியளிக்கச் செய்வதற்காக பல்வேறு தனித்துவமான அம்சங்களை எம்ஜி வழங்கி இருக்கின்றது. அந்தவகையில், பெரிய லோகோ, ஸ்பிளிட் வகை ஹெட்லேம்ப், மெல்லிய எல்இடி டிஆர்எல், சில்வர் பாஷ் பிளேட், கருப்பு நிற கிளாடிங், கருப்பு நிற விங் வகை கண்ணாடி மற்றும் கைப் பிடிகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதுபோன்று இன்னும் பல தனித்துவமான மற்றும் பிரீமியம் அம்சங்களை இந்த காரில் எம்ஜி வழங்கி இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த காரின் அறிமுகம் நடப்பாண்டின் இறுதி அல்லது மத்திக்குள் அரங்கேறிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ரூ. 20 லட்சத்திற்கும் குறைவான விலையிலேயே இந்த கார் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

ஸ்கோடா கோடியாக் (Skoda Kodiaq): இந்தியாவில் சீக்கிரமே விற்பனைக்கு வரவிருக்கும் கார் மாடல்களில் இதுவும் ஒன்றாகும். இரண்டு விதமான எஞ்சின் தேர்வுகளில் இந்த கார் மாடல் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இது ரூ. 39.99 லட்சம் என்கிற விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த அதிக விலைக்கு ஏற்ப அதிக பிரீமியம் அம்சங்களைத் தாங்கிய காராகவே இது இருக்கப்போகின்றது. மிக முக்கியமாக 13 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் திரை, முழு டிஜிட்டல் திறன் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ஸ்மார்ட் டயல் செட்-அப் ஆகிய அம்சங்களே இந்த காரில் எதிர்பார்க்கப்படுகின்றன. இதுமட்டுமல்ல 4x4 தொழில்நுட்பமும் இந்த காரில் எதிர்பார்க்கப்படுகின்றது.

ஹூண்டாய் ஐயோனிக் 9 (Hyundai Ioniq 9): ஆட்டோ எக்ஸ்போ-வில் காட்சிப்படுத்தப்பட்ட மற்றுமொரு அதிக இருக்கைகளைக் கொண்ட கார் மாடல் இதுவாகும். இது ஓர் எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். இதன் அறிமுகம் எப்போது அரங்கேறும் என்கிற அதிகாரப்பூர்வ வார்த்தைகள் இதுவரை வெளியாகவில்லை.

இருப்பினும், சீக்கிரமே இந்த காரை நாட்டில் விற்பனைக்கு எதிர்பார்க்கலாம். உலக சந்தையில் இந்த கார் மாடல் 6 மற்றும் 7 இருக்ககைள் தேர்வுகளில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், இதில் 110.3 kWh திறன் கொண்ட பேட்டரி பேக்கும் இந்த காரில் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதில் ஓர் முழு சார்ஜில் 620 கிமீ தூரம் வரை ரேஞ்சை எதிர்பார்க்கலாம். பிரீமியம் அம்சங்கள் நிறைந்த ஓர் எஸ்யூவி ரக எலெக்ட்ரிக் கார் மாடலாகவே இந்த கார் மாடலின் வருகை அமைய போகின்றது. அந்தவகையில், 12 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ஆம்பியன்ட் லைட், 10 ஏர் பேக்குகள், அடாஸ் தொழில்நுட்பம் போன்ற அம்சங்கள் எல்லாம் இந்த காரில் எதிர்பார்க்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: குடும்பத்துடன் கெத்தாக பயணிக்க ஏதுவான கார் மாடல்களே மேலே பார்த்தவை ஆகும். ஏழு மற்றும் அதற்கும் அதிகமான இருக்கைகளுடனேயே மேலே பார்த்த கார் மாடல்கள் இந்தியாவில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இவற்றின் வருகை ஏற்கனவே இந்தியாவில் விற்பனையில் இருக்கும் அதிக இருக்கைகளைக் கொண்ட டொயோட்டா ஃபார்ச்சூனர், இன்னோவா, மாருதி சுஸுகி எர்டிகா மற்றும் எக்ஸ்எல் 6 உள்ளிட்ட கார் மாடல்களுக்கு போட்டியாக அமையும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 22, 2025, 14:43 [IST]
English summary
7 seater suvs set to launch in india from the 2025 auto expo
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+