விலை இன்னும் குறையப்போகுது! மஹிந்திரா பிஇ6, எக்ஸ்இவி 9இ கார்களுக்கு இவ்வளவு டிமாண்டா?
மஹிந்திரா நிறுவனம் தனது எக்ஸ்இவி 9இ மற்றும் பிஇ6 கார்களில் புதிய பேட்டரி ஆப்ஷனை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இ்த காரைவாங்க நினைப்பவர்களுக்கு கூடுதல் ஆப்ஷன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. இப்படியாக இந்த காரில் உள்ள அம்சங்களை விரிவாக காணலாம் வாருங்கள்.
மஹிந்திரா நிறுவனம் எலெக்ட்ரிக் கார் அணிவகுப்பை விரிவுப்படுத்தி வருகிறது. சமீபத்தில் தான் தனது எக்ஸ்இவி 9எஸ் என்ற 7 சீட்டர் காரை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் இந்நிறுவனம் இந்தியாவில் எலெக்ரிக் கார்களை விற்பனை செய்வதில் டாடா, எம்ஜிக்கு அடுத்த 3வது நிறுவனமாக இரகு்கிறது. இந்நிலையில் இந்நிறுவனத்தின் எக்ஸ்இவி 9இ மற்றும் பிஇ 6 ஆகிய கார்களின் விற்பனை சிறப்பாக இருக்கும் நிலையில் அதில் புதிய பேட்டரி ஆப்ஷனை அறிமுகப்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

மஹிந்திரா நிறுவனம் இந்த இரண்டு கார்களுக்கும், இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷனிற்கும் லைஃப் பைடம் வாரண்டியை வழங்குகிறது. இதில் 59kWh பேட்டரி பேக் கொண்ட கார் 231 எச்பி பவரை வழங்குகிறது. இதுவே 79 kWh பேட்டரிபேக் வேரியன்ட் கார்286 எச்பி பவரை வழங்குகிறது. இந்த இரண்டு வேரியன்டிலும் டார்க் திறன் 380 தான்.

இந்த காரின் அளவுகளை பொருத்தவரை 4789 மிமீ நீளம், 1907 மிமீ அகலம், 16394 மிமீ உயரம், 2775 மிமீ வீல் பேஸ், 207 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ், இந்த காரின் டயர்களை பொருத்தவரை 245/50 ஆர்20 அளவில் உள்ளது. இந்த காரில் 663 லிட்டர் பூட் மற்றும் 150 லிட்டர் ஃபிரங்க் வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த காரில் 59 kWhபேட்டரியை சார்ஜ் செய்ய 20 நிமிடங்கள் தான் ஆகும். ஆனால் அதற்கு 140kW சார்ஜரை பயன்படுத்த வேண்டும். இதுவே 7.2kW சார்ஜரை பயன்படுத்தினால் 8.7 மணி நேரம் ஆகும். இதுவே 11kW சார்ஜரை பயன்படுத்தினால் 6 மணி நேரம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மஹிந்திரா நிறுவனம் இவி கார்களை விற்பனை செய்வதில் இவ்வளவு ஆர்வம் காட்டும் நிலையில் விற்பனையும் சிறப்பாக இருப்பதால் இன்னும் வாடிக்கையாளர்களுக்கு அதிக ஆப்ஷவனை வழங்க புதிய பேட்டரி ஆப்ஷனை கொண்டு வந்துள்ளது. இது நிச்சயம் வரவேற்க்க தக்கது தான்


Click it and Unblock the Notifications









