தெற்குல செம்மையா சேல்ஸாகிட்டு இருக்கு! இந்த காரை வாங்கும் மொத்த பேரும் இங்கேதான் இருக்காங்க போல!

எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனத்தின் புகழ்மிக்க கார் மாடல்களில் ஒன்றாக விண்ட்ஸர் இவி (MG Windsor EV) இருக்கின்றது. இது ஓர் எலெக்ட்ரிக் சியூவி (Electric CUV) ரக கார் மாடல் ஆகும். இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் ஒரே மற்றும் முதல் சியூவி ரக கார் மாடல் இதுவே ஆகும். இந்த காருக்கே இந்தியர்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, தென் இந்தியாவில் இந்த காருக்கு அமோகமான வரவற்புக் கிடைத்துக் கொண்டிருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்கு மட்டுமல்ல எம்ஜி நிறுவனத்தின் மற்ற மின்சார கார்களுக்கும் தென்னிந்தியாவில் நல்ல வரவேற்பேக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் 2024 ஆம் ஆண்டின் மொத்த எம்ஜி மின்சார கார் விற்பனையில் பாதி வரை தெற்கு இந்தியாவிலேயே விற்பனையாகி இருக்கின்றன.

Mg motor india sales reach 22646 evs in 2024

இதை உறுதிப்படுத்தக் கூடிய புள்ளி விபரங்களே தற்போது வெளியாகி இருக்கின்றன. அரசு வாகன் (Vahan) தளத்தில் இருந்து பெறப்பட்டு தகவலின்படி, 2024 ஆம் ஆண்டில், எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் மின்சார வாகனங்கள் மொத்தமாக 22 ஆயிரத்து 646 யூனிட்டுகள் வரை விற்பனையாகி இருக்கின்றன.

இதில் 10 ஆயிரத்து 698 யூனிட்டுகள் வரை தெற்கு இந்தியாவில் விற்பனையாகியவை ஆகும். இது மொத்த விற்பனையில் 47.2 சதவீதம் ஆகும். அதாவது, கர்நாடகா, தெலங்கானா, கேரளா மற்றும் தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களிலேயே அதிக எண்ணிக்கையில் எம்ஜி எலெக்ட்ரிக் கார்கள் அதிகம் விற்பனையாகி இருக்கின்றன.

Mg windsor ev front view

மிக முக்கியமாக கர்நாடகாவிலேயே அதிக எண்ணிக்கையில் எம்ஜி எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையாகி உள்ளன. இதற்கு அடுத்த இடத்தில் தெலங்கானாவும், மூன்றாவது இடத்தில் கேரளாவும் உள்ளது. இதற்கு அடுத்த இடத்திலேயே தென்னிந்தியாவின் பிற மாநிலங்கள் உள்ளன. இதேபோல், இந்தியாவில் விண்ட்ஸர் இவி-க்கே நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

இந்த காரை இந்தியாவில் ரூ. 9.99 லட்சம் என்கிற விலையில் வாங்கிக் கொள்ள முடியும். இது 'பேட்டரி அஸ் எ சர்வீஸ்' (Battery As A Service) திட்டத்தின்கீழ் விற்பனைச் செய்யப்படும் விலை ஆகும். இந்த திட்டம் வேண்டாம் என்றால் இந்த காருக்கு ரூ. 13.50 லட்சம் வரை செலுத்த வேண்டியிருக்கும்.

Mg comet ev front view

இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். பேட்டரி அஸ் எ சர்வீஸ் திட்டத்தின்கீழ் இந்த காரை வாங்குகையில், நாம் பயணிக்கும் ஒவ்வொரு கிமீ பயணத்திற்கும் ரூ. 3.5 கட்டணமாக செலுத்த வேண்டும். எம்ஜி நிறுவனத்தின் இந்த எலெக்ட்ரிக் காரை மட்டுமல்ல கோமெட் இவி, இசட்எஸ் இவி போன்ற மற்ற மின்சார கார் மாடல்களையும் பேட்டரி அஸ் எ சர்வீஸ் திட்டத்தின்கீழ் வாங்கிக் கொள்ள முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த எலெக்ட்ரிக் கார்களுக்கே நாட்டில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, கர்நாடகா போன்ற தென்னிந்தியாவில் மிக சிறப்பான டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. வரும் நாட்களிலும் இந்த டிமாண்ட் பன்மடங்காக அதிகரிக்கும் என நம்பப்படுகின்றது. டாடா மோட்டார்ஸ் மற்றும் பிற நிறுவனங்களின் மின்சார கார்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் அது அமோகமாக விற்பனையாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 25, 2025, 20:44 [IST]
English summary
According vahan data mg sold total of 10698 units across in south india alone
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X