புதுசா கார் (அ) பைக் வாங்கும் பிளானில் இருக்கிறீர்களா? விருதை பெறும் கார் (அ) பைக்கை வாங்க முயற்சியுங்க!

சென்னையின் மெட்ராஸ் மோட்டார் ரேஸ் டிராக் (Madras Motor Race Trcak)-இல் நடைபெற்ற ஏசர் ஃபாஸ்டர் விருதுகள் (Acer FASTER Awards) நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்று முடிந்துள்ளது. தொடர்ந்து 4வது ஆண்டாக நடைபெற்ற இந்த விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் வழக்கம்போல் நமது டிரைவ்ஸ்பார்க் குழுவும் பங்கேற்றது. இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, பல்வேறு கார் & பைக்குகள் சோதனை செய்து பார்க்கப்பட்டன. இந்த சோதனைகளின் முடிவுகள் எப்போது அறிவிக்கப்படும் என்பது குறித்த விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

அறிவிக்கப்பட்டதுபோல், பிப்ரவரி 26 மற்றும் 27ஆம் தேதிகளில் ஏசர் ஃபாஸ்டர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்று முடிந்தது. உண்மையில், ஏசர் ஃபாஸ்டர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி ஆனது அடுத்த மார்ச் மாதத்தில்தான் நடைபெற உள்ளது. தற்போது நடைபெற்று முடிந்திருப்பது, அந்த விருதுகளுக்கான கார் & பைக்குகளை தேர்வு செய்யும் பணிகள் ஆகும்.

acer faster awards 2025 completed

கடந்த 2024ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட கார் & பைக்குகள் மட்டுமே விருதுக்கு தகுதியுடைய வாகனங்களாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன. கடந்த ஆண்டுகளை போலவே, இந்த ஆண்டும் ஆட்டோமொபைல் துறையில் கார் & பைக்குகளை உற்பத்தி செய்வதில் தனித்து விளங்கும் நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் மற்றும் ஸ்பெஷலாக ஹைலைட்படுத்தி காட்டும் விதமாகவே ஏசர் ஃபாஸ்டர் அவார்ட்ஸ் நடத்தப்பட்டுள்ளது.

2025 ஏசர் ஃபாஸ்டர் அவார்ட்ஸில் நமது டிரைவ்ஸ்பார்க்கில் இருந்து எடிட்டர் புரோமித் கோஷ் கலந்துக் கொண்டார். மேலும், கார் பிளாக் இந்தியா, காடிவாடி, கியர்ஃபிளிக், மோட்டோராய்ட்ஸ் மற்றும் பைலட் ஆன் வீல்ஸ் உள்ளிட்ட ஆட்டோமொபைல் மீடியாக்களில் இருந்தும் அனுபவமிக்கவர்கள் நடுவர்களாக கலந்துக் கொண்டனர்.

acer faster awards 2025 completed

இந்த 6 மீடியா குடும்பங்களை ஆங்கிலம், தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என 6 விதமான மொழிகளில் சுமார் 25 கோடிக்கும் அதிகமான பயனர்கள் பயன்படுத்துகின்றனர். இத்தகைய பிரம்மாண்டமான மீடியாக்களில் இருந்து கலந்துக் கொண்ட ஆட்டோமொபைல் நிபுணர்கள், ஏசர் ஃபாஸ்டர் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் புதிய வாகனங்களை பல்வேறு விதமான பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தி மதிப்பெண்களை வழங்கினர்.

இதற்காக வாகனத்தின் தோற்றம், பெர்ஃபார்மன்ஸ், டெக்னாலஜி, பாதுகாப்பு என அனைத்தையும் தீர சோதனை செய்து விருதுகளை வழங்க நடுவர்கள் முடிவு செய்துள்ளனர். மேலும், நிஜ வாழ்க்கையில் அந்த வாகனங்கள் எந்த அளவிற்கு பயனுள்ளதாக அமைகின்றன என்பதையும் நடுவர்கள் தங்களது பார்வைக்கு கொண்டுவந்து பார்த்தனர்.

acer faster awards 2025 completed

ஏசர் ஃபாஸ்டர் விருதுகளில் கார் ஆஃப் தி இயர், பைக் ஆஃப் தி இயர், பிரீமியம் கார் ஆஃப் தி இயர், பிரீமியம் பைக் ஆஃப் தி இயர் மற்றும் ஸ்கூட்டர் ஆஃப் தி இயர் உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட உள்ளன. இவற்றுடன், இந்த வருடத்தில் இவி 4-வீலர் ஆஃப் தி இயர் மற்றும் இவி 2-வீலர் ஆஃப் தி இயர் உள்ளிட்ட விருதுகளும் வழங்கப்பட உள்ளன. மேலும், சிறப்பாக அப்டேட் செய்யப்பட்ட வாகனத்தை பெருமைப்படுத்தும் விதமாக அப்டேட் ஆஃப் தி இயர் விருதும் வழங்கப்பட உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒவ்வொரு வருடமும் ஏசர் ஃபாஸ்டர் அவார்ட்ஸ் விருது வழங்கும் நிகழ்ச்சி மேம்பாடு அடைந்து கொண்டே வருகிறது. இந்த வருடத்தில் சில புது, புது விருதுகள் வழங்கப்பட இருப்பதுதான் அதற்கு சாட்சி ஆகும். இத்தகைய விருது வழங்கும் அமைப்புடன் நம் டிரைவ்ஸ்பார்க் குழு அங்கமாக இருப்பது பெரிமிதம் அளிக்கிறது.

More from DriveSpark

Article Published On: Friday, February 28, 2025, 21:28 [IST]
English summary
Acer faster awards 2025 completed awards distribution ceremony in march
மேலும்... #auto show #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X