வெயிட்டிங்கே வெறியாகுது! பதட்டத்துல நகத்தை கடிச்சிட்டிருக்காங்க! எந்த கார், பைக்குக்கு விருது கிடைக்கும்?

ஏசர் ஃபாஸ்டர் விருதுகள் 2025 இன்று அறிவிக்கப்படவுள்ளன. கடந்த 2024ம் ஆண்டு வெளியான கார் மற்றும் பைக்குகளை ஜூரிக்கள் ஆய்வு செய்து இந்த விருதுகள் வழங்கப்படுகிறது. கடந்த மாதமே இந்த விருதுக்கான சோதனைகள் எல்லாம் முடிந்த நிலையில் தற்போது விருது அறிவிப்பு நிகழவுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஆட்டோமொபைல் உலகின் தலைசிறந்த வாகனங்களை மக்களுக்கு எடுத்து காட்டுவதற்காக கடந்த சில ஆண்டுகளாக ஏசர் ஃபாஸ்டர் என்ற விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது..ஃபாஸ்டர் (FASTER) என்பதற்கு -Federation of Auto Scribes of the Electronic Realm என்பது விரிவாக்கம் ஆகும். இந்த விருதுகள், இந்தியாவில் ஆட்டோமொபைல்களுக்காக பிரத்தியேகமாக செயல்பட்டு வரும் மீடியாக்கள் இணைந்து வழங்கும் விருதுகள் ஆகும். இந்த குழுவில் டிரைவ்ஸ்பார்க், கார் பிளாக் இந்தியா, காடி வாடி, கியர் ஃபிளிக், மோட்டோராய்ட்ஸ், பைலட் ஆன் வீல்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்துள்ளது.

acer faster awards

இந்த ஆட்டோமொபைல் மீடியாக்கள் இணந்து இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம் உள்ளிட்ட மொழிகள் சேர்த்து மொத்தம் 2.5 கோடி மக்களை சென்றடைகிறது. இதனால் இந்த விருதுகள் குறித்த தகவல் கோடிக்கணக்கான மக்களை சென்றடையும் என்பதால் மிக முக்கிய விருதுகளாக பார்க்கப்படுகிறது. ஏசர் ஃபாஸ்டர் விருதுகள் 2025க்கான சோதனை கடந்த பிப்ரவரி மாதம் நடந்தது.

இந்த விருதுக்கான ஜூரிகளாக மோட்டோராய்ட்ஸ் தளத்தின் எடிட்டர் அமித் சங்கானி, கியர் ஃபிலிக் எடிட்டர் நரேந்திர ஷர்மா, கார் பிளாக் இந்தியா தளத்தின் எடிட்டர் ரோஹித் குரானா, காடி வாடி தளத்தின் எடிட்டர் கவ்ரவ் யாதவ், பைலட் ஆன் வீல்ஸ் எடிட்டர் ரோஷன் ஜோசப், டிரைவ்ஸ்பார்க் தளத்தின் ரிவியூ எடிட்டர் புரோமீத் கோஷ், ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இவர்கள் கடந்த 2024ம் காலண்டர் ஆண்டில் வெளியான கார்களை எல்லாம் விருதுக்காக சோதனை செய்தனர்.

acer faster awards

இந்த விருதுக்கான சோதனையின் வாகனத்தின் வடிவமைப்பு, ஃபெர்பார்மென்ஸ், தொழிற்நுட்பம், பாதுகாப்பு, கொடுக்கும் காசுக்கு எவ்வளவு ஒர்த் என்பதை எல்லாம் கணக்கிட்டு புள்ளிகள் வழங்கப்படுகிறது. மேலும் பல்வேறு துணை கேட்டரிகளை எல்லாம் உருவாக்காமல் மக்களுக்கு எளிமையாக புரியும் வகையில் சிறந்த வாகனத்தை அவர்கள் அடையாளம் காணும் வகையில் முக்கிய செக்மெண்ட்களில் மட்டுமே விருதுகள் வழங்கப்படுகிறது.

இந்த விருதில் கார் ஆஃப் தி இயர் (Car of the Year), பைக் ஆஃப் தி இயர் (Bike of the Year), பிரிமியர் கார் ஆஃப் தி இயர் (Premium Car of the Year), பிரிமியம் பைக் ஆஃப் தி இயர் (Premium Bike of the Year), மற்றும் ஸ்கூட்டர் ஆப் தி இயர் (Scooter of the Year) ஆகிய விருதுகள் வழங்கப்படவுள்ளது.

acer faster awards

இது போக வளர்ந்து வரும் எலெக்ட்ரிக் வாகன உலகிற்கு பங்களிக்கும் வகையில் இவி 4 வீலர் ஆஃப் தி இயர்(EV Four-Wheeler of the Year) மற்றும் இவி 2-வீலர் ஆஃப் தி இயர் (EV Two-Wheeler of the Year) ஆகிய விருதுகள் வழங்கப்படவுள்ளது. இது போக அப்டேட் ஆஃப் தி இயர் (Update of the Year) என்ற பெயரில் 2024ம் ஆண்டில் வெளியான முக்கியமான அப்டேட்டிற்கு விருது வழங்கப்படுகிறது. அடுத்ததாக அல்டிமேட் ஐகான் விருது (Ultimate Icon Award) தனித்துவமான கார்களுக்கு வழங்கப்படுகிறது.

இந்த ஃபாஸ்டர் விருது நிகழ்வில் ஏசர் நிறுவனம் தொடர்ந்து 3வது ஆண்டாக முக்கிய ஸ்பான்ஸராக இணைந்துள்ளது. மேலும் இந்த விருதுக்கான சோதனை மற்றும் மதிப்பெண் குறித்த தகவல்களை கையாளும் பார்ட்னராக ஸென் மைக்ரோ சிஸ்டம்ஸ் நிறுவனம் இணைந்துள்ளது. இந்த விருதுக்கா சோதனையில் வெளிப்படை தன்மையை பராமரிக்க தகவல்கள் எல்லாம் மார்கெட்ஸ் &மார்கெட்ஸ் மூலம் கண்காணிக்கப்படுகிறது. இது போக கார்வேர் ஹைடெக் ஃபிலிம்ஸ், ரெட் புல் ஆகிய நிறுவனங்களும் இந்த நிகழ்விற்கு ஸ்பான்ஸர்களாக இணைந்துள்ளனர்.

இந்த விருது அறிவிப்புகள் இன்று மாலை வெளியாகவுள்ளன.டில்லி அருகே உள்ள குர்கிராம் பகுதியில் இந்த நிகழ்ச்சிகள் நடக்கிறது.மாலை 6.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடக்கிறது. இதில் பல்வேறு வாகன தயாரிப்பு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். இதில் விருது பெரும் வாகனங்கள் குறித்த ஆவல் உங்களை போலவே எங்களுக்கும் இருக்கிறது. இந்த அறிவிப்புகள் வெளியாகும் வரை காத்திருப்போம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 26, 2025, 10:04 [IST]
English summary
Acer faster awards 2025 to be announced today details
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X