சென்னையில் துவங்கும் கோலாகலம்! நம்ம டிரைவ்ஸ்பார்க் குழு களத்தில் இருக்கும் - எந்தெந்த கார்களுக்கு விருது?

ஏசர் ஃபாஸ்டர் விருதுகள் (Acer FASTER Awards)-இன் 4வது எடிசன் நாளை (பிப்.26) சென்னையில் துவங்கவுள்ளது. சென்னையில் சிறப்புமிக்க மெட்ராஸ் மோட்டார் ரேஸ் டிராக் (MMRT)-இல் பிப்.26 மற்றும் 27 என 2 நாட்களுக்கு நடைபெறவுள்ள இந்த விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில், கடந்த ஆண்டில் மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்ட வாகனங்களில் சிறந்தவைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்படும். இதற்கான நடுவர்கள் குழுவில் வழக்கம்போல் நமது டிரைவ்ஸ்பார்க் (Drivespark)-ஐ சேர்ந்தவரும் அங்கம் வகிக்க உள்ளார். இந்த நிகழ்ச்சி தொடர்பான கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

ஆட்டோமொபைல் வாகனங்களின் விற்பனையை எப்போதும் அதிகமாகவே வைத்திருக்க அவ்வப்போது ஏதேனும் கண்காட்சிகள் அல்லது இவ்வாறான விருது வழங்கும் நிகழ்ச்சிகளை நடத்துவது அவசியம். அந்த வகையில், கடந்த 3 ஆண்டுகளாக ஏசர் ஃபாஸ்டர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டுவரும் நிலையில், இந்த வருடம் 4வது முறையாக இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

acer faster awards 2025

கடந்த எடிசன்களை போலவே இந்த எடிசனிலும் கடந்த காலண்டர் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டு கஸ்டமர்கள் மத்தியில் வெற்றி பெற்ற கார் மற்றும் பைக்குகளுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன. இதற்காக பல்வேறு பிரிவுகளில் வாகனங்கள் வகைப்படுத்தப்பட்டு உள்ளன. விருதுகளை பெறுவதற்கு தகுதியான கார் & பைக்குகள் முதல் நாளில் அறிவிக்கப்படும்.

அதன்பின், அவற்றுள் விருதை பெறும் கார் & பைக்குகள் 2வது நாளில் அறிவிக்கப்படுவது வழக்கம். இவ்வாறு விருதுகளுக்கான கார் & பைக்குகளை தீர்மானிக்கும் நடுவர் குழுவில் நமது டிரைவ்ஸ்பார்க் குழுவை சேர்ந்த எடிட்டர் புரோமித் கோஷ் (Promeet Ghosh) கலந்துக் கொள்ள உள்ளார். இவருடன் சேர்த்து, மேலும் 5 நடுவர்கள் என மொத்தம் 6 பேர் இந்த நடுவர் குழுவில் இடம்பெற்றுள்ளன.

acer faster awards 2025

ஃபாஸ்டர் குழுவில் இடம்பெற்றுள்ள நமது டிரைவ்ஸ்பார்க் உள்பட 6 இந்தியன் ஆட்டோமொபைல் மீடியா தளங்கள் ஒட்டுமொத்தமாக சுமார் 25 கோடிக்கும் அதிகமான பயன்பாட்டாளர்களை ஆங்கிலம், தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என 6 வெவ்வேறு விதமான மொழிகளில் பெற்றுள்ளன.

ஏசர் ஃபாஸ்டர் விருதுகளை தீர்மானிக்கும் தரவுகளை ஆய்வு செய்யும் நிறுவனமாக ஜென் மைக்ரோசிஸ்டம்ஸ் (Zen Microsystems) இணைந்துள்ளது. மேலும், இந்த தீர்வுகளை கண்காணிப்பதற்கு மார்க்கெட்ஸ் & மார்க்கெட்ஸ் என்கிற தன்னிச்சையாக செயல்படக்கூடிய நிறுவனம் உள்ளது. மெட்ராஸ் மோட்டார் ரேஸ் டிராக்கை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இது இந்தியாவின் முக்கியமான மோட்டார்ஸ்போர்ட்ஸ் மையங்களுள் ஒன்றாகும்.

acer faster awards 2025

1980களின் இறுதியில் கட்ட துவங்கப்பட்ட மெட்ராஸ் மோட்டார் ரேஸ் டிராக் 1990இல் திறக்கப்பட்டது. இந்த பந்தய களத்தில் 2 விதமான பந்தய சுற்றுக்கள் உள்ளன. ஒன்று, நீளமான சுற்று 12 வளைவுகள் மற்றும் 3 நேர் பாதைகள் உடன் 3.71கிமீ நீளம் கொண்டதாகவும், மற்றொரு சிறிய பந்தய சுற்று 7 வளைவுகள் உடன் 2.06கிமீ நீளம் கொண்டதாகவும் உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மோட்டார்ஸ்போர்ட்ஸ் மேம்பட முக்கியமான காரணமாக விளங்கும் மெட்ராஸ் மோட்டார் ரேஸ் டிராக்கில் ஏசர் ஃபாஸ்டர் விருது 2025 நிகழ்ச்சி நடைபெற இருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்த நிகழ்ச்சியில், நமது டிரைவ்ஸ்பார்க் குழுவின் ஆலோசனைகள் உடன் என்ன மாதிரியான முடிவுகள் எடுக்கப்பட உள்ளன என்பதை அறிய தொடர்ந்து எங்களுடன் இணைப்பில் இருங்கள்.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 25, 2025, 21:22 [IST]
English summary
Acer faster awards 2025 will be held at madras motor race track
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X