அந்த ஹிட்டான படத்தில் நடித்தவர் தான இவரு? மாருதி மூலமாக எவ்வளவு சம்பாதிக்க போறாரோ!!
மாருதி சுஸுகி (Maruti Suzuki), இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனம். ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கிலான கார்களை விற்பனை செய்யும் பிரம்மாண்டமான நிறுவனமாக விளங்குகிறது. இதனாலேயே மாருதி சுஸுகியின் வணிகம் எல்லாம் இண்டர்நேஷ்னல் லெவலில் இருப்பது வழக்கம். தற்போதுகூட, தனது பிரபலமான கார் ஒன்றிற்கு பிராண்ட் தூதராக பிரபலமான பாலிவுட் நடிகர் (Bollywood Actor) ஒருவரை நியமித்து ஆச்சிரியப்படுத்தி உள்ளது. யார் அவர் என்பதையும், எந்த மாருதி காருக்கு அவர் பிராண்ட் தூதர் என்பதை பற்றியும் இனி தொடர்ந்து பார்க்கலாம்.
மாருதி சுஸுகியின் தொடர் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக, அதன் புது புது மாடர்ன் கார்களை சொல்லலாம். அந்த வகையில், சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட லேட்டஸ்ட் மாருதி கார்களுள் ஒன்று, பிரெஸ்ஸா (Brezza) ஆகும். இந்த காருக்கு தான் தற்போது பாலிவுட் நடிகர் ஒருவர் பிராண்ட் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்பு விற்பனையில் இருந்த 'விட்டாரா பிரெஸ்ஸா' காருக்கு மாற்றாக 2022ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட பிரெஸ்ஸா காருக்கு மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் எஸ்யூவி கார்களுள் பிரெஸ்ஸாவும் ஒன்றாகும். இருப்பினும், பிரெஸ்ஸாவை மேலும் விளம்பரப்படுத்தும் விதமாக அதற்கு பிரபலமான நடிகரை பிராண்ட் தூதராக மாருதி சுஸுகி நியமித்துள்ளது.
அவர் வேறு யாருமில்லை, பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆர்யன் (Kartik Aaryan) ஆவார். மத்திய பிரதேசத்தின் குவாலியர் பகுதியில் பிறந்தவரான நடிகர் கார்த்திக் ஆர்யன், 2011ஆம் ஆண்டில் 'பியார் கா பஞ்ச்னமா' என்கிற இந்தி படத்தின் மூலமாக சினிமாவில் நடிகராக அறிமுகமாகினார். முதல் படமே பயங்கர ஹிட். பார்க்க மிகவும் ஹேண்ட்சமாக இருப்பதால் பெண் ரசிகைகள் அதிகமாகினர்.

அதன்பின் சொல்லவா வேண்டும்... பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. இவரது நடிப்பில் 2018இல் வெளியான 'சோனு கே டிடு ஸ்வீட்டி', 2022 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் வெளிவந்த 'பூல் புலையா' 2ஆம் மற்றும் 3ஆம் பாக திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் வெகுவாக கவனத்தை பெற்றன. குறிப்பாக, கடந்த 2024ஆம் ஆண்டில் வெளிவந்த பூல் புலையா-3 திரைப்படம் ரூ.450 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டி, 2024இல் அதிகம் வசூலித்த இந்தி திரைப்படங்களுள் ஒன்றாக விளங்குகிறது.
இவ்வாறு, பாலிவுட்டில் முன்னணி நடிகராக வேகமாக வளர்ந்துவரும் நடிகரை தான் மாருதி சுஸுகி நிறுவனம் அதன் பிரெஸ்ஸா எஸ்யூவி காருக்கான பிராண்ட் தூதராக நியமித்துள்ளது. மேலும், பிரெஸ்ஸா காருக்காக 'உங்களது ஆட்டத்திற்கு கூடுதல் ஆற்றல்' (More Power To Your Play) என்கிற செயல்திட்டத்தையும் அறிமுகம் செய்துள்ள மாருதி சுஸுகி நிறுவனம், அந்த திட்டத்தின் ஒருபகுதியாகவே நடிகர் கார்த்திக் ஆர்யனை பிராண்ட் தூதராக நியமித்துள்ளது.

பிரெஸ்ஸா காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இது மாருதி சுஸுகியின் சப்-4 மீட்டர் காம்பெக்ட் எஸ்யூவி கார் ஆகும். அதாவது, இதன் நீளம் 4 மீட்டர்களுக்கும் குறைவாகும். இதில் 1.5 லிட்டர் கே-சீரிஸ் பெட்ரோல் என்ஜின் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்படுகிறது. மேலும், மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் இந்த மாருதி கார் கிடைக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆர்யன் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரின் பிராண்ட் தூதராக நியமிக்கப்பட்டுள்ளதால், இனி வரும் பிரெஸ்ஸா காரின் விளம்பர வீடியோக்களிலும், போஸ்டர்களிலும் கார்த்திக் ஆர்யனை பார்க்க முடியும். வாடிக்கையாளர்களை ஈர்க்க, குறிப்பாக இளம் தலைமுறையினரை பிரெஸ்ஸா கார் வாங்க வைக்க மாருதி சுஸுகியின் இந்த யுக்தி பலனளிக்கக் கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications









