சிம்புக்கு பரிசாக கொடுத்த கார் இது! "ராக்கி பாய்" இறங்கி வந்த கார்ல இவ்வளவு விஷயம் இருக்குதா?
கன்னட சினிமாவில் நடித்து இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த நடிகர் யஷ். இவர் நடித்த கேஜிஎஃப் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற நிலையில் அதன் இரண்டாம் பாகமும் வந்து பெரும் வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் 3ம் பாகத்தை எடுக்கப்போவதாக இன்று அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இந்த படத்தில் ஹீரோவாக நடித்த யஷ் தனது மனைவியுடன் காஸ்ட்லியான காரில் வந்திறங்கிய வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.
கன்னட சினிமாவில் ஹீரோவாக நடித்து வருபவர் யஷ். இவர் பொது வெளியில் வந்தாலே கூட்டம் கூடும் வகையில் இவர் பிரபலமாக இருக்கிறார். இவர் இயர் பெயரை விட திரைப்படத்தில் இவரது கதாபாத்திரத்தின் பெயரான "ராக்கி பாய்" என்ற பெயர் தான் மக்கள் மத்தியில் பிரபலமான பெயராக இருக்கிறது. இந்நிலையில் இவர் சமீபத்தில் காஸ்ட்லியான கார் ஒன்றில் தனது மனைவியுடன் வந்த வீடியோ வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

இந்த வீடியோ ஒரு ஏர்போர்ட்டில் எடுக்கப்பட்ட வீடியோவாக இருக்கிறது. இந்த வீடியோ ஒரு காஸ்ட்லியான கார் இருக்கிறது. அந்த காரிலிருந்து நடிகர் யஷ் இறங்கி வருகிறார். வீடியோவில் தெரியாத மற்றொரு பகுதி வழியாக அவரது மனைவி ராதிகா ஏற்கனவே இறங்கியுள்ளார். யஷ் காரிலிருந்து இறங்கி ஏர்போர்ட் உள்ளே நுழைகிறார். இவர் காரிலிருந்து இறங்குவதை அங்கிருந்த வீடியோ மற்றும் போட்டோ கிராபர்கள் புகைப்படம் எடுப்பதை அறிந்து அவர்களுக்கு கை அசைத்துவிட்டு செல்கிறார். இவர் வந்திறங்கிய கார் தற்போது வைரலாக பேசப்படுகிறது.
டொயோட்டா நிறுவனத்தின் வில்ஃபயர் காரை பொருத்தவரை இந்திய மார்கெட்டில் 2 விதமான வேரியன்ட்களில் விற்பனையாகிறது. ஹை மற்றம் விஐபி எக்ஸிக்யூட்டிவ் லாஞ்ச் ஆகிய வேரியன்ட்கள் விற்பனையாகி வருகிறது. இதன் விலையை பொருத்தவரை முறையே ரூ1.39 மற்றும் ரூ1.51 கோடி என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் விற்பனையாகிறது. அதிக விலை காரணமாக இந்த காரை பெரும் பணக்காரர்கள், சினிமா, அரசியல் பிரபலங்கள் தான் இந்த கார்களை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த கார் ஒரு மைல்டு ஹைபிரிட் ரக கார் ஆகும். ஒரே நேரத்தில் பெட்ரோல் மற்றும் எலெக்ட்ரிக் ஆகிய 2 விதத்திலும் இயங்கும் திறன் கொண்டது. இந்த கார் வழக்கமான காஸ்ட்லியான சொகுசு கார்கள் போல் குறைவான மைலேஜை எல்லாம் கொடுக்காது லிட்டருகஅக 19.28 கி.மீ மைலேஜை வழங்குகிறது. இதுவும் பிரபல்கள் இந்த காரை தேர்வு செய்ய மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக இருக்கிறது.
இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை 2487 சிசி ஹைபிரிட் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது சிவிடி கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் 7 பேர் வரை ஒன்றாக பயணம் செய்ய முடியும். இந்த காரின் சிறப்பம்சமே இதன் வடிவமைப்பு தான். இந்த கார் குரோம் ஹைலைட் உடன் டாப் பில்டு குவாலிட்டியில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த காரில் அதிக இடவசதி கொண்ட கேபின் முக்கிய ஈர்ப்பு அம்சமாக இருக்கிறது. இந்த காரின் மூன்றாவது வரிசை சீட்டிலும் அதிக இட வசதி இருக்கிறது.

இந்த கார் சமூகத்தில் அதன் உரிமையாளருக்கு பெரும்பணக்காரர் என்ற அந்தஸ்தையும். கவனத்தையும் ஈர்க்கும். இதன் காரணமாவே பலர் இதை வாங்கி வருகின்றனர். மேலும் அவர்களுக்கு தேவையான வசதிகளும் காரில் இருக்கிறது. அதிக நபர்கள் பயணிக்க முடியும். இதனால் அவர்கள் இந்த கார்களை அதிகம் தேர்வு செய்து வருகின்றனர். இது போக காரின் ஃபெர்பார்மென்ஸூம் சிறப்பாக இருக்கும். வெந்துதனிந்தது காடு திரைப்படத்திற்காக நடிகர் சிம்புவிற்கு அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் இந்த காரை தான் பரிசளித்திருந்தார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடிகர் யஷ் போன்ற பிரபலங்கள் இந்த காரை பயன்படுத்துவது ஆச்சரியப்பட ஒன்றும் இல்லாத விஷயம் தான். ஆனால் இந்த மாதிரியான கார்களை எல்லாம் இப்படியான பிரபலங்கள் பயன்படுத்தி தான் பார்க்க முடியும். இந்த கார் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications









