ஃபேமிலியா ஒரே கார்ல எல்லாரும் போகலாம்! விலை ரொம்ப கம்மி!
இந்தியாவில் குடும்பத்துடன் பயணிக்கும் ரக கார்கள் விற்பனை அதிகமாக இருக்கிறது. அதிக எண்ணிக்கையிலான சீட்டர் கொண்ட வாகனங்களுக்கு குடும்பத்தினர்கள் அதிகம் விரும்பம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் இந்திய மார்கெட்டில் பல்வேறு வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இந்த ரக கார்களை விற்பனை செய்து வருகின்றனர். இப்படியாக குறைந்த விலையில் இந்திய மார்கெட்டில் விற்பனையாகும் கார்கள் குறித்த விபரங்களை காணலாம்.
3 வரிசை சீட்டர் கொண்ட பல கார்கள் ரூ15 லட்சத்திற்கும் குறைவான விலையில் விற்பனையாகி வருகிறது. இப்படியாக குறைந்த விலையில் விற்பனையாகும் 10 கார்களை பார்ப்போம். இதில் எஸ்யூவி, எம்பிவி, உள்ளிட்ட கார்கள் இருக்கிறது. இந்த கார்களில் குடும்பத்தினருக்கு தேவையான அதிக இட வசதி உள்ளிட்ட பல வசதிகள் இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ரெனால்ட் டிரைவர் கார் இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது இ்நத கார் மார்கெட்டில் ரூ6.1 லட்சம் முதல் ரூ8.74 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த காரில் இரண்டாம் வரிசை சீட்டில் 60:40 என்ற கணக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் 3வது வரிசை சீட்டர் சற்று சிறியதாக இருக்கும். சிறுவர்கள் தாராளமாக அமரலாம். ஒரு வேலை 3வது வரிசை சீட்டர் தேவையில்லை என்றால் சீட்டை மடித்து அதிக இடவசதியை ஏற்படுத்திக்கொள்ள முடியும்.
இது போக இந்த காரில் பி பில்லர் பகுதியிலும், ரூஃப் மவுண்ட்டட் ஏசி வென்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. மிடில் மற்றும் கடைசி வரிசை சீட்களில் உள்ள பயணிகளுக்க நல்ல ஏசி வசதி வேண்டும் என்பதற்காக இது வழங்கப்பட்டுள்ளது. இந்தியா போன்ற அதிக வெப்பம் நிறைந்த நாட்டில் இந்த வசதி மிக முக்கியமான தேவையாக இருக்கிறது.

மாருதி நிறுவனத்தின் எர்டிகா கார் இந்த செக்மெண்டில் சிறப்பாக விற்பனையாகி வவரும் காராக இருக்கிறது. இந்த காரில் முன்பக்க சீட்டுகள் பெரியதாகவும் செளகரியமாகவும் இருக்கும். இரண்டாவது வரிசை சீட்டில் அதிக கால் வைக்கம் வசதி கொண்டதாகவும் சாய் வசதியுடன் கூடயிதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது வரிசை சீட்டில் இருப்பவர்களுக்கு பெரிய ஜன்னல் ஆகிய செட்டப் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த காரில் அதிகமான தலைக்கும மேல் இட வசதி, பக்கவாட்டு பகுதியிலும் போதுனமான இட வசதி, நீண்ட தூரம் கார் ஓட்டும் போது சோர்வு தெரியாமல் இருக்கும் வகையில் இடவசதி, காலை வைக்க போதுான வசதி உள்ளிட்ட அம்சங்கள் இந்த காரில் இருக்கிறது. இந்த காரின் விலையை பொருத்தவரை ரூ8.84 லட்சம் முதல் ரூ13.13 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.

இந்த காரின் விலையை பொருத்தவரை ரூ9.80 லட்சம் முதல் ரூ10.91 லட்சம் என்ற விலையில் விற்பனயைாகி வருகிறது. வரும் 2027ம் ஆண்டு இந்த கார் அப்டேட் செய்யப்பட வாய்ப்புள்ளது. இந்த கார் விலை குறைவாக இருப்பதாலும் இந்த காருக்க சமூகத்தில் ஒரு நல்ல பெயர் இருப்பதாலும் பலர் இந்த காரை விரும்பி வாங்கி வருகின்றனர். ஆஃப்ரோடு பயன்பாட்டிற்காக பலர் இந்த காரை தேர்வு செய்கிறார்கள்.

இந்த காரில் உட்புற இடவசதி சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் காரில் அமர்ந்திருக்கும் பயணிக்கு போதுமான அளவில் தலை மற்றும் கால் பகுதிகளுக்கு போதுமான இட வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்த காரிலும் கடைசி வரிசை சீட்டை மடக்கிக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. இதனால் அதிக லக்கேஜ்களை எடுத்துச் செல்ல முடியும். இந்த காரின் விலையை பொருத்தவரை ரூ9.95 லட்சம் முதல் ரூ12.16 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.
அடுத்ததாக டொயோட்டா நிறுவனத்தின் ரூமியான் கார் இருக்கிறது. இது மாருதி எர்டிகா காரின் டொயோட்டோவின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும். இந்த காரின் வடிவமைப்பும் எர்டிகா கார் போல தான் இருக்கிறது. இந்த காரில் 3 வசை சீட்டும் சிறப்பான இட வசதியுடன் இருகு்கிறது. இ்நத காரின் டிசைன் மற்றும் லே அவுட் ஆகியவை பேட்ஜ் கல் ஸ்கீமில் வடிமவைக்கப்பட்டுள்ளது.
இந்த காரில் அதிக ஸ்டோரேஜ் கம்பார்ட்மென்ட், அதிகரிக்கப்பட்ட பிராக்கிடிக்காலிட்டி, எர்டிகா காரை விட பலர் இந்த காரை விரும்புகின்றனர். இந்த காரின் விலையை பொருத்தவரை மார்கெட்டில் ரூ10.54 லட்சம் முதல் ரூ13.83 லட்சம் என்ற விலையில் விற்பனையகி வருகிறது. இ்நத காரின் இன்ஜினை பொருத்தவரை 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் இருக்கிறது. இது 103 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
அடுத்தாக கியா நிறுவனத்தின் கேரன்ஸ் கார் இருக்கிறது. இந்த கார் மார்கெட்டில் ரூ10.60 லட்சம் முதல் ரூ19.70 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த காரில் மொத்தம் 3 விதமான இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. அதன்படி இந்த காரில் 115 எச்பி பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்ப்டடுள்ளது. 160 எச்பி பவரை வெளிப்படுத்தும் 1.5 டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனாகவும், 116 எச்பி பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது.
இந்த காரில் சீட்டுகள் வசதியாக வழங்கப்பட்டுள்ளது. பிராக்டிக்கல் அம்சங்கள் சிறப்பாக வழங்கப்பட்டுள்ளது. முன்பக்க சீட்டின் அடியில் ஸ்டோரேஜ் வசதி செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது வரிசை சீட்டில் 60:40 என்ற வகையில் சீட் பிரிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது வரிசை சீட்டை மடிக்க எலெக்ட்ரிக் பட்டன் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரில் 6 அடி உயரம் உள்ள பயணிகள் சிறப்பாக பயணிக்க முடியும்.
அடுத்ததாக இந்த இடத்தில் சிட்ரோன் நிறுவனத்தின் ஏர்கிராஸ் கார் இருக்கிறது. இந்த கார் மார்கெட்டில் ரூ12.64 லட்சம் முதல் ரூ14.35 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த காில் மொத்தம் 2 விதமான இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. இந்த காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் இருக்கிறது. 82 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆப்ஷனாக 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 110 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
அடுத்த மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் கார் இருக்கிறது. இந்த கார் ரூ13.62 லட்சம் முதல் ரூ17.50 லட்சம் எ்னற விலையில் விற்பனையாகி வருகிறது. இ்நத காரின் இன்ஜின் ஆப்ஷனை பொருத்தவரை 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன் தான் இருக்கிறது. இந்த காரின் இன்ஜின் 130 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
அடுத்த மஹிந்திரா நிறுவனத்தின் காராக ஸ்கார்பியோ என் கார் இருக்கிறது. இந்த கார் மார்கெட்டில் ரூ14 லட்சம் முதல் ரூ24.90 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த காரில் 2 விதமான இன்ஜின் ஆப்ஷன்கள் இருக்கிறது. இந்த காரில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் ஆப்ஷன் இருக்கிறது. இது 203 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன் இருக்கிறது. இது 132 எச்பி முதல் 175 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
கடைசியாக மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி 700 கார் இருக்கிறது. இந்த கார் இந்திய மார்கெட்டில் ரூ14.50 லட்சம் முதல் ரூ25.90 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த காரில் மொத்தம் 2 விதமான இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. இந்த காரில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 200 எச்பி பவரை வெளிப்படுத்துகிறது. அடுத்த ஆப்ஷனாக 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன் இருக்கிறது. இந்த இன்ஜின் 155 எச்பி பவர் மற்றும் 185 எச்பி பவரை வெளிப்படுத்துகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் குடும்பத்தினருடன் பயணிக்க ஏற்ற கார்கள் சிறப்பாக விற்பனையாகி வருகிறது. அதற்கு ஏற்றார் போல குறைந்த விலையில் பல கார்கள் மார்கெட்டில் விற்பனையாகி வருகிறது. புதிய கார் வாங்கும் என்னத்தில் இருப்பவர்களுக்கு இந்த பட்டியலில் உள்ள கார்கள் நிச்சயம் உதவியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications









