மின்சார அவதாரத்தில் மட்டுமல்ல 100 சதவீதம் ஃப்ளெக்ஸ் ஃப்யூவலில் இயங்கும் காராகவும் தயாராகியிருக்கு கிரெட்டா..
ஹூண்டாய் (Hyundai) நிறுவனம் அதன் புகழ்பெற்ற கிரெட்டா (Creta) கார் மாடலின் ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் (Flex Fuel) பவர்டு வெர்ஷனை இந்தியாவில் காட்சிப்படுத்தி இருக்கின்றது. டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 (Bharat Mobility Global Expo 2025) வாயிலாகவே இந்த காரை ஹூண்டாய் நிறுவனம் வெளியீடு செய்திருக்கின்றது.
இந்த ஆட்டோ எக்ஸ்போ வாயிலாகவே ஹூண்டாய் நிறுவனம் கிரெட்டாவின் எலெக்ட்ரிக் (Creta Electric) வெர்ஷனையும் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதை அடுத்து தற்போது இதே கிரெட்டா கார் மாடலின் ஃப்ளெக்ஸ் ஃப்யூவலில் இயங்கும் வெர்ஷனையும் அது காட்சிப்படுத்தி இருக்கின்றது. நூறு சதவீத எத்தனாலில் இயங்கும் திறன் கொண்டதே கிரெட்டா ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் ஆகும்.

இந்த வகை ஃப்யூவல் இன்னும் இந்தியாவில் முழுமையாக பயன்பாட்டிற்கு வரவில்லை. அதேவேளையில், அரசு இந்த எரிபொருளில் இயங்கும் வாகனங்களை ஊக்குவிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றது. இதன் அடிப்படையிலேயே முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்கள் ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் பவர்டு வாகனங்களை தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
மேலும், கடந்த நாட்களில் இதுபோன்று இன்னும் பல ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் வாகனங்கள் இந்தியாவில் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கின்றன. பெட்ரோல், டீசலைக் காட்டிலும் ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் உற்பத்திக்கு மிகவும் குறைவான செலவை ஆகும். விவசாய கழிவுகளில் இருந்தே எத்தனால் உற்பத்தி செய்யப்படுகின்றது. இதனால்தான் இதன் உற்பத்தி செலவு மிக குறைவாக உள்ளது.
எனவேதான் இதை பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதில் அரசு மிக தீவிரமாகக் களமிறங்கி இருக்கின்றது. இந்த எரிபொருள் இப்போது தெற்கு அமெரிக்காவில் மட்டுமே பயன்பாட்டில் இருக்கின்றது என்பது இங்கே கவனிக்கத்தகுந்தது. கிரெட்டா ப்ளெக்ஸ் ஃப்யூவலில் 1.0 லிட்டர் டர்போ ஜிடிஐ மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இந்த மோட்டார் அதிகபட்சமாக 120 எச்பி மற்றும் 172 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும். காட்சிப்படுத்தப்பட்ட கிரெட்டாவில் டிசிடி கியர்பாக்ஸே இடம் பெற்றிருந்தது. விற்பனைக்கு வரும்பட்சத்தில் இதில் பலதரப்பட்ட கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இது எப்போது விற்பனைக்கு வரும் என்கிற விபரங்கள் வெளியாகவில்லை.
இன்னும் ஒரு சில மாதங்களில் இது விற்பனைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வழக்கமான கிரெட்டாவிற்கும், ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் கிரெட்டாவிற்கும் இடையில் மிகப் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை என்பது இங்கே கவனிக்கத்தகுந்தது. சொல்லப்போனால் எஞ்சின் மற்றும் பேட்ஜ் ஆகியவற்றில் மட்டுமே மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியர்களின் பிரியமான கார் மாடலாக கிரெட்டா எஸ்யூவி இருக்கின்றது. இந்த கார் மாடலில் ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் வெர்ஷனை ஹூண்டாய் உருவாக்கி இருப்பது கிரெட்டா கார் காதலர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக அமைந்திருக்கின்றது. இதை எப்போது விற்பனைக்கு கொண்டு வருவார்கள் என்கிற தகவல் கிடைக்கவில்லை. இருப்பினும் அது கார் காதலர்களின் கவர தவறவில்லை.


Click it and Unblock the Notifications








