காவி கலர் ராசியில்ல போல! கருப்பு கலர் காரை வாங்கினாரா அஜித்? விலை எவ்வளவு தெரியுமா?
நடிகர் அஜித் குமார் தனது அஜித்குமார் ரேஸிங் அணிக்காக புதிய மெர்சிடீஸ் பென்ஸ் நிறவனத்தின் ரேஸ் காரை வாங்கியுள்ளார் என்ற தகவல் தற்போது சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த காரில் நடிகர் அஜித் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படத்தை அவரது மேனேஜர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருந்த நிலையில் இந்த பேச்சு எழுந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
நடிகர் அஜித் குமார் நடிப்பில் ஒரு பக்கம் கவனம் செலுத்தினாலும் மற்றொரு பக்கம் தனது ரேஸிங் ஆர்வத்திற்காக துவங்கப்பட்ட அஜித்குமார் ரேஸிங் அணிக்காகவும் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் அவரது அணி தற்போது பிரான்ஸ் நாட்டில் உள்ள ரிச்சர்ட் பால் சர்க்கயூட்டில் நடந்து வரும் மிச்சிலியன் 12எச் பால் ரிச்சர்ட் கார் பந்தைய போட்டியில் பங்கேற்று வருகிறது.

இந்த போட்டியின் இறுதி போட்டி நாளை தான் நடக்கிறது. தற்போது தகுதி சுற்றுகள் நடந்து வரும் நிலையில் நடிகர் அஜித்குமாரின் கார் ரேஸ் அணி 992 பிரிவில் 72 புள்ளிகளுடன் 3வது இடத்திலும், 992 ஏஎம் பிரிவில் 96 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் இருந்து வருகிறது. இந்த போட்டிக்கான தகுதி சுற்றுகள் இன்று நடக்கும். இந்திய நேரப்படி நாளை மதியம் இந்த போட்டிக்கான இறுதி சுற்றுகள் நடக்கவுள்ளது. இந்நிலையில் நடிகர் அஜித்குமார் மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனத்தின் கார் ஒன்றில் அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
எக்ஸ் தளத்தில் நடிகர் அஜித்குமாரின் மேனேஜர் சுரேஷ் சந்திரா இந்த புகைப்படங்களை வெளியிட்டு AMG GT3 - looking at a new beginning ?? என பதிவிட்டு கேள்வி குறியிடன் பதிவை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த பலர் நடிகர் அஜித்குமார் தனது ரேஸிங் அணிக்காக புதிதாக இந்த காரை வாங்கியுள்ளதாக பேசி வருகின்றனர். அதற்கு ஏற்றார் போல அவர் தற்போது பயன்படுத்தி வரும் போர்ஷே காருக்கு அருகில் இந்த கார் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் புகைப்படமும் அதில் இடம் பெற்றுள்ளது.

மெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி3 காரை பொருத்தவரை இது ரேஸ் பயன்பாட்டிற்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட கார். இந்த காரை பொது சாலைகளில் ஓட்ட அனுமதி கிடையாது. ரேஸ் டிராக்கி்ல மட்டுமே ஓட்ட வேண்டும். இந்த கார் சிறப்பான ஃபெர்பார்மென்ஸை வழங்கும் திறன் கெண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இ்த காரில் ஏஎம்ஜி 6.3 லிட்டர் வி8 பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 404 கிலோ வாட் பவரையும் 650 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது.இ்த கார் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 3 நொடியில் பிக்கப் செய்யும் திறன் கொண்டது.
இந்த இன்ஜினில் ரேஸிங் அம்சத்திற்காக 6 ஸ்பீடு ரேஸிங் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கார் பல்வேறு விதமான கஸ்டைமஷேஸன் ஆப்ஷன்களுடன் தயாரிக்கப்படுகிறது. இந்த காரை ரேஸ் பயன்பாட்டிற்காக வாங்குபவர்கள் அவர்கள் வசதிக்கு ஏற்ப இதை வடிவமைத்துக்கொள்ள முடியும். இந்த கார் ஒரு ரேஸ் கார் என்பதால் இந்த காரின் பிரேக் அம்சமும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு அட்ஜெஸ்ட்மென்ட்களை கேபிலிருந்தே செய்து கொள்ள முடியும்.

இந்த காரை நடிகர் அஜித்குமார் எனது ரேஸிங் அணிக்காக சொந்தமாக வாங்கிட்டாரா என்ற அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ள புகைப்படங்களை வைத்து பார்க்கும் போது நடிகர் அஜித்குமார் இந்த காரை வாங்கும் முடிவை எடுத்திருப்பதாகவே தெரிகிறது. இந்த காரை வாங்கிவிட்டால் அதற்கான அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும். இந்த கார் இந்திய மதிப்பில் குறைந்தபட்சம் ரூ4 கோடி என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகமாகும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடிகர் அஜித்குமார் சர்வதேச அளவில் இந்தியா அணியாக தனது அணியை பல போட்டிகளில் பங்கேற்க வைப்பதே மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்த போட்டிகளில் இவரது அணி சிறப்பாகவே செயல்படுகிறது. இந்த போட்டியில் இவர் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுமட்டுமல்ல ஏஎம்ஜி ஜிடி 3 காரை வாங்கினால் இவரது அணி மேலும் பலம் பெறும்.
Image Credits : Suresh Chandra Via X.com


Click it and Unblock the Notifications









