ஆல் இந்தியா பெர்மிட் வாகனங்களுக்கு ஆப்பு! இனி இதுல ஃபிராடு வேலையே பார்க்க முடியாது!

மத்திய சாலை போக்குவரத்துதுறை இந்தியா டூரிஸ்ட் வாகன பெர்மிட் சட்டம் 2023ல் புதிய மாற்றங்களை பார்த்து அறிவித்துள்ளது. இதன்படி ஒரு வாகனம் பதிவு செய்யப்பட்ட மாநிலத்திற்கு வெளியே எவ்வளவு நாம் இருக்கிறது என்பதை வாகன டிராக்கிங் சிஸ்டம் மூலம் கண்காணிக்கவும், பெர்மிட்களை 12 ஆண்டுகளில் இருந்து 15 ஆண்டுகளாக உயர்த்தும் திருத்தம் உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களை செய்து அறிவித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியவாில் இயங்கி வரும் டுரிஸ்ட் வாகனங்களுக்கான பெர்மிட் மத்திய அரசால் வழங்கப்படுகிறது இதில் சில மாற்றங்களை செய்துள்ளது. இதன் மூலம் இந்த பெர்மிட்டை தவறாக பயன்படுத்துபவர்களை கண்டறியவும், அதே நேரம் பயணிகளின் பாதுகாப்பை அதிகரிக்கவும் இந்த சட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்ட திருத்த்ததில் வாகனத்தை முழுமையாக டிராக்கிங் செய்யவும், பயணிகளின் பாதுகாப்பை உறுதிபடுத்தவும் இந்த திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

All india Permit Rules Change

இந்த திருத்தத்தின்படி ஒரு வாகனம் எங்கிருந்து தனது பணத்தை துவங்கிறதோ அங்கயே தனது பயணத்தை முடிக்க வேண்டும். தொடர்ந்து 45 நாட்களுக்கு மேல் அந்த வாகனம் மாநிலத்தை விட்டு வெளியே இருக்க கூடாது. இதை மாநில அரசுகள் முழுமையாக கண்காணிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு வாகனத்தின் சொந்த மாநிலத்திற்குள் அந்த வாகனம் எத்தனை நாள் வேண்டுமானாலும் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சொந்த மாநிலம் என்பது ஒரு வாகனம் எந்த மாநிலத்தில் ஆல் இந்தியா பெர்மிட் வாங்கியதோ அந்த மாநிலம் தான் சொந்தமாநிலமாக கருதப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அந்த வாகனத்தின் பதிவெண் எங்கு உள்ளதோ அதுவே சொந்தமாநிலம் ஆகும்.

All india Permit Rules Change

அதே நேரம் டூரிஸ்ட் வாகனங்கள் ஸ்டேஜ் கேரேஜ் வாகனங்களாக பயன்படுத்தவும் இந்த சட்டம் தடை விதிக்கிறது. இந்த வாகனங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் பயணிகளை பிக்கப் செய்து அவர்களை வேறு இடத்தில் டிராப் செய்து ஒவ்வொரு கட்டமாக பஸ், போல செயல்படுவது சட்டப்படி குற்றம் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த சட்டப்படி ஒவ்வொரு ஆல் இந்தியா பெர்மிட் வாகனங்களில் கட்டாயம் லோகேஷன் டிராக்கிங் கருவி பொருத்தப்பட வேண்டும். இது மட்டுமல்லாமல் எமர்ஜென்ஸி பட்டனையும் வாகனத்திற்குள் பொருத்த வேண்டும் என தெரிவித்துள்ளது. இப்படியாக இயங்கும் வாகனங்கள் சாலை விதிமுறைகளை மீறியதற்காக அபராதம் விதிக்கப்பட்டால் அந்த அபராதத்தை 30 நாளுக்கும் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

All india Permit Rules Change

இந்த வாகனங்கள் சுங்கசாவடிகளை கடந்து செல்லும் போது சுங்க கட்டணம் செலுத்த தவறினால் அவர்களுக்கு சுங்க சாவடி விதிமுறையின்படி பணம் கட்டாத பயனாளர் என்ற பெயரில் அவரது ஃபாஸ்ட்டேக் கார்டு முடக்கும் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனம் இது மட்டுமல்லாமல் புதிய டூரிஸ்ட் பெர்மிட் எடுக்கும் போதும், அதை புதுப்பிக்கும் போதும் சுங்ககட்டண பாக்கி இருந்தாலும், அபராத பாக்கி இருந்தாலும் அது முழுமையாக செலுத்தப்பட்டால் தான் பெர்மிட் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாமல் இந்த வாகனத்தை பயன்படுத்துபவர்கள் ஒவ்வொரு டிரப்பின் போதும், வாகனங்கள், தங்கள் கிளம்பும் பகுதி எந்தெந்த மாநிலத்திற்குள் செல்கிறார்கள். எப்பொழுது திரும்ப வருகிறார்கள் என விபரங்களை வாகன் தளத்தில் பதிவெற்றம் செய்ய வேண்டும். பதிவு செய்த பிறகு தான் பயணத்தை துவங்க வேண்டும். இந்த பதிவு பயணம் துவங்குவதற்க 24 மணி நேரத்திற்கு முன்னரே செய்ய வேண்டும். இந்த பயணத்தை சுங்கசாவடி பதிவு மூலம் அரசு கண்காணிக்கும். இந்த பதிவு குறிப்பிட்ட வாகனம் எந்த மாநிலத்தில் பதிவு செய்துள்ளதோ அங்கேயே தான் செய்யவேண்டும் என தெரிவித்துள்ளது.

இந்த பதிவின் போது பதிவு செய்பவரின் முகவரி, ஆதார் அல்லது ஜிஎஸ்டி, வாகனத்தின் தகுதி சான்று, இன்சூரன்ஸ், வரி காலாவதி, எத்தனை சீட்டர்/ ஸ்லீப்பர் அளவு உள்ளிட்ட விபரங்களை பதிவிட வேண்டும். இந்த விதிமுறைகள் கொண்டு வருவதற்கு முக்கியமா காரணம் சில மாநிலங்களில் சாலை வரிகள் குறைவாக இருக்கிறது. இதனால் அந்த மாநிலத்தில் வாகனத்தை பதிவு செய்து மற்ற மாநிலங்களில் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக நாகலாந்தில் டூரிஸ்ட் வாகன பதிவு அதிகமாக நடக்கிறது.

மாற்ற மாநிலங்களில் இந்த வாகனங்கள் அதிகம் பயன்பாட்டில் உள்ளன.இந்த முறைகேட்டை தடுக்கவே இந்த விதிமுறை அமலுமக்கு வந்துள்ளது. நாகலாந்து மாநிலத்தில் மட்டும் ஒரே ஆண்டில் 1.36 லட்சம் தேசிய பெர்மிட் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் கேரளாவில் 14573 வாகனங்களும், இமாச்சலில் 36,704 வாகனங்களும், தெலங்கனாவில் 44.044 வாகனங்களும், மத்திய பிரதேசத்தில் 50,501 வாகனங்களும், பஞ்சாப்பில் 79,614 வாகனங்களும், கர்நாடகாவில் 95,549 வாகனங்களும் பதிவு செய்யபப்பட்டுள்ளன.

கடந்த 2017 வரை நாகலாந்து அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்கள் தான் குறைவான சாலை வரி காரணமாக அதிக ஆல் இந்தியா பெர்மிட் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டன. கடந்த 2017ம் ஆண்டு அருணாசலப்பிரதேச மாநிலத்தில் அந்த மாநிலத்தில் பதிவு செய்து அங்கு இயங்காத வாகனங்களின் பதிவெண்ணை முழுமையாக கேன்சல் செய்ய முடிவு செய்தது. இதனால் அந்த மாநிலத்தில் வெறும் 293 பெர்மிட் மட்டுமே இந்தாண்டு வழங்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பல வாகனங்கள் டூரிஸ்ட் வாகனங்களாக பதிவு செய்து ஸ்டேஜ் கேரியர் வாகனங்களக இயங்கப்படுகின்றன. இதனால் அரசுக்கு ஏகப்பட்ட பணம் நஷ்டம் வெளிமாநில பதிவெண் கொண்ட வாகனங்கள் அதிகம் இயக்கப்பட்டு வந்தது. தற்போது இது முற்றிலுமாக மாறியுள்ளது. இதன் மூலம் மிகப்பெரிய பிரச்சனையை மத்திய அரசு முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 17, 2025, 11:40 [IST]
English summary
All india permit rules change vehicle age limit 45 day cap
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X