1000 கிமீ மைலேஜ் தரும் ஹூண்டாய் கார் விற்பனைக்கு தயார்.. இது மட்டும் இந்தியா வந்துச்சு மார்கெட் கதிகலங்கிரும்!
உலக புகழ்பெற்ற கார் உற்பத்தி நிறுவனமான ஹூண்டாய், அதன் பலிசேட் கார் மாடலை வெளியீடு செய்திருக்கின்றது. இது ஓர் ஹைபிரிட் தொழில்நுட்ப வசதிக் கொண்ட எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். நிறுவனத்தின் மிகப் பெரிய உருவம் கொண்ட எஸ்யூவி ரக கார் மாடலும் இதுவே ஆகும். இந்த கார் எரிபொருள் மற்றும் மின்சாரம் என இரண்டிலும் இயங்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. நியூயார்க் சர்வதேச வாகன கண்காட்சியில் வைத்த இந்தே காரை ஹூண்டாய் நிறுவனம் வெளியீடு செய்திருக்கின்றது. உலக சந்தையில் ஹூண்டாய் பலிசேட் கார் மாடலுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
இந்த வரவேற்பை தக்க வைத்துக் கொள்ளும் பொருட்டே தற்போது புதுப்பித்து இந்த காரை வெளியீடு செய்திருக்கின்றது. இந்த புதுப்பித்தல் பணி காருக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பை தக்க வைத்துக் கொள்ள மட்டுமல்ல, இரட்டிப்பாக்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அந்த அளவிற்கு அதிக கவர்ச்சியானதாகவும், அதிக ஆடம்பர அம்சங்களைத் தாங்கியதாகவும் மற்றும் அதிகம் மைலேஜை தரக் கூடியதாகவும் இதனை ஹூண்டாய் தயார் செய்திருக்கின்றது.
இதுமட்டுமல்ல இப்போது உலக சந்தையில் விற்பனையில் இருக்கும் பலிசேட்-டைக் காட்டிலும் சற்றே பெரிய உருவம் கொண்டதாகவும் இதனை ஹூண்டாய் தயார் செய்திருக்கின்றது. 2.5 இன்ச் அதிக நீளம் மற்றும் 2.7 இன்ச் அதிக வீல் ஆகியவற்றை இந்த காரில் வழங்கி இருக்கின்றனர். இத்துடனேயே கூடுதல் அலங்கரிப்பாக இந்த காரில் அழகிய எல்இடி லைட்டுகள், 21 அங்குல வீல்கள் உள்ளிட்டவற்றை இந்த காரில் வழங்கி இருக்கின்றனர்.
இதேபோல் காரின் உள்பக்கத்தையும் மிகப் பெரிய அளவில் ஹூண்டாய் அலங்கரித்திருக்கின்றது. மிக முக்கியமாக கேபினை அலங்கரிக்கும் விதமாக 12.3 அங்குல அளவில் இரண்டு திரைகளை அது வழங்கி இருக்கின்றது. இத்துடன், செல்போனை குளிர்ச்சியாக வைத்துக் கொண்டே சார்ஜ் செய்யும் வயர்லெஸ் சார்ஜர், 100W யுஎஸ்பி சி டைப் சார்ஜர் உள்ளிட்ட அம்சங்களையும் வழங்கி இருக்கின்றது.

அவை அனைத்தைக் காட்டிலும் பலரைக் கவரக் கூடிய ஓர் தகவலாக இந்த காரின் மைலேஜ் தரும் திறன் இருக்கின்றது. ஒரு முறை எரிபொருளை முழுமையாக நிரப்பினால் சுமார் 1,000 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. ஹைபிரிட் டெக்னாலஜியே பலிசேட் கார் மாடலின் இந்த அதீத மைலேஜ் திறனுக்கு முக்கிய காரணமாக இருக்கின்றது.
ஹூண்டாய் நிறுவனம் இந்த காரில் 3.5 லிட்டர் வி6 மற்றும் 2.5 லிட்டர் டர்போ ஆகிய மோட்டார் ஆப்ஷன்களையே இந்த காரில் வழங்க இருக்கின்றது. இதில், 2.5 லிட்டர் டர்போ மோட்டாருடனேயே புதிய ஹைபிரிட் தொழில்நுட்பத்தை ஹூண்டாய் வழங்க இருக்கின்றது. இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்களையும், இதற்கான சிறிய பேட்டரி பேக்கும் இதன்கீழ் இடம் பெற்றிருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த வசதியைக் கொண்டிருக்கும் ஹூண்டாய் பலிசேட் கார் மாடலே ஆயிரம் கிமீ மைலேஜை வழங்கும் வகையில் தயார் செய்திருப்பதாக நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஹூண்டாய் பலிசேட் கார் விற்பனையில் இல்லை. இந்தியர்கள் மத்தியில் இப்போது ஹைபிரிட் கார்களுக்கு நல்ல டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. ஆகையால், எதிர் வரும் நாட்களில் இந்த காரை ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதுபற்றிய எந்தவொரு அதிகாரப்பூர்வ வார்த்தைகளும் இதுவரை வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications









