பல லட்சத்தில் விலை இருந்தாலும், 24 மணிநேரத்தில் விற்று தீர்ந்துடுச்சு! கார் அளவை பார்த்து விலையை எடை போடாதீங்க

புதிய மினி கன்வெர்டிபிள் (MINI Convertible) காரின் அடுத்த கட்ட டெலிவிரிக்கான முன்பதிவுகள் தற்போது தொடங்கியுள்ளன. வருகிற 2026ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து இந்த கார்கள் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் 12, 2025 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய மினி கன்வெர்டிபிள் காரின் முதல் பேட்ச், வெறும் 24 மணி நேரத்திற்குள் முழுமையாக விற்றுத் தீர்ந்துவிட்டது.

இந்த நிலையில்தான் தற்போது அடுத்தக் கட்ட டெலிவிரிக்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டுள்ளன. முற்றிலும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு சிபியூ யூனிட்டாக (CBU) இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த மினி காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.58,50,000 ஆகும். சிபியூ யூனிட்டாக அறிமுகம் செய்யப்பட்டதன் காரணமாகவே காரின் விலை சற்று அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

mini convertible sold out in india

பிஎம்டபிள்யூ குரூப் இந்தியாவின் தலைவர் மற்றும் சிஇஓ ஹர்தீப் சிங் ப்ரார் இதுகுறித்து பேசுகையில், "இது மிக வேகமாக நடந்தது! புதிய மினி கன்வெர்டிபிள் விற்றுத் தீர்ந்த வேகம், அதன் அசைக்க முடியாத வடிவமைப்பையும், உண்மையான வேடிக்கையான டிரைவிங் அனுபவத்தையும் எங்கள் வாடிக்கையாளர்கள் எந்த அளவுக்கு விரும்புகிறார்கள் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது" என்றார்.

அவர் மேலும் கூறுகையில், "நாங்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கொண்டிருந்தோம். ஆனாலும், மினி லைஃப்-ஸ்டைலை மக்கள் உடனடியாக ஏற்றுக்கொண்டது அசாதாரணமானது. மினி உரிமையாளர்கள் எந்த ட்ரெண்டுகளையும் பின்பற்றுவதில்லை, அவர்கள் தங்கள் சொந்தப் பாதையை உருவாக்குகிறார்கள். இந்தக் கன்வெர்டிபிள் கார் இந்தியாவின் சாலைகளுக்கு புத்துணர்ச்சியைக் கொடுப்பதைக் காண ஆவலுடன் உள்ளோம்" என்று தெரிவித்தார்.

mini convertible sold out in india

புதிய மினி கன்வெர்டிபிள் காரின் வெளிப்புற வடிவமைப்பு கிளாசிக் மினி கார்களுக்கு இணையானதாக உள்ளது. காரின் தனித்துவத்தை வெளிப்படுத்தும் மூன்று லைட் சிக்னேச்சர்களுடன் ஸ்டாண்டர்ட் எல்இடி ஹெட்லைட்கள் உள்ளன. இதன் 18-அங்குல சக்கரங்கள் காற்றழுத்தவியல் ரீதியாக மேம்படுத்தப்பட்டுள்ளன. 'ஸ்லைடு ஸ்போக் 2-டோன்' மற்றும் 'ஃப்ளாஷ் ஸ்போக் 2-டோன்' என்கிற இரு அலாய் சக்கர ஆப்ஷன்கள் இந்த காரில் தேர்வு செய்ய கிடைக்கின்றன.

காரின் கருப்பு நிற மேற்கூரை 18 வினாடிகளில் முழுமையாகத் திறக்கப்பட்டு, 15 வினாடிகளில் மூடக்கூடியது. இது மென்மையாக செயல்பட்டு எல்லா காலநிலைகளிலும் பயணிகளைப் பாதுகாக்கிறது. இந்த மேற்கூரையை, கார் எந்த வேகத்தில் இயங்கினாலும், 40 சென்டிமீட்டர் நீளத்திற்கு சன்ரூஃப் (Sunroof) ஆகவும் பயன்படுத்த முடியும்.

சுத்தமான வடிவமைப்பு மற்றும் குறைந்தபட்ச கட்டுப்பாடுகளுடன், இந்த காரின் உட்புறம் கிளாசிக் மினி கார்களின் வடிவமைப்பைப் பிரதிபலிக்கிறது. காக்பிட்டின் மையப்புள்ளியாக உயர்-தெளிவான OLED டிஸ்ப்ளே உள்ளது. இது 'மினி இன்டராக்‌ஷன் யூனிட்' என்று அழைக்கப்படுகிறது. இது இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் சென்ட்ரல் டிஸ்ப்ளே ஆகிய இரண்டின் செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்கிறது.

mini convertible sold out in india

"ஹே மினி" என்று சொல்வதன் மூலம் மினி இன்டலிஜென்ட் பர்சனல் அசிஸ்டன்ட் (IPA)-ஐ செயல்படுத்தலாம். இது பலதரப்பட்ட செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும். புதுமையான மினி டிஜிட்டல் கீ பிளஸ் மூலம், உங்கள் ஸ்மார்ட்ஃபோன் 'மினி ஆப்' வழியாக காரை ஸ்டார்ட் செய்ய/ ஆஃப் செய்ய முடியும்.

ஹெட்-அப் டிஸ்ப்ளே ஓட்டுநரின் நேரடிப் பார்வையில் தேவையான தகவல்களைத் நேரடியாகக் காட்டுகிறது. ஹர்மன் கார்டன் சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம் செவிகளுக்கு விருந்தளிக்கிறது. புதிய மினி கன்வெர்டிபிள் எஸ் காரில், புதிய மினி ட்வின்பவர் டர்போ தொழில்நுட்பத்தால் இயங்கும் புதுமையான மற்றும் திறமையான பெட்ரோல் என்ஜின் உள்ளது.

இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 5,000- 6,500 ஆர்பிஎம்-இல் 150 kW/204 எச்பி ஆற்றலை வழங்குகிறது. மேலும், 1450- 4500 ஆர்பிஎம்-இல் 300 என்.எம் அதிகபட்ச டார்க் திறனை உற்பத்தி செய்கிறது. இந்த கார் பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிமீ/மணி வேகத்தை வெறும் 6.9 வினாடிகளில் எட்டுகிறது, இதன் அதிகபட்ச வேகம் 240 கிமீ/மணி ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: அளவில் சிறியவைகளாக இருப்பினும், மினி கார்களுக்கு இந்தியாவில் எப்போதுமே ஒரு தனி கிரேஸ் உள்ளது. ஆதலால், புதிய மினி கன்வெர்டபிள் கார் முன்பதிவு துவங்கிய 24 மணிநேரத்திற்குள் விற்று தீர்ந்தது ஆச்சிரியமளிக்கும் விஷயம் இல்லை. இருப்பினும், 24 மணிநேரத்திற்குள் எத்தனை முன்பதிவுகள் இந்த காருக்கு கிடைத்தது என்கிற விபரம் கிடைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

More from DriveSpark

Article Published On: Thursday, December 18, 2025, 10:59 [IST]
English summary
All new mini convertible car sold out in just 24 hours in india check all details here
மேலும்... #mini #car booking #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X