பாதியாக குறைந்த ஆல்டோ விற்பனை! ஜனவரி டூ அக்டோர்பர் சேல்ஸ் எவ்வளவு தெரியுமா?
மாருதி நிறுவனம் இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான கார்களை விற்பனை செய்து வருகிறது. குறைந்த விலையில் அதிக கார்களை விற்பனை செய்யும் நிலையில் இந்நிறுவனத்தின் குறைந்த விலை காரான ஆல்டோ காரை கடந்த 10 மாதங்களில் வெறும் 70,000 பேர் தான் வாங்கியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த கார் குறைந்த விலை காராக இருந்தாலும் விற்பனை ஏன் குறைவாக இருக்கிறது? ஒவ்வொரு மாதமும் எவ்வளவு விற்பனை நடந்துள்ளது?விரிவாக காணலாம் வாருங்கள்.
மாருதி நிறுவனம் இந்தியாவில் பெயர் பெற்ற நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனத்தின் பல தயாரிப்புகள் மக்கள் மத்தியில் ஹிட்டாகியுள்ளது. மக்கள் பலர் இந்த காரை நீண்ட ஆண்டுகளாக விரும்பி வாங்கி வருகின்றனர். ஆனால் வரவர இந்த காரின் விற்பனை சரிந்து வருவதை நம்மால் காண முடிகிறது.

இந்த 2025ம் ஆண்டு துவங்கிய ஜனவரி மாதம் முதல் கடந்த அக்டோர் மாதம் வரை இந்த காரை வெறும் 70,000 பேர் தான் வாங்கியுள்ளார். கடந்த ஜனவரி மதாம் தான் அதிகபட்சமாக 11,000 பேர் இ்நத காரை வாங்கியுள்ளனர். இதுவே கடந்த மே மாதம் குறைந்தபட்சமாக 4970 பேர் இந்த காரை வாங்கியுள்ளனர். இனி ஒவ்வொரு மாத வாரியிலான விற்பனையை காணலாம்.
முன்னரே சொன்னதுபடி கடந்த ஜனவரி மாதம் இந்த காரை 11,352 பேரும், பிப்ரவரி மாதம் 8541 பேரும், மார்ச் மாதம் 9867 பேரும், ஏப்ரல் மாதம் 5606 பேரும், மே மாதம் 4970 பேரும், ஜூன் மாதம் 5045 பேரும், ஜூலை மாதம் 5910 பேரும், ஆகஸ்ட் மாதம் 5520 பேரும், செப்டம்பர் மாதம் 5434 பேரும், அக்டோபர் மாதம் 6210 பேரும் இந்த காரை வாங்கியுள்ளனர்.ஆக மொத்தம் 68455 கார்கள் விற்பனையாகியுள்ளது.

மாருதி நிறுவனத்தின் ஆல்டோ கே10 காரை பொருத்தவரை 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளுது. இது 67 பிஎச்பி பவரையும், 89 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளுது. இந்த காரில் சிஎன்ஜி ஆப்ஷனும் இருக்கிறது. அதிக மைலேஜை விரும்பும் வாடிக்கையாளர்கள் அதை தேர்வு செய்யலாம். இந்த கார் சிஎன்ஜியில் இயங்கும் போது 34 கி.மீ மைலேஜை தருகிறது.
இந்த காரில் 7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இதுபோக டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ஸ்ட் கிளஸ்டர், ஸ்டியரிங் மவுண்ட் கண்ட்ரோல்கள், பாதுகாப்பிற்காக 6 ஏர்பேக்குகள், பின்பக்க பார்க்கிங் சென்சார், ஆகிய அம்சத்துடன் ரூ3.70 லட்சம் முதல் ரூ5.45 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. ஒரு காலத்தில்இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் காராக இருந்தது. தற்போது டாப் 10 பட்டியலில் கூட இல்லை. இந்தியாவில் சிறிய ரக கார்கள் மீதான மோகம் அதிகமாகி வருகிறது. அதன் எதிரொலியாக இந்த காரின் விற்பனை குறைந்து வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஆல்டோ கே10 காருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது நீண்ட ஆண்டுகளாக சிறப்பாக விற்பனையாகி வந்தாலும் கடந்த 10 மாதங்களுக்கு முன் நடந்த விற்பனையை விட தற்போது விற்பனை பாதியாக குறைந்துள்ளது. இது சிறிய கார்கள் மீது இந்திய மக்களுக்கு குறைந்து வரும் மோகத்தை காட்டுகிறது.


Click it and Unblock the Notifications









