அடி மாட்டு விலையில் மீண்டும் களமிறங்குகிறது அம்பாஸிடர்! இவ்ளோ சீக்கிரமா விற்பனைக்கு வரப்போகுதா!

இந்திய ஆட்டோமொபைல் துறை வரலாற்றில் ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் (Hindustan Ambassador) காருக்கு மிக முக்கியமான இடம் உண்டு. கடந்த 1957ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் காரின் உற்பத்தி கடந்த 2014ம் ஆண்டுதான் நிறுத்தப்பட்டது. அதாவது கிட்டத்தட்ட 57 வருடங்கள், ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் கார் விற்பனையில் இருந்தது. இதன் மூலம் இந்திய சந்தையில் மிக நீண்ட காலம் விற்பனை செய்யப்பட்ட கார்களில் ஒன்று என்ற பெருமை ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் காருக்கு உள்ளது. ஒரு காலத்தில் மக்களின் அந்தஸ்தின் அடையாளமாக ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் கருதப்பட்டது.

ஆனால் நாளடைவில் விற்பனை குறைந்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், இந்தியாவில் ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் காரின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இது நடந்து கிட்டத்தட்ட 11 வருடங்கள் கடந்து விட்டன. இந்த சூழலில், கூடிய விரைவில் அம்பாஸிடர் கார் மீண்டும் விற்பனைக்கு வரவுள்ளதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Hindustan Ambassador

அம்பாஸிடர் பிராண்டு, அதாவது அம்பாஸிடர் என்ற பெயரை பயன்படுத்தும் உரிமை தற்போதைய நிலையில் பிஎஸ்ஏ குழுமத்திடம் (PSA Group) உள்ளது. இது பிரான்ஸை சேர்ந்த கார் நிறுவனம் ஆகும். தற்போது இந்தியாவில் பிரபலமாக உள்ள சிட்ரோன் (Citroen) போன்ற நிறுவனங்கள் எல்லாம் பிஎஸ்ஏ குழுமத்தின் கீழ்தான் வருகின்றன.

அம்பாஸிடர் காரை மீண்டும் அறிமுகம் செய்தால், வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என பிஎஸ்ஏ குழுமம் கருதுவதாக கூறப்படுகிறது. எனவே இந்திய சந்தையில் மீண்டும் அம்பாஸிடர் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

New Hindustan Ambassador

இதன்படி பார்த்தால், வரும் 2026ம் ஆண்டு மார்ச் மாதம், அம்பாஸிடர் கார் இந்திய சந்தையில் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. அதே நேரத்தில் இதன் ஆரம்ப விலை வெறும் 10 லட்ச ரூபாய் என்ற அளவில் இருக்கலாம் என தெரிகிறது. இங்கே குறிப்பிட வேண்டிய மற்றொரு விஷயமும் உள்ளது.

அம்பாஸிடர் கார் எலெக்ட்ரிக் அவதாரத்தில் மீண்டும் விற்பனைக்கு வரவுள்ளது என்பதுதான் அது. இந்த தகவல்கள் எல்லாம் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. எனவே அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் வரை நாம் காத்திருப்பது நல்லது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: அம்பாஸிடர் கார் மீண்டும் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன என நாங்களும் நம்புகிறோம். ஆனால் 2026ம் ஆண்டின் மார்ச் மாதத்திற்குள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுமா? என்பது சந்தேகம்தான். ஏனெனில் இதற்கு இன்னும் சுமார் 1 வருடம் மட்டுமே உள்ளது.

அதற்குள்ளாக விற்பனைக்கு கொண்டு வருவது மிகவும் கடினம். அதையும் மீறி குறுகிய காலத்தில் அவசர அவசரமாக விற்பனைக்கு கொண்டு வந்தால், அந்த தயாரிப்பு வாடிக்கையாளர்களை கவர்வதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என நாங்கள் கருதுகிறோம். எனவே 2026ம் ஆண்டு மார்ச் மாதத்தில் அம்பாஸிடர் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் குறைவு.

மற்றபடி அம்பாஸிடர் மீண்டும் விற்பனைக்கு வந்தால், வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்பது எங்கள் கருத்து. ஆனால் பழைய அம்பாஸிடரை போல், செடான் ரகத்தில் புதிய அம்பாஸிடர் விற்பனைக்கு வருமா? என்பதும் கேள்விக்குறியே. ஏனெனில் தற்போது செடான் ரக கார்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் போதுமான வரவேற்பு கிடைப்பதில்லை.

எனவே வேறு பாடி ஸ்டைலில் அம்பாஸிடர் காரை நாம் எதிர்பார்க்கலாம். தற்போதைய நிலையில் புதிய அம்பாஸிடர் காரை பற்றி நம்மிடம் போதுமான தகவல்கள் இல்லை. எனவே பிஎஸ்ஏ குழுமத்திடம் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் வெளியாகும் வரை நாம் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 4, 2025, 19:03 [IST]
English summary
Ambassador all set to make a comeback in india expected price rs 10 15 lakh new details out
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+