5 ஸ்டார் ரேட்டிங் மட்டும் போதாது! AOP & COP புள்ளிகளையும் பாருங்க!

இந்தியாவில் வாகனம் வாங்கும் பலர் பாதுகாப்பு ரேட்டிங் குறித்த விபரங்களை ஆய்வு செய்கின்றரன். இந்தியாவிற்கு என பிரத்தியேகமாக பாரத் என்கேப் சோதனை நடத்தப்படுகிறது. இதில் வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களை சோதனை செய்து அதற்கான ரேட்டிங்களை பெறுகின்றனர். ஆனால் வாகனம் வாங்கும் போது ரேட்டிங்கை மட்டும் பார்க்காமல் அதில் வழங்கப்பட்டுள்ள AOP & COP தகவல்களையும் காண வேண்டும் எது என்ன AOP & COP ? விரிவாக காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் தற்போது ஸ்டார் ரேட்டிங் அதிகம் உள்ள வாகனங்கள் தான் அதிகம் விற்பனையாகின்றன. பாரத் என்கேப் சோதனையில் வாகனங்கள் பல்வேறு விதமான மோதலுக்கு உட்படுத்தப்படும். அதில் ஏற்படும் பாதிப்புகளை பொருத்து ஸ்டார் ரேட்டிங் வழங்கப்படும். இப்படியாக மோதல் நடக்கும் போது காருக்குள் ஏற்படும் பாதிப்புகளை கண்காணிக்க டம்மிகள் வழங்கப்பட்டிருக்கும்.

AOP amp amp COP Rating in Crash Test

அந்த டம்மிகள் மனிதர்களை போல இருக்கும் அதில் ஏற்படும் பாதிப்புகளை கண்டறிய பல்வேறு சென்சார்களும் அதில் பொருத்தப்பட்டிருக்கம். இப்படியாக மோதல் சோதனையில் குறிப்பிட்ட வாகனம் எவ்வளவு புள்ளிகளை பெற்றுள்ளது என்ற தகவலை AOP & COP என வழங்குவார்கள் . அந்த புள்ளிக்கு ஏற்ப தான் ஸ்டார் ரேட்டிங் வழங்கப்படும்.

பலர் ஸ்டார் ரேட்டிங்கை மட்டுமே கவனிக்கின்றனர். ஆனால் இந்த புள்ளிகள் குறித்து கவலைப்படுவதில்லை. ஆனால் இந்த புள்ளிகளில் சில வாகனங்கள் குறைவாக இருந்தாலும் 5 ஸ்டார் ரேட்டிங் பெற வாய்ப்புள்ளது. அதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் நாம் AOP & COP பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும்.

AOP amp amp COP Rating in Crash Test

AOP என்பது Adult Occupant Protection அதாவது பெரியவர்களுக்கான பாதுகாப்பு சோதனைகள் காரில்பெரியவர்கள் பயணிக்கும் போது கார் விபத்தில் சிக்கினால் அவர்களுக்க எவ்வளவு பாதிப்பு ஏற்படுகிறது என்பதை வைத்து இந்த ரேட்டிங் வழங்கப்படுகிறது. அடுத்தாக COP என்பது Child Occupant Protection குழந்தைகள் காரில் பயணிக்கும்போது ஏற்படும் விபத்தால் அவர்களுக்கு எவ்வளவு பாதிப்பு ஏற்படுகிறது என்பதை வைத்து இந்த புள்ளிகள் வழங்கப்படுகிறது.

AOP புள்ளிகள் என்பது மொத்தம் 32 புள்ளிகள் வழங்கப்படும். COP புள்ளிகள் என்பது 49 புள்ளிகள் வழங்கப்படும் வாகனம் மோதலில் ஏற்படுத்திய பிறகு பாதிப்புகளை கண்டறிந்து எவ்வளவு குறைவான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதோ அதற்கு ஏற்றார் போல புள்ளிகள் வழங்கப்படும். இப்படியாக சில முக்கிய கார்களின் புள்ளிகள் குறித்த விபரங்களை காணலாம் வாருங்கள்.

AOP amp amp COP Rating in Crash Test

டாடா ஹாரியர் இவி கார் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது. இந்த கார் சோதனையில் AOPயில் 32க்கு 32 புள்ளிகளையுமே பெற்றுளவிட்டது. மஹிந்திரா எக்ஸ்இவி 9இ காரும் 32க்கு புள்ளிகளை பெற்றுள்ளது. மஹிந்திரா பிஇ 6 கார் 32க்கு 31.97 புள்ளிகளையும், டாடா பஞ்ச் இவி கார் 32க்கு 31.46 புள்ளிகளையும், மஹிந்திரா தார் ராக்ஸ் 32க்கு 31.09 புள்ளிகளையும் பெற்றுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகனம் வாங்கும்பலர் தங்கள் வாகனங்கள் பாதுகாப்பானதா என ரேட்டிங்கை பார்க்கின்றனர் AOP & COP என்ற விபரங்களையும் பார்த்தால் தான் அதன் முழுமையான பாதுகாப்பு குறித்த திறன் தெரிய வரும். இனி நீங்கள் கார் வாங்கும் போது இதை பார்த்து வாங்குவது தான் நல்லது.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 30, 2025, 16:45 [IST]
English summary
Aop cop rating 5 safest cars india 2025 bharat ncap
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X