ஓட்டு மொத்த காரையே கண்டரோலில் எடுக்கப்போகும் ஆப்பிள்! இவங்க எல்லாம் வேண்டவே வேண்டாம்னு சொல்லிட்டாங்க!
ஆப்பிள் நிறுவனம் தனது ஆப்பிள் கார் பிளே தயாரிப்பை அப்டேட் செய்ய திட்டமிட்டுள்ளது. அதன்படி இந்நிறுவனம் எதிர்காலத்தில் வாகனங்களில் உள்ள அத்தனை ஸ்கிரீன்களிலும் ஆப்பிள் கா்பிளே டிஸ்பிளேவை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. ஆனால் இந்த தொழிற்நுட்பத்தை தங்கள் கார்களில் பொருத்த பல வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
உலகம் முழுவதும் உள்ள வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்கள் தங்கள் செல்போனையும் காரையும் கனெக்ட் செய்யும் வகையில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே ஆகிய இரண்டு ஆப்ஷன்களையும் தங்கள் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் இணைக்கும் ஆப்ஷனை வழங்கி வருகின்றனர்.

இதன்படி கடந்த 2022ம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் தனது கார்பிளே தொழிற்நுட்பத்தை கடைசியாக அப்டேட் செய்தது. கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் ஆகும் நிலையில் இதை மாற்றி முற்றிலும் புதிய அப்டேட்டை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. அதன்படி புதிய அப்டேட்டில் ஆப்பிள் நிறுவனம் வாகனங்களில் உள்ள அனைத்து ஸ்கிரீன்களிலும் அந்நிறுவனத்தின் டிஸ்பிளே மாறும் வகையில் ஆப்ஷன்களை வழங்குகிறது. வாகனத்தின் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் கூட ஆப்பிள் கார்பிளே கண்ட்ரோல் இருக்கும் வகையில் அப்டேட்டை கொண்டு வர திட்டளிட்டுள்ளது.
ஆனால் இந்த ஆப்ஷன் உடன் தான் ஆப்பிள் கார்பிளே வந்தால் அதை தங்கள் வாகனங்களில் இன்ஸ்டால் செய்ய மாட்டோம் என சில நிறுவனங்கள் மறுத்துள்ளன. மெர்சிடீஸ் பென்ஸ், ஆடி, வால்வோ, போல்ஸ்டார், ரெனால்ட் உள்ளட்ட நிறுவனங்கள் இந்த தொழிற்நுட்பத்தை முற்றிலுமாக நிராகரித்தள்ளனர். அவர்கள் ஆப்பிள் நிறுவனம் தங்கள் நிறுவன தனி உரிமையை பறிக்கும் விதமான இந்த அப்டேட்டை செய்துள்ளதாக கூறி நிராகரித்துள்ளனர்.

அதே நேரம் கியா, ஹூண்டாய், போர்ஷே உள்ளிட்ட நிறுவனங்கள் இதை ஏற்றுக்கொண்டு தங்கள் எதிர்கால தயாரிப்புகளில் இதை இன்ஸ்டால் செய்வதக ஒப்பு கொண்டுள்ளனர். ஜாக்குவார் நிறுவனம் இது குறித்து தற்போதுவரை சில ஆய்வுகளை நடத்தி வருகின்றனர். அதனால் முடிவுகள் எதையும் அந்நிறுவனத்தால் தற்போது சொல்ல முடியவில்லை.
அதே நேரம் நிஸான், ஃபோர்டு, இன்ஃபினிட்டி போன்ற நிறுவனங்கள் இதை ஏற்றுக்கொண்டாலும் அப்டேட் செய்ய அனுமதிக்கப்போவதில்லை என கூறியுள்ளனர். அதனால் இந்நிறுவனங்கள் முழுமையாக இந்த தொழிற்நுட்பதை நிராகரிக்கவில்லை என கூறப்படுகிறது. ஹோண்டா மற்றும் அக்யூரா ஆகிய நிறுவனங்கள் இதை நடைமுறைபடுத்துவதில் உள்ள சிக்கலை ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த புதிய அப்டேட்டில் ஆப்பிள் நிறுவனம் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தையும் தாண்டி இன்ஸ்ட்ரூமென்ட் கன்ஸோலில் தங்கள் இன்டர்ஃபேஸை கொண்டுவருகின்றனர். இதில் ஸ்பீடு, பேட்டரி, எரிபொருள் அளவுகள், கிளைமேட் கண்ட்ரோல் உள்ளிட்ட பல தகவல்கள் ஆப்பிள் சாஃப்ட்வேர் மூலம் வெளியிடப்படும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆப்பிள் நிறுவனம் இந்த அப்டேட்டை வரும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை சில வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எதிர்பதால் இந்த அப்டேட்டை அல்ட்ரா என்ற பெயரிலும், சாதாரணமாக உள்ள ஆப்பிள் கார்பிளேவில் சில அப்டேட்களை தனியாகவும் வழங்கும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








