75ஏக்கரில் புதிய பேருந்து உற்பத்தி ஆலையை அமைக்கும் அசோக் லேலண்ட்.. எங்கு தெரியுமா? வேலை தேடிட்டு இருக்கீங்களா?

அசோக் லேலண்ட் (Ashok Leyland), இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களில் இதுவும் ஒன்று. இந்த நிறுவனமே தன்னுடைய புதிய வாகன உற்பத்தி ஆலையை தற்போது திறந்து இருக்கின்றது. பிரமாண்டமாக 75 ஏக்கர் பரப்பளவிலேயே தன்னுடைய புதிய ஆலையை அசோக் லேலண்ட் திறந்திருக்கின்றது. நமது அண்டை மாநிலமான ஆந்திராவிலேயே புதிய ஆலை திறக்கப்பட்டு உள்ளது. துள்ளியமாக சொல்ல வேண்டும் என்றால் விஜயவாடாவில் அசோக் லேலண்டின் புதிய ஆலை திறக்கப்பட்டு இருக்கின்றது.

பலதரப்பட்ட வாகனங்களை தயாரிக்கும் ஓர் நிறுவனமாகவே அசோக் லேலண்ட் செயல்பட்டு வருகின்றது. ஆனால், இங்கு முக்கிய உற்பத்தியாக பேருந்துகள் மட்டுமே தாயரிக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எலெக்ட்ரிக் மற்றும் உள் எரிப்பு எஞ்சின் (ஐசிஇ) கொண்ட வாகனம் பேருந்துகளை அது தயாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Ashok leyland opens new bus plant in andhra pradesh

அதேநேரத்தில், அசோக் லேலண்ட் நிறுவனம் டிரக்குகள், பேருந்துகள், ராணுவ பயன்பாட்டு வாகனங்கள், இலகு ரக வாகனங்கள் உள்ளிட்டவற்றை தயாரித்து வருகின்றது. இந்த நிலையிலேயே, புதிதாக பேருந்துகளுக்கான உற்பத்தி ஆலையை நிறுவனம் திறந்திருக்கின்றது. இந்த புதிய ஆலை திறப்பு விழாவில் ஆந்திர மாநில அமைச்சர் நர லோகேஷ் மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்.

புதிய ஆலையால் புதிய வேலை வாய்ப்புகள் ஆந்திர மாநிலத்தில் உருவாகி இருக்கின்றது. ஆயிரக் கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகையால், ஆந்திரா மக்கள் வேலை தேடி வெளி நாடுகளுக்கோ, வெளியூர்களுக்கோ செல்ல வேண்டிய அவசியம் இருக்காது என நம்பப்படுகின்றது.

Ap minister opens new ashok leyland bus manufacturing plant

திய ஆலையை திறந்த கையோடு சுவிட்ச் எலெக்ட்ரிக் டபுள் டெக்கர் பேருந்தின் சாவியையும் ஆந்திர அரசாங்கத்திற்கு அசோக் லேலண்ட் அதிகாரிகள் வழங்கினர். இதனையும் மாநில அமைச்சர் நர லோகேஷ் பெற்றுக் கொண்டார். 75 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த புதிய ஆலையில் ஆண்டிற்கு 4,800 பேருந்துகளை தயாரிக்க அசோக் லேலண்ட் திட்டமிட்டு இருக்கின்றது.

அனைத்தும் உலக தரம் வாய்ந்ததாக இருக்கும் என கூறப்படுகின்றது. அதேபோல், இந்த உற்பத்தி ஆலை வாகனங்களை தயாரிக்கும் ஆலையாக மட்டுமல்லாமல் ஓர் கற்பிப்பு மையமாகவும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. உதாரணமாக அட்வான்ஸ்டு சர்வீஸ் பயிற்சி மையமாகவும் இது செயல்பட இருக்கின்றது.

Ashok leyland bus manufacturing plant

இதுதவிர, உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் சில முக்கிய துறையில் பயிற்சி உள்ளிட்டவற்றையும் இந்த ஆலையின் வாயிலாக வழங்க நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து, ஆலைக்கு தேவையான மின்சாரத்தை சோலார் வாயிலாகப் பெற்றுக் கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றது.

ஆகையால், இந்த ஆலை சுற்றுச் சுழலின் நலனில் பங்களிக்கக் கூடிய ஓர் ஆலையாக இருக்கும் என தெரிகின்றது. இதற்கேற்ப ஆலை முழுக்க எல்இடி லைட்டுகள் போன்றவை பயன்படுத்தப்பட இருக்கின்றன. இதேபோல், ஆலைக்குள் பயன்படுத்தப்படும் வாகனங்களாக பேட்டரியில் இயங்கும் வாகனங்களே பயன்படுத்தப்பட இருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் முன்னணி கமர்சியல் வாகன உற்பத்தி நிறுவனமாக அசோக் லேலண்ட் இருக்கின்றது. இதுவே பிரத்யேகமாக பேருந்துகளுக்கான ஆலையை திறந்திருக்கின்றது. இதன் வாயிலாக புதிய வேலை வாய்ப்புகள் உருவாகுவதோடு, உள்ளூர் சப்ளையர்களின் வளர்ச்சிக்கும் இது பெரும் உதவியாக இருக்கும் என நம்பப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, March 20, 2025, 16:51 [IST]
English summary
Ashok leyland opens new bus manufacturing facility near vijayawada enhancing local employment
மேலும்... #ashok leyland #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X