சாதி-க்கு முக்கியத்துவம்.. அசோக் லேலண்ட் ஸ்டாலில் ஒன்று கூடிய கூட்டம்.. முன்னாள் கர்நாடகா முதல்வரும் வந்தாரா!!

தமிழகத்தை மையமாகக் கொண்டு இயங்கும் அசோக் லேலண்ட் (Ashok Leyland) நிறுவனம் அதன் புதுமுக வாகனங்கள் சிலவற்றை பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 (Bharat Mobility Global Expo 2025) வாயிலாக இந்தியாவில் வெளியீடு செய்திருக்கின்றது. அந்தவகையில், சாதி (Saathi)-க்கு முக்கியத்துவம் கொடுத்து தன்னுடைய ஸ்டாலில் அது காட்சிப்படுத்தி இருந்தது. இது ஓர் பிரீமியம் அம்சங்கள் நிறைந்த இலகு ரக வர்த்தக வாகனம் (LCV) ஆகும்.

இதை காட்சிப்படுத்தியதோடு வாகனத்தை அவர்கள் வெளியீடும் செய்தனர். எனவே விரைவில் இது விற்பனைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்கிற நோக்கிலேயே இந்த உலக மேடையில் அதற்கு முன்னுரிமை வழங்கி அசோக் லேலண்ட் நிறுவனம் காட்சிப்படுத்தி இருக்கின்றது.

Ashok leyland unveils saathi

இந்த வாகனத்தை ஆட்டோ எக்ஸ்போவில் கலந்துக் கொண்ட முன்னாள் கர்நாடாக முதலமைச்சரும், இப்போதைய மத்திய அமைச்சருமான எச்டி குமாராசாமி பார்வையிட்டார். தொடர்ந்து அவர் அந்த வாகனத்திற்கு முன்பாக நின்று ஓர் புகைப்படத்தையும் எடுத்துக் கொண்டார். இந்த படத்தையே நீங்கள் இங்கே பார்த்துக் கொண்டிருக்கின்றீர்கள்.

இந்த வாகனத்தை அட்வான்ஸ்டு எல்என்டி (LNT) தொழில்நுட்பத்தைக் கொண்டு தயாரித்து இருப்பதாக நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. வர்த்தக வாகன பயன்பாட்டாளர்கள் சந்தித்து வரும் மிக முக்கியமான பராமரிப்பு இன்னல்களைக் களையக் கூடிய ஓர் தொழில்நுட்பமே இதுவாகும். இதைத்தொடர்ந்து, 45 எச்பி மற்றும் 110 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்ட மோட்டாரையே இதில் பயன்படுத்தி இருக்கின்றனர்.

சாதி பெரிய உருவம் கொண்ட லோடு வாகனம் என்பதால் அதிக பாரத்தை ஏற்றிச் செல்ல வேண்டும் என்கிற நோக்கிலேயே இந்த அதிக திறன் கொண்ட எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. ஆமாங்க, நிறைய எடைக் கொண்ட பொருட்களை எடுத்துச் செல்வதற்காக மிகப் பெரிய பாடி அமைப்பை அசோக் லேலண்ட் சாதி-க்கு கொடுத்து இருக்கின்றனர்.

ஆகையால், ஒரே லோடில் அதிக லாபத்தைத் தரும் அதிக சரக்குகளை இந்த வாகனத்தின் வாயிலாக கமர்சியல் வாகன பயன்பாட்டாளர்களால் ஏற்றிச் செல்ல முடியும். இதன் வாயிலாக இரட்டிப்பான லாபத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் அசோக் லேலண்ட் தெரிவித்து இருக்கின்றது. சுமார் 1,120 கிலோ வரையில் இதில் எடையை ஏற்றிச் செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதன் மைலேஜ் திறனும் அதிகம் என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. மேலும், அனைவரையும் கவரும் வகையில் இந்த வாகனத்திற்கு ரூ. 6 லட்சத்து 49 ஆயிரம் என்கிற விலையை அசோக் லேலண்ட் நிர்ணயம் செய்து இருக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

இந்த வாகனத்தின் பக்கம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டு தற்போது 5 ஆண்டுகள் அல்லது 2 லட்சம் கிமீ வாரண்டியை அசோக் லேலண்ட் அறிவித்து இருக்கின்றது. எனவே, இந்திய கமர்சியல் வாகன பயன்பாட்டாளர்கள் இந்த வாகனத்திற்கு அமோக வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கமர்சியல் வாகனங்களுக்கான தேவை பலமடங்காக அதிகரித்துக் காட்சியளிக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே அதிக பாரத்தை சுமக்கும் திறன் கொண்ட சாதி-யை பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 வாயிலாக அசோக் லேலண்ட் நிறுவனம் காட்சிப்படுத்தி இருக்கின்றது. இதன் இன்டீரியர் பிரீமியம் அம்சங்கள் நிறைந்த காருக்கு இணையானதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Saturday, January 18, 2025, 8:33 [IST]
English summary
Ashok leyland unveils saathi at bharat mobility global expo 2025
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+