ரூ7.4 கோடி காரை வாங்கிய விஜய் பட இயக்குநர்! டாப் ரேஞ்ச்க்கு போயிட்டாரே!
தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குநரான அட்லி தற்போது இந்தி சினிமாவிற்கும் சென்று பிரபலமாகியுள்ள நிலையில் தற்போது அவர் ரூ7.5 கோடி மதிப்பிலான ரோலஸ்ராய்ஸ் இவி கார் ஒன்றை வாங்கியுள்ளார். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராவர் அட்லி, அதற்கு முன்பு இயக்குநர் ஷங்கரிடம் உதவியாளராக பணிபுரிந்தார். இவர் அடுத்தடுத்து இயக்கிய திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் பெரிய ஹிட்டானது.இந்நிலையில்இவர் இந்தியில் ஷாரூக்கானை வைத்து ஜவான் என்ற திரைப்படத்தையும் இயக்கினார்.

இதனால் இந்தி சினிமாவிலும் பிரபலமான இவர் சமீபத்தில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் ஸ்பெக்டேர் என்ற இவி காரை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் சமீபத்தில் விமான நிலையத்தில் தனது மனைவி மற்றும் மகனுடன் இந்த காரில் வந்திறங்கிய வீடியோ இன்ஸ்டாகிராமில் Bollywakao என்ற பக்கத்தில் வெளியாகியுள்ளது.
இந்த வீடியோவில் உள்ளது படி இயக்குநர் அட்லியே இந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை ஓட்டி வருகிறார். இந்த காட்சிகள் எல்லாம் பதிவாகியுள்ளது. இவர் ஒட்டி வந்தது கருப் டைமண்ட் நிற ஸ்பெக்டேர் இவி கார் ஆகும். இந்த காரின் உட்புறம் கஸ்டமைஸ்டு ஆப்ஷன் கொண்டது என்பதால் அட்லிஅதில் போல்டு டேங்கிரைன் லெதர் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. உட்புறம் பிரைட் நிறத்தில் ஆங்காங்கே கருப்பு நிற ஃபினிஷ் கொவுத்து கிளாஸியான லுக்கில் இருக்கிறது.

ரோல்ராய்ஸ் நிறுவனத்தின் முதல் மற்றும் ஒரே எலெக்ட்ரிக் கார் இது தான். இந்த கார் 2 விதமான வேரியன்ட்களில் கிடைக்கிறது. அதன்படி ஸ்டாண்டர்ட் மாடல் தான் அட்லி வாங்கியுள்ளார். இந்த கார் ரூ7.5 கோடி என்ற விலையில் இந்தியாவில் விற்பனையாகிறது. அடுத்ததாக பிளாக் பேட்ஜ் வெர்ஷ் ரூ9.5 கோடியில் விற்பனையாகி வருகிறது.
இந்த காரில் 2 சூசைட் டோர்கள் வழங்கப்பட்டுள்ளது. இ்நத காரின் முக்கியமான ஹைலைட் ஆகும். இதன் முன்பக்க கரில் பகுதி ஸ்லீக்காக வழங்கப்பட்டுள்ளுது. இது போக வழக்கம் போல ரோல்ஸ் ராய்ஸ் காரில் உள்ள ஸ்பிரிட் ஆஃப் எஸ்டெஸியும் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரில் 23 இன்ச் அலாய் வீல்கள், வழங்கப்ப்டடுள்ளது. ரோல்ஸ் ராய்ஸ் காரிலேயே 23 இன்ச் வீல் வழங்கப்பட்டது இந்த காரில் தான்.
இந்த காரின் பின்பக்கம் ஸ்லோப்பான ரூஃப் லைன் வழங்கப்பட்டுள்ளது. இது போக மினிமலான எல்இடி டெயில் லைட்டும் வழங்கப்பட்டுள்ளது. இதுந்த காரின் உட்புறம் பல்வேறு சொகுசு வசதிகள் உள்ளது. முக்கிய பெரிய டச் ஸ்கிரீன் சிஸ்டம் உள்ளது. இது போக சிறப்பான லெதர் கொண்டு சீட்டுகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் டோர் பேனல்களில் இதன் சிக்னேச்சர் எடிசனான ஸ்டார் லைட் வழங்கப்பட்டுள்ளது. இந்த காருக்குள் மொத்தம் 4796 எல்இடி ஸ்டார்கள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த காரில் டுயல் மோட்டார் செட்டப் வழங்கப்பட்டுள்ளுது. இது முன்பக்கம் மற்றும் பின்பக்க ஆக்ஸிலில் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த காருக்க 575 பிஎச்பி பவரும் 900 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும் திறன் கொண்டதாக இருக்கிறது. இந்த காரில் ஆக்டிவ் சஸ்பென்சன் சிஸ்டம் இருக்கிறது. மேலும் 4 வீல் ஸ்டியரிங் முறையும் இருக்கிறது. அதாவது ஸ்டியரிங்கிற்கு தகுந்தார் போல் பினபக்க வீலையும் திருப்ப முடியும். இந்த கார் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 4.5 நொடியில் பிக்கப் செய்யும். இந்த காரில் 103kwh பேட்டரி பேக் உள்ளது. இது முழு சார்ஜில் இந்த காரை 530 கி.மீ எடுத்து செல்லும் திறன் கொண்டது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இயக்குநர் அட்லி நடிகர் விஜயை வைத்து படம் எடுத்துள்ளார். இதனால் மிகப்பெரிய பிரபலமானார். இதற்போது பாலிவுட் சென்று மிகப்பெரிய அளவில் வளர்ந்துவிட்டார். இவர் இந்தியாவில் வெகு சிலரே வாங்ககூடிய காரை இவர் வாங்கும் அளவிற்கு வளர்ந்துவிட்டார். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








