பார்க்க சாதாரணமா தான் இருக்கும் ஆனா இந்த காரோ ரேட் கோடி ரூபாய்ல பாதிக்கும் அதிகம்!

ஆடி நிறுவனம் தனது ஏ4 காரின் சிக்னேச்சர் வேரியன்டை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் ரேகுலர் வேரியன்டில் இருந்து சற்று வேறுபாடுகளுடன் இந்திய மார்கெட்டில் அறிமுகமாகியுள்ளது. இந்த கார் மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த கார் குறித்த விரிவான விபரங்களை இங்கே பார்போம்.

ஆடி நிறுவனம் தனது ஏ4 காரின் சிக்னேச்சர் எடிசனை இந்தியாவில் ரூ57.11 லட்சம் என்ற விலையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த சக்னேச்சர் அடிசனில் ஃபேக்டரியில் பொருத்தப்பட்ட பல ஆக்ஸசரீஸ்கள், மற்றம் காஸ்மெட்டிக் டிசைன் அம்சங்களுடன் விற்பனைக்கு வருகிறது. இது மட்டுமல்ல இந்த காரில் மெடக்கானிக்கல் மற்றும் எக்யூப்மென்ட் பேக்கேஜ்கள் ரெகுலரான ஏ4 காரில் இருப்பது போலவே இந்த காரிலும் இருக்கிறது.

Audi A4 Signature Edition launch

இந்த ஆடி ஏ4 சிக்னேச்சர் எடிசன் கார் ரெகுலரான ஏ4 காரிலிருந்து வேறுபடுத்தி காட்டும் வகயில் சில மாற்றங்களை பெற்றுள்ளது. குறிப்பாக இதன் வெளிப்புறப்பகுதியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக முன்பக்கம் உள்ள ஆடி ரிங்ஸ் பகுதியிலும மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. என்ட்ரி புரோஜெக்டிங் லைட்டிற்காக ஆடி லோகோவுடன் என்ட்ரி லைட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

இது போக இந்த காரில் டைனமிக் வீல் ஹப் கேப்கள் வழங்கப்பட்டுள்ளன. ஏரோடைனமிக்ஸ் அம்சத்தை மேலும் அதிகரிக்க இந்த காரில் ஸ்பாயலர் லிப்கள்வழங்கப்பட்டுள்ளது. சாதாரண வேரியன்ட் காரிலிருந்து இதை வேறுபடுத்தி காட்டும் வகையில் இந்த காரில் அலாய் வீல்களில் உள்ள பெயின்ட் ஃபினிஷ் வித்தியாசமாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த காரின் கேபின் பகுதி நேச்சுரல் கிரே உட் ஒக் டிசைனில் வழங்கப்பட்டுள்ளது. இது ரெகுலர் வேரியன்டிலிருந்து சற்று வேறுபடுத்தி காட்டும் வகையில் உள்ளது. இது போக இந்த கூடுதல் கிட் பேக்கில் கஸ்டம் கீ கவர் வழங்கப்படுகிறது. ஆடி ஜென்யூன் ஆக்சஸரீஸ் பேக்கேஜ் இந்த காருடன் சேர்ந்து வருகுகிறது. இதில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பெடல் கவர், மற்றும் வாசனை திரவியம் ஆகியவை வழங்கப்படுகின்றன.

சிக்னேச்சர் எடிசனில் முக்கியமான அம்சங்கள் மற்றும் தொழிற்நுட்பங்களில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. இந்த காரில் 25.65 செ.மீ அளவிலா எம்எம்ஐ டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆடி விர்ட்சூவல் காக்பிட் பிளஸ், வாய்ஸ் கமெண்ட் நேவிகேஷன், 19 ஸ்பீக்கர் கொண்ட பாங்& ஒலுப்ஷென் சவுண்ட் சிஸ்டம் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது.

இந்த காரில் பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக 3 ஸோன் கொண்ட கிளைமேட் கண்டரோல், எலெக்ட்ரிக்கலி அட்ஜெஸ்டபிள் முன்பக்க சீட்டுகள் டிரைவர் மெமரி அம்சத்துடன் வழங்கப்பட்டுள்ளது. 30 கலர் ஆப்ஷன்களுடன் ஆம்பியன்ஸ் லைட்டிங் உள்ளிட்ட அம்சங்கள் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளது. இது போக பார்க் அசிஸ்ட் அம்சம், 360 டிகிரி கேமரா ஆகிய அம்சங்களும் உள்ளன.

ஆடி ஏ4 சிக்னேச்சர் எடிசன் காரில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது.இது 204 பிஎச்பி பவர் மற்றும் 320 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார்0-100 கி.மீ வேகத்தை வெறும் 7.1 நொடியில் பிக்கப் செய்துவிடும். இந்த கார் அதிகபட்சமாக 241 கி.மீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது. மேலும் இ்நத காரில் 12 வோல்ட் மைல்டு ஹைபிரிட் சிஸடம், ரீஜெனரேட்டிங் பிரேக்கிங் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இந்த காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால் இந்த காரின் சிக்னேச்சர் வேரியன்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் நீண்ட நாட்களாக மக்கள் மத்தியில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இ்நத கார் விற்பனைக்கு வந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை இங்கே காணலாம் வாருங்கள்.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 11, 2025, 14:05 [IST]
English summary
Audi a4 signature edition launch price features details
மேலும்... #audi #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+