பணக்காரங்க சும்மா ஒன்னும் காஸ்ட்லி காரை வாங்கல! அவங்க இதுலயும் பணத்தை சேமிக்குறாங்க எப்படி தெரியுமா?
ஆடி நிறுவனம் இந்தியாவில் அஸ்சூர்டு பை பேக் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட சில மாடல் கார்களை வாங்குபவர்கள் அதை சில ஆண்டுகளுக்கு பிறகு விற்பனை செய்ய வேண்டும் என நினைத்தால் அந்நிறுவனமே அதிக தொகைக்கு அந்த காரை வாங்கிக்கொள்ளும் என தெரிவித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் பணக்காரர்கள் பலர் சொகுசு கார்களை வாங்கி வருகின்றனர். அவர்கள் அதிகம் பணம் சம்பாதிப்பதால் அந்த கார்களை எல்லாம் வாங்க முடிகிறது என நாம் நினைக்கிறோம். அவர்களிடம் அதிக பணம் இருப்பது உண்மை தான். ஆனால் அந்த பணத்தை எப்படி செலவு செய்ய வேண்டும் என திட்டமிட்டு தான் காஸ்ட்லியான கார்களை வாங்குகிறார்கள்.அவர்களுக்கு சாதாரண கார் போதும் தான். ஆனால் அதை விட காஸ்ட்லியான கார்கள் தான் அதிக லாபம் தருகிறது.

இந்தியாவில் முக்கிய சொகுசு கார் விற்பனை நிறனவமான ஆடி தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய அஸ்சூர்டு பை பேக் என்ற திட்டத்தை வ
குத்துள்ளது. இந்த திட்டம் வாகன உரிமையாளருக்கு எதிர்காலத்தில் வாகனத்தின் வேல்யூ பெரிய அளவில் குறையாமல் இருகு்கும் கேரண்டியை வழங்குகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் பயம் இல்லாமல் இந்த வாகனங்களை வாங்க முடியும்.
இந்த திட்டத்தின் கீழ் ஆடி நிறுவனம் விற்பனை செய்யும் 6 மாடல் கார்கள் மட்டுமே வருகிறது. ஆடி ஏ4, ஆடி க்யூ3, ஆடி க்யூ3 ஸ்போர்ட்பேக், ஆடி ஏ6, ஆடி க்யூ5 மற்றும் ஆடி க்யூ 7 ஆகிய கார்களுக்கு மட்டுமே இந்த திட்டம் பொருந்தும். இந்த காரை வாங்கும் வாடிக்கையாளர்கள். இந்த காரை 3 ஆண்டுகள் அல்லது 45,000 கி.மீ பயன்படுத்துவிட்டு விற்க நினைத்தால் ஆடி நிறுவனம் இந்த கார்களின் எக்ஸ் ஷோரூம் விலையில் 60 சதவீதத்தை வழங்குகிறது.

ஒரு வேலை 4 ஆண்டுகள் அல்லது 60,000 கி.மீ வரை பயன்படுத்திவிட்டால் 50 சதவீதம் வரை பணத்தை வழங்குகிறது. இது மட்டுமல்ல இந்த கார்களுக்கு குறைவான இஎம்ஐ பலூன் ஃபைனான்ஸ் திட்டமும் வழங்கப்படுகிறது. ஆனால் இது ஃபைனான்ஸ் நிறுவனங்களின் அப்ரூவலை பொருத்து மாறபடும்.
இந்த திட்டம் வாடிக்கையாளர்களுக்கு சில ஆண்டுகள் பயன்படுத்திய காரை விற்று புதிய காரை வாங்க நினைத்தால் பழைய காரை விற்கும் போது மிக குறைந்த விலைக்கு விற்க வேண்டிய அவசியம் வராது. மேலும் வாடிக்கையாளர்களுக்கும் விலை ஏற்றம் இறக்கம் குறித்த தேவையில்லாத பயம் வராது.

இதை இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் ஒருவர் ரூ50 லட்சம் மதிப்புள்ள மேலே குறிப்பிட்டுள்ள மாடல்களில் ஏதாவது ஒரு காரை வாங்குகிறார் என்றால் அந்த காரை அவர் 3 ஆண்டுகள் அல்லது 45,000 கி.மீ வரை பயன்படுத்திவிட்டு மிண்டும் விற்கிறார் என்றால் அவருக்கு ரூ30 லட்சம் கேரண்டியாக திரும்ப கிடைக்கும். காரின் கண்டிஷனை பொருத்து அதைவிட அதிகமாக கிடைப்பதற்கும் வாய்ப்புள்ளது.
இந்த கேரண்டி பை பேக் எல்லாம் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது தான். வாகனம் சரியான கண்டிஷனில் இருக்க வேண்டும். இதற்கு முன்னர் சரியான இடைவெளியில் சர்வீஸ் செய்திருக்க வேண்டும். விபத்தில் சிக்கியிருந்தால் அதன் மூலம் ஆகும் சேதத்தை இன்சூரன்ஸ் கிளைம் செய்து அங்கீகரிக்கப்பட்ட ஷோரூமில் ரிப்பேர் செய்திருக்க வேண்டும் என்ற கட்டுபாடுகளும் இருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பணக்காரர்கள் பலர் தங்கள் பணம் அதிகம் வீணாககூடாது என நினைத்தால் இப்படியாக பை பேக் கேரண்டி கொண்ட கார்களை விரும்புவார்கள். இதனால் எதிர்காலத்தில் அவர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுவது குறையும். பணக்காரர்கள் தங்கள் பணம் எப்படியெல்லாம் வீணாகிறது என்பதை முன்னரே அறிந்து அதை தடுக்கும் செய்பாடுகளை செய்வதால் தான் பணக்காரராகிறார்கள்.


Click it and Unblock the Notifications









