ஆடி காரை குறைந்த விலையில் வாங்க நினைப்பவர்களுக்கு சரியான நேரம் வந்தாச்சு!! ரூ.52 லட்சத்தில் இருந்து விலை..

இந்திய சந்தையில் ஆடி (Audi) நிறுவனம் அதன் க்யூ3 (Q3) மற்றும் க்யூ5 (Q5) கார்களில் புதியதாக சிக்னேச்சர் (Signature) வேரியண்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய வேரியண்ட்கள் ஆனது மேம்படுத்தப்பட்ட ஸ்டைலிங், பிரீமியம் அம்சங்கள் மற்றும் பிரத்யேக ஆக்சஸரீஸ்கள் உடன் வந்துள்ளன. இது வழக்கமான ஆடி க்யூ3 மற்றும் க்யூ5 கார்களில் இருந்து வேறுபட்டு, தனித்துவமான மற்றும் ஆற்றல்மிக்க தோற்றத்தை அளிக்கிறது.

புதிய ஆடி க்யூ3 சிக்னேச்சர் கார் ஸ்டாண்டர்ட் மற்றும் ஸ்போர்ட்பேக் என இரண்டு பாடி ஸ்டைல்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் முறையே ரூ.52.31 லட்சம் மற்றும் ரூ.53.55 லட்சம் ஆகவும், பெரிய மாடலான ஆடி க்யூ5 காரின் புதிய சிக்னேச்சர் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.69.86 லட்சம் ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

audi q3 and q5 signature edition launch

இந்த மூன்று ஆடி சிக்னெச்சர் எடிசன் கார்களும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே கிடைக்கும். அதாவது, குறுகிய காலத்திற்கு மட்டுமே இவை விற்பனையில் இருக்கும். வாடிக்கையாளர்கள் ஆடி இந்தியா இணையத்தள பக்கத்தை பார்வையிட்டோ அல்லது அருகிலுள்ள ஆடி டீலரை அணுகியோ இந்த கார்களின் முன்பதிவு மற்றும் டெலிவரி பற்றிய தகவல்களைப் பெறலாம்.

ஆடி க்யூ3 மற்றும் க்யூ5 கார்களின் ஸ்டைல் மற்றும் வசதி என இரண்டையும் புதிய சிக்னெச்சர் வேரியண்ட் மேம்படுத்துகிறது. இந்தியாவில் விலை குறைவான ஆடி எஸ்யூவி கார்களாக விளங்கும் க்யூ3 மற்றும் க்யூ5 காரில் இந்த பதிப்புகள் தனித்துவமான காட்சி அழகை சேர்க்கும் வகையில் பல சிறப்பம்சங்களுடன் வந்துள்ளன.

audi q3 and q5 signature edition launch

க்யூ3 காரில் ஒளிரும் ஆடி லோகோ புரோஜெக்‌ஷன் விளக்குகள், கஸ்டம் ஆடி டீக்கல்கள் மற்றும் சக்கரங்களுக்கு நடுவில் டைனமிக் கேப்கள் ஆகியவை உள்ளன. இந்த வீல் கேப்கள் கார் ஓடும்போதும் ஆடி நிறுவனத்தின் 4-வளைய லோகோவை சுழலாமல் வைத்திருக்கிறது. காரின் உட்புறத்தில், நுட்பமான ஆடம்பரமான வேலைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதில் குறிப்பாக, வாசனை டிஃப்யூசர், மெட்டாலிக் ஃபினிஷ் கொண்ட சாவி உறை மற்றும் ஸ்போர்ட்டியான தோற்றத்திற்கான வளையாத இரும்பு பெடல்கள் ஆகியவை அடங்கும். புதிய க்யூ3 சிக்னேச்சர் காரில் பார்க் அசிஸ்ட்+, புதிய 18-இன்ச் 5-ஸ்போக் S-டிசைன் அலாய் சக்கரங்கள் மற்றும் பின் இருக்கை பயணிகளுக்கான 12 வோல்ட் எலெக்ட்ரிக் சாக்கெட் மற்றும் இரட்டை USB சார்ஜிங் போர்ட்கள் போன்ற வசதிகள் உள்ளன.

audi q3 and q5 signature edition launch

மேலும், கண்கவர் புதிய சிவப்பு நிற பெயிண்ட் ஆப்ஷனும் இந்த காரில் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. க்யூ3 ஸ்போர்ட்பேக் காரின் புதிய சிக்னெச்சர் எடிசனும் இதேபோன்ற மேம்படுத்தல்களுடன் வருகிறது. அதே நேரத்தில், க்யூ5 சிக்னேச்சர் காரில் 19-இன்ச் 5-ட்வின்-ஆர்ம் டிசைன் கொண்ட அலாய் சக்கரங்கள் கிராஃபைட் கிரே நிறத்தில் பளபளப்பான மேற்பரப்புடன் வருகின்றன.

இது க்யூ5 காரின் கம்பீரமான தோற்றத்தை மேலும் அதிகரிக்கிறது. க்யூ3 மற்றும் க்யூ5 சிக்னேச்சர் கார்கள் நவாரா நீலம், கிளாசியர் வெள்ளை, மைதோஸ் கருப்பு, மன்ஹட்டன் கிரே மற்றும் டிஸ்ட்ரிக்ட் பச்சை ஆகிய வண்ணங்களில் கிடைக்கின்றன. புதிய சிக்னெச்சர் வேரியண்ட்கள் ஆடி க்யூ3 மற்றும் க்யூ5 கார்களின் விலைமிக்க டெக்னாலஜி வேரியண்ட்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளன.

audi q3 and q5 signature edition launch

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய ஆடி க்யூ3 மற்றும் க்யூ5 சிக்னெச்சர் எடிசன் கார்கள் பிரத்யேக வடிவமைப்பு மற்றும் பிரீமியம் உபகரணங்களின் கலவையாக உள்ளன. ஆதலால், இந்த விலை குறைவான ஆடி எஸ்யூவி கார்களை மற்றவர்களிடம் இருந்து மாறுப்பட்ட தோற்றத்தில் பெற விரும்புபவர்கள் புதிய சிக்னெச்சர் எடிசனை வாங்கலாம். இந்த சிக்னேச்சர் எடிசன்களுக்கு உண்டான பாகங்களை ஆடி ஒரிஜினல் ஆக்சஸரீஸ்களாகவும் பெறலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, November 10, 2025, 20:17 [IST]
English summary
Audi india launches q3 and q5 signature edition cars price features all details here
மேலும்... #audi #new launches #new cars #suv car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X