மே15ல் இருந்து ஆடி கார் இந்தியால விற்பனையாறது சந்தேகம்தான்! பணக்காரர்களே விரும்பாத செயலை செய்ய போறதா அறிவிப்பு
உலக புகழ்பெற்ற சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான ஆடி, (Audi) யாரும் விரும்பாத செயலை வருகின்ற மே 15 ஆம் தேதி அன்று செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அது அதன் புதிய கார்களின் விலையை உயர்த்த இருப்பதாகவே தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்தியாவில் ஏற்கனவே பலருக்கு ஆடியின் தயாரிப்புகள் (சொகுசு கார்கள்) எட்டாக் கனியாக உள்ளன. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் பணக்காரர்களால் மட்டுமே நுகரக் கூடிய தயாரிப்பாக ஆடி நிறுவனத்தின் ஆடம்பர கார்கள் இருக்கின்றன.
இந்த மாதிரியான சூழலிலேயே தன்னுடைய வாகனங்களை மேலும் எட்டா உயரத்திற்கு எடுத்துச் செல்லும் விதமாக அதன் விலைகளை உயர்த்தும் நடவடிக்கையில் ஆடி நிறுவனம் களமிறங்கி இருக்கின்றது. 2 சதவீதம் வரையே ஆடி நிறுவனம் அதன் கார்களின் விலையை உயர்த்த திட்டமிட்டு இருக்கின்றது.

வாகன கட்டுமானச் செலவு அதிகரித்திருப்பதைக் காரணம் காட்டியே இந்த விலையை உயர்வை செய்ய இருப்பதாக அது அறிவித்திருக்கின்றது. இது லேசாக நிறுவனத்தின் வாகன விற்பனையில் பதம் பார்க்கும் என நம்பப்படுகின்றது. ஆனால், இந்திய பணக்காரர்களுக்கு 2 சதவீத விலை உயர்வு என்பது ஒரு பொருட்டே அல்ல, ஆகையால், நிறுவனத்தின் ஆடம்ப கார்களின் விற்பனையில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது என்கிற கருத்தும் சந்தையில் உள்ளது.
இதையே ஆட்டோத்துறை சார்ந்த வல்லுநர்களும் தெரிவிக்கின்றனர். அதேபோல், ஆடி நிறுவனம் இந்தியாவில் விலையை உயர்த்தவில்லை, கடந்த ஏப்ரல் மாதத்தில் இன்னும் பல நிறுவனங்கள் விலை உயர்வைச் செய்து இந்தியர்களை அதிரவிட்டது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், ஆடி நிறுவன கார்களின் விற்பனையில் எந்தவொரு பாதிப்பும் இருக்காது என்பதே எங்களின் கருத்தாகவும் உள்ளது.

இப்போதைய நிலவரப்படி ஆடி நிறுவனம் இந்தியாவில் ஏ4 (A4), ஏ6 (A6), க்யூ3 (Q3), க்யூ3 ஸ்போர்ட்பேக் (Q3 Sportback), க்யூ5 (Q5), க்யூ7 (Q7), க்யூ8 (Q8), எஸ்5 ஸ்போர்ட்பேக் (S5 Sportback), ஆர்எஸ் க்யூ8 (RS Q8), க்யூ8 இ-ட்ரான் (Q8 e-tron), க்யூ8 ஸ்போர்ட்பேக் இ-ட்ரான் (Q8 Sportback e-tron), இ-ட்ரான் ஜிடி (e-tron GT) மற்றும் ஆர்எஸ் இ-ட்ரான் ஜிடி (RS e-tron GT) ஆகிய கார் மாடல்களையே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.
இவற்றின் விலையிலேயே 2 சதவீதம் வரை உயர்வைச் செய்ய இருக்கின்றது, ஆடி. ஆகையால், ஏற்கனவே விலை உயர்ந்த கார் மாடலாக இருக்கும் இவை இன்னும் அதிக காஸ்ட்லியானவையாக மாற இருக்கின்றன. இது ஆடி கார் காதலர்களைச் சற்றே துக்கத்தில் ஆழ்த்தும் வகையில் அமைந்திருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஆடி நிறுவன கார்கள் விலை உயர இருப்பது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. அதேவேளையில், வருகின்ற மே 15க்குள் அதன் கார்களை வாங்குவர்களுக்கு உயர்த்தப்படாத விலையிலேயே அந்த நிறுவனம் வாகனங்களை விற்பனைச் செய்ய இருக்கின்றது. ஆகையால், இந்த மாத முதல் பாதியில் கணிசமான அளவில் ஆடி கார்களின் விற்பனை சற்றே அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதை அறிய இன்னும் சில காலம் காத்திருந்து ஆக வேண்டும்.


Click it and Unblock the Notifications








