ஆடி நிறுவனத்தில் இருந்து வந்தாலே தரமான கார் தான்... ஆர்.எஸ் க்யூ8 விற்பனைக்கு அறிமுகம்!!

ஆடி இந்தியா (Audi India) நிறுவனம் புதியதாக ஆர்.எஸ் க்யூ8 பெர்ஃபார்மன்ஸ் (RS Q8 Performance) காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இருப்பதிலேயே விலைமிக்க ஆடி காராக இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ஆடி காரை பற்றிய கூடுதல் விபரங்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

ஜெர்மனி நாட்டை சேர்ந்த பிரபலமான லக்சரி கார் நிறுவனமாக விளங்கும் ஆடி நிறுவனத்தில் இருந்து அவ்வப்போது புது, புது லக்சரி கார்கள் அறிமுகம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் புதியதாக ஆடி ஆர்.எஸ் என்கிற லக்சரி கார் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

audi rsq8 launched in india

புதிய ஆடி ஆர்.எஸ் க்யூ8 காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது ரூ.2.49 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஆடி காரை இப்போது முன்பதிவு செய்தாலும், டெலிவிரி பெறுவதற்கு குறைந்தது 6 மாதங்கள் ஆகும். ஏனெனில், அடுத்த 6 மாதத்திற்கான ஆடி ஆர்.எஸ் க்யூ8 கார்கள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன.

இந்த புதிய ஆடி காரில் 4.0 லிட்டர் ட்வின்-டர்போசார்ஜ்டு வி8 பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 640 பிஎச்பி மற்றும் 850 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் ஆடி நிறுவனத்தின் குவாட்ரோ ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டம் மற்றும் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

0-இல் இருந்து 100kmph வேகத்தை வெறும் 3.5 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய இந்த புதிய ஆடி காரின் டாப்-ஸ்பீடு 305kmph ஆகும். ஆடி நிறுவனத்தின் வேகமான எஸ்யூவி காராக கருதப்படும் புதிய ஆர்.எஸ் க்யூ 8 கார் ஆனது கடந்த 2024இல் நடத்தப்பட்ட சோதனை ஓட்டத்தில் லேப் நேரத்தை வெறும் 7.36 வினாடிகளில் முடித்தது.

audi rsq8 launched in india

தோற்றத்தை பொறுத்தவரையில், முரட்டுத்தனமான தோற்றத்தை புதிய ஆடி ஆர்.எஸ் க்யூ8 கார் கொண்டுள்ளது. இந்த காரின் முன்பக்கத்தில் மற்றும் பின்பக்கத்தில் ஆர்.எஸ் கார்களுக்கே உண்டான பிரத்யேகமான பம்பர் பொருத்தப்பட்டுள்ளது. அவற்றுடன், ரூஃப்-இல் பொருத்தப்பட்ட ஸ்பாய்லர் மற்றும் ஆர்.எஸ் எக்ஸாஸ்ட் குழாய் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த ஆடி காரில் பின்பக்கத்தை காட்டும் வெளிப்புற கண்ணாடிகள் மேட் கிரே நிறத்தில் உள்ளன. அத்துடன், 23-இன்ச்சில் 6-ஒய்-ட்வின்-ஸ்போக் அலாய் சக்கரங்கள் உள்ளிட்டவை பொருத்தப்பட்டுள்ளன. மைதோஸ் கருப்பு, கிளாசியர் வெள்ளை, டேடோனா கிரே, அஸ்காரி நீலம், சில்லி ரெட், சாகிர் கோல்டு, ஸ்டால்லைட் சில்வர் மற்றும் வெயிட்டோமோ நீலம் உள்ளிட்ட கலர் ஆப்ஷன்களில் இந்த புதிய ஆடி காரை வாங்காலாம்.

இவற்றுடன் ஆடி நிறுவனத்தின் பிரத்யேகமான கலர் ஆப்ஷன்களும் புதிய ஆர்.எஸ் க்யூ8 காரில் கிடைக்கும். காருக்கு உள்ளே வகோமா லெதரினால் ஃபினிஷ் செய்யப்பட்ட முன் இருக்கைகள், 4-ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல் சிஸ்டம், 360-டிகிரி கேமரா சிஸ்டத்துடன் பார்க் அசிஸ்ட் பிளஸ் உள்ளிட்டவற்றுடன், பனோராமிக் சன்ரூஃப், வயர்லெஸ் போன் சார்ஜர் உள்ளிட்டவற்றை கூடுதல் ஆப்ஷன்களாக பெறலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆடி கார்களுக்கு இந்தியாவில் தொடர்ந்து வரவேற்பு அதிகரித்து வருகிறது. ஆதலால், புதிய ஆர்.எஸ் க்யூ8 காருக்கும் நிறைய கஸ்டமர்கள் குவிவார்கள் என எதிர்பார்க்கிறோம். 6 மாதத்திற்கு உண்டான ஆர்.எஸ் க்யூ8 கார்கள் ஏற்கனவே புக் செய்யப்பட்டுவிட்டது இந்த காருக்கான வரவேற்பை காட்டுகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, February 17, 2025, 17:18 [IST]
English summary
Audi rs q8 launched in india price features all details here
மேலும்... #audi #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+