சீனாவுக்குனே ஸ்பெஷலா ஒரு காரை தயார் செய்திருக்காங்க.. தயாரிச்சது சீன நாட்டு நிறுவனம் கிடையாது..
முன்னணி கார் உற்பத்தி நிறுவனம் ஒன்று சீனர்களுக்கு என ஸ்பெஷல் கார் மாடல் ஒன்றை தயார் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த காரை சீனாவில் மட்டுமே விற்பனைச் செய்யவும் அந்த நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாகக் கூறப்படுகின்றது. இந்த செயலில் ஈடுபட்டு இருப்பது சீனா நாட்டைச் சேர்ந்த நிறுவனம் இல்லை என்பது கவனிக்கத்தகுந்தது. உலக புகழ்பெற்ற சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான ஆடி (Audi)-யே அந்த நிறுவனம். அது சீன சந்தைக்காக 'ஆடி' (AUDI) எனும் ஓர் புதிய துணை பிராண்டையே உருவாக்கி இருக்கின்றது.
இந்த பிராண்டின்கீழ் உருவாக்கப்பட்ட இ-காரையே அது தற்போது வெளியீடு செய்திருக்கின்றது. ஆமாங்க, இதன்கீழ் மின்சார வாகனங்களையே அது விற்பனைச் செய்ய இருக்கின்றது. நிறுவனத்தின் இந்த செயலுக்கு, தன்னுடைய சீன இருப்பை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்கிற காரணமே இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் அடிப்படையில் சீனாவின் புகழ்பெற்ற வாகன உற்பத்தி நிறுவனமான சைக் மோட்டார் (SAIC Motor) உடனும் கை கோர்த்திக்கின்றது. இந்த கூட்டணியின் கீழேயே இப்போது வெளியீடு செய்யப்பட்டு அந்த மின்சார கார் உருவாக்கப்பட்டு இருக்கின்றது. ஆடி இ5 ஸ்போர்ட்பேக் (Audi E5 Sportback) எனும் காரையே ஆடி மற்றும் சைக் மோட்டார் இணைந்து தயார் செய்திருக்கின்றனர்.
இது ஓர் அதிக ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்ட மற்றும் அதிக தொழில்நுட்ப வசதிகளைத் தாங்கிய மின்சார கார் மாடல் ஆகும். மேலும், இந்த நான்கு டோர்களைக் கொண்ட மின்சார காரை நான்கு விதமான ஆற்றலை உருவாக்கும் திறனின்கீழ் விற்பனைக்கு வழங்க ஆடி நிறுவனம் திட்டமிட்டு இருப்பது தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களால் தெரிய வந்திருக்கின்றது.

300 பிஎச்பி, 408 பிஎச்பி, 578 பிஎச்பி மற்றும் 787 பிஎச்பி ஆகியவையே அவை ஆகும். இதுமட்டுமல்ல பின் வீல் இயக்கம் மற்றும் அனைத்து வீல் இயக்கம் இந்த ஆப்ஷன்களும் ஆடி இ5 ஸ்போர்ட்பேக் காரில் வழங்கப்பட இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.
பேட்டரி பேக் பற்றிய முழு விபரங்கள் வெளியாகவில்லை. இருப்பினும், இதில் 100 kWh திறன் கொண்ட பேட்டரி பேக் ஆப்ஷன் வழங்கப்பட இருப்பதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஓர் முழு சார்ஜில் 770 கிமீ தூரம் வரை ரேஞ்ச் தரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதையே சீனாவின் சிஎல்டிசி (China Light Duty Vehicle Test Cycle)-யும் உறுதிப்படுத்தி இருக்கின்றது. இதுமட்டுமில்லைங்க இந்த காரை 800-volt அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும் விதமாகவும் தயார் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் வாயிலாக சார்ஜ் செய்யும்பட்சத்தில் வெறும் 10 நிமிடங்களிலேயே 370 கிமீ தூரம் பயணிப்பதற்கான சார்ஜை அது ஏற்றிக் கொள்ளும் என்பது கவனிக்கத்தகுந்தது.
இதுமட்டுமில்லைங்க, 27 அங்குல 4கே தொழில்நுட்ப வசதிக் கொண்ட திரை, ஆடியின் 360 அசிஸ்டட் டிரைவிங் வசதி போன்றவற்றையும் இந்த காரில் வழங்கி இருக்கின்றனர். இதன்கீழ் அதிக தூரத்தையும் ஆராயும் வசதிக் கொண்ட ரேடார்கள், லிடார், 12 அல்ட்ரா சோனிக் சென்சார்கள் மற்றும் கேமிராக்கள் என பல அம்சங்களை வழங்கப்பட்டு இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே பார்த்த அம்சங்களுடனேயே ஆடி இ5 ஸ்போர்ட்பேக் கார் சீன சந்தைக்காக தயாராகி இருக்கின்றது. சீன சந்தைக்கான இந்த காரை நாம் ஏன் இங்கு பார்க்க வேண்டும் என்கிற கேள்வி உங்களுக்கு எழும்பி இருக்கலாம். ஆடி நிறுவனம் இதுபோன்று ஒரே ஒரு நாட்டிற்கு ஓர் பிராண்டை உருவாக்கி அதன்கீழ் காரை உருவாக்குவது முதல் முறையாகும். இதனாலேயே இந்த தகவல் உலக அளவில் கவனத்தை ஈர்த்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications









