நாடே பார்க்க பிஎம்டபிள்யூ களமிறக்கிய கார்... விலையை பார்த்தால்தான் மயக்கம் வருது!!

பிஎம்டபிள்யூ (BMW) நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போ 2025 (Auto Expo 2025) கண்காட்சியில் தனது தயாரிப்புகளை தொடர்ச்சியாக வெளியீடு செய்து வருகிறது. கண்காட்சியின் முதல் நாளில் ஐ.எக்ஸ்1 (iX1) என்கிற எலக்ட்ரிக் கார் (Electric Car)-ஐ காட்சிப்படுத்திய பிஎம்டபிள்யூ நிறுவனம், 2வது நாளிலும் தனது புதிய கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. அதுதான், பிஎம்டபிள்யூ எக்ஸ்3 (X3) ஆகும்.

சொகுசு கார்களை விற்பனை செய்வதில் உலகளவில் பிரபலமாக விளங்கும் பிஎம்டபிள்யூ நிறுவனம் கடந்த 2024 ஜூன் மாதத்தில் 4ஆம் தலைமுறை எக்ஸ்3 காரை உலகளவில் வெளியீடு செய்தது. அதனை தொடர்ந்து தற்போது ஆட்டோ எக்ஸ்போ 2025 கண்காட்சியில் புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்3 கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

bmw india launched x3 car

இந்த புதிய பிஎம்டபிள்யூ காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.75.80 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் கார் உடன் ஒப்பிடுகையில் புதிய எக்ஸ்3 ஆனது வெளிப்பக்கத்திலும் சரி, உட்பக்கத்திலும் சரி முற்றிலும் புதுமையான டிசைனை கொண்டுள்ளது. இருப்பினும், நீளம், அகலம், உயரம் உள்ளிட்டவற்றை பொறுத்தவரையில் இரண்டும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக உள்ளன.

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்3 காரின் முன்பக்கத்தில் பெரிய அளவிலான க்ரில், புதிய டி.ஆர்.எல்-கள் உடன் மெல்லியதான வடிவில் எல்இடி ஹெட்லைட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதேபோல், 19-இன்ச் அலாய் சக்கரங்களின் டிசைனும் புதியதாக வழங்கப்பட்டுள்ளது. காரின் பின்பக்கத்தை பொறுத்தவரையில், பிஎம்டபிள்யூ எக்ஸ்.எம் காரை புதிய எக்ஸ்3 ஞாபகப்படுத்துகிறது.

bmw india launched x3 car

இதற்கேற்ப, காரின் பின்பக்கத்தில் Y-வடிவில் டெயில்லைட்கள் வழங்கப்பட்டுள்ளன. பின்பக்கத்தில் நம்பர் பிளேட் பொருத்தும் பகுதி ஆனது பம்பருக்கு கீழே மாற்றப்பட்டுள்ளது. 2025 பிஎம்டபிள்யூ எக்ஸ்3 காருக்கு உள்ளே புதிய டிசைனில் டேஸ்போர்டு மற்றும் கேபினை சுற்றிலும் விளக்குகள் வழங்கப்பட்டுள்ளன. புதிய டிசைனிலான டேஸ்போர்டில் 14.9-இன்ச் டச் ஸ்க்ரீன் மற்றும் 12.3-இன்ச் ஃபுல் டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது.

இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்துடன் 15-ஸ்பீக்கர் ஹர்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம் இணைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பிஎம்டபிள்யூ காரில் மற்ற சிறப்பம்சங்களாக வயர்லெஸ் போன் சார்ஜர், க்ரூஸ் கண்ட்ரோல், பனோராமிக் சன்ரூஃப் மற்றும் 3-ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல் உள்ளிட்டவையும், பயணிகளின் பாதுகாப்புக்கு அதிக எண்ணிக்கையில் ஏர்பேக்குகள், அடாஸ் (ADAS), எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் மற்றும் 360-டிகிரி கேமரா உள்ளிட்டவையும் வழங்கப்படுகின்றன.

bmw india launched x3 car

புதிய எக்ஸ்3 காரில் 2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2 லிட்டர் டீசல் என்ஜின் என 2 விதமான என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த இரு என்ஜின் ஆப்ஷன்கள் உடனும் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கிடைக்கும். மேலும், இந்த புதிய பிஎம்டபிள்யூ காரை ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டத்துடன் வாங்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிஎம்டபிள்யூ கார்களுக்கு இந்தியாவில் எப்போதுமே நல்ல வரவேற்பு உள்ளது. இதனை மேலும் அதிகப்படுத்தும் விதமாக புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்3 கார் ஆற்றல்மிக்க என்ஜின்கள் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நாடே உற்றுக் கவனிக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், எக்ஸ்3 காரின் விற்பனை சிறப்பாகவே இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.

More from DriveSpark

Article Published On: Saturday, January 18, 2025, 20:35 [IST]
English summary
Auto expo 2025 bmw launched x3 price features engine all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X