சீன பொருட்களுக்கு தடை எல்லாம் சும்மா தானா? மத்திய அரசின் உதவியுடன் இந்தியா வரும் சீன கார்!
பிஒய்டி (BYD), சீனாவை சேர்ந்த பிரபலமான எலக்ட்ரிக் கார் நிறுவனம். இந்தியாவில் கடந்த 2021ஆம் ஆண்டில் இருந்து தனது எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகிறது. அவ்வப்போது நம் நாட்டில் புது, புது எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்துவரும் பிஒய்டி நிறுவனம் டெல்லியில் நடைபெற்றுவரும் பாரத் மொபிலிட்டி க்ளோபல் ஆட்டோ எக்ஸ்போ 2025 (Bharat Mobility Global Auto Expo 2025) கண்காட்சியில் பங்கேற்றுள்ளது.
இந்த சீன எலக்ட்ரிக் கார் நிறுவனத்தில் இருந்து ஆட்டோ எக்ஸ்போ 2025 கண்காட்சியில் சில தனித்துவமான கார்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று, சீ லயன் 6 (SeaLion 6) ஆகும். இந்த 2025ஆம் வருடத்திற்கான ஆட்டோ எக்ஸ்போவில் பிஒய்டி நிறுவனத்தில் இருந்து சீலயன் எலக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்படும் என்பது நாம் எதிர்பார்த்த ஒன்றுதான்.

இருப்பினும், ஆட்டோ எக்ஸ்போவில் இரு விதமான சீ லயன் கார்களை பிஒய்டி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அவற்றுள் ஒன்றான சீ லயன் 7 எலக்ட்ரிக் காரை பற்றி ஏற்கனவே நமது செய்தித்தளத்தில் பார்த்திருந்த நிலையில், சீ லயன் 6 காரும் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த சீன காரும் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவரப்படுவதற்கு வாய்ப்புள்ளது.
பிஒய்டி சீ லயன் 7 காரை போன்று, சீ லயன் 6 ஆனது எலக்ட்ரிக் கார் கிடையாது. இது ஒரு பிளக்-இன் ஹைப்ரீட் கார் (Plug-in-hybrid Car) ஆகும். அதாவது, இந்த காரில் பெட்ரோல் என்ஜின் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் இரண்டும் வழங்கப்பட்டுள்ளது. இவற்றை தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளலாம். தோற்றத்தை பொறுத்தவரையில், பிஒய்டி சீ லயன் 6 ஆனது கிட்டத்தட்ட பிஒய்டி சீல் காரை போன்றே உள்ளது.

அதாவது, முன்பக்கத்தில் C-வடிவில் எல்இடி ஹெட்லைட்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், முன்பக்க பம்பரின் டிசைன் ஆனது வேறுப்படுகிறது. ஏனெனில், புதிய சீ லயன் 6 காரில் கிடைமட்டமான ஸ்லாட்கள் மற்றும் க்ரோம்கள் உடன் முன்பக்க கிரில் பகுதி ஆனது வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்பக்க பம்பருக்கு கீழே கருப்பு நிறமும், அதற்கும் கீழே சில்வர் நிறத்திலான ஸ்கிட் பிளேட்டும் வழங்கப்பட்டுள்ளது.
காரின் பக்கவாட்டில், 19-இன்ச்சில் இரு நிறங்களில் அலாய் சக்கரங்கள், க்ரோம்-ஆல் சூழப்பட்ட ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் சில்வர் நிறத்தில் ரூஃப் ரெயில்ஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. காரின் பின்பக்கத்தில் எல்இடி டெயில்லைட்கள் இரண்டும் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டுள்ளன. பின்பக்க டெயில்கேட்டிற்கு கீழே கருப்பு நிறத்தில் ட்ரிம் வழங்கப்பட்டுள்ளது.

பிஒய்டி சீ லயன் 6 காருக்கு உள்ளே 3-ஸ்போக் ஸ்டேரிங் சக்கரம், சுழற்றக்கூடிய டச் ஸ்க்ரீன், இரு நிறங்களில் இருக்கைகள் வழங்கப்பட்டிருக்க, இந்த பிளக்-இன் ஹைப்ரீட் காரில் இரு விதமான என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. அவையாவன, 1.5 லிட்டர் பிளக்-இன் ஹைப்ரீட் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் பிளக்-இன் டர்போ-பெட்ரோல் என்ஜின் ஆகும். இதில், சாதாரணமான என்ஜின் இயக்க ஆற்றலை முன் சக்கரங்களுக்கும், டர்போ என்ஜின் அனைத்து சக்கரங்களுக்கும் வழங்குகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலக்ட்ரிக் காருக்கு மெல்ல மெல்ல வரவேற்பு அதிகரித்து வருவதை நன்கு பயன்படுத்திக் கொண்டுவரும் கார் நிறுவனங்களுள் பிஒய்டி ஒன்றாகும். இந்த நிறுவனத்தின் அட்டோ 3 மற்றும் சீல் எலக்ட்ரிக் கார்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில், புதுமையான முயற்சியாக இந்தியாவில் முதல் பிளக்-இன் ஹைப்ரீட் காரை களமிறக்குகிறது. இதற்கு எந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications









