காருக்குள் ஏசி எல்லாம் அந்த காலம்... லாரியில் கூட இப்போ வந்தாச்சு! உடம்பு வலி சுத்தமா இருக்காது

வால்வோ ஐச்சர் கமர்ஷியல் வாகனங்கள் (Volvo Eicher Commercial Vehicles - VECV) நிறுவனத்தில் இருந்து 2025 ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் பல்வேறு கமர்ஷியல் வாகனங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதனால், கண்காட்சியில் இந்த நிறுவனத்தின் பெவிலியனில் எப்போது கூட்டம் அதிகமாகவே உள்ளது. அதிலிலும் VECV நிறுவனம் காட்சிப்படுத்தி இருப்பது எல்லாம் பெரிய பெரிய வாகனங்கள் என்பதால், அவற்றை பார்க்க இரு கண்கள் போதவில்லை. இந்த வகையில் கண்காட்சியில் இடம்பெற்றுள்ள பிரம்மாண்டமான ஐச்சர் லாரியை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

ஐரோப்பாவை சேர்ந்த வால்வோ க்ரூப் (Volvo Group)-உம், இந்தியாவின் டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஐச்சர் நிறுவனமும் 2008ஆம் ஆண்டில் இருந்து கூட்டணியில் இருந்து வருகின்றன. இரண்டுமே கமர்ஷியல் வாகனங்களை விற்பனை செய்யக்கூடிய நிறுவனங்கள் என்பதால், இரண்டிற்கும் நன்றாக ஒத்துப் போகிறது.

eicher pro 8035xm tipper truck

இந்த இரு நிறுவனங்கள் இணைந்துதான், சுருக்கமாக VECV எனப்படும் வால்வோ ஐச்சர் கமர்ஷியல் வாகனங்கள் உருவாக்கப்பட்டது. இவ்வாறு இரு நிறுவனங்கள் கூட்டணி சேரும்போது, அது அவை இரண்டிற்கும் பல விதங்களில் நன்மை பயக்கக்கூடியதாக அமைகிறது. அவ்வாறு, 2025 ஆட்டோ எக்ஸ்போவில் இந்த இரு நிறுவனங்களும் ஒன்றாக இணைந்துக் கலந்துக் கொண்டுள்ளன.

இதில் ஐச்சர் நிருவனத்தில் இருந்து காட்சிக்கு நிறுத்தப்பட்டிருக்கும் லாரிகளுள் ஒன்று, ஐச்சர் புரோ 8035எக்ஸ்.எம் இ-ஸ்மார்ட் டிப்பர் லாரி ஆகும். போட்டோக்களில் இந்த டிப்பர் லாரியின் படத்தை பார்க்கும்போதே தெரிந்திருக்கும், இது எந்தவொரு சவாலான மற்றும் கடுமையான சூழலிலும் பயன்படுத்தக் கூடிய வகையில் உருவாக்கப்பட்ட கனரக லாரி ஆகும்.

eicher pro 8035xm tipper truck

சுமார் 35 டன் எடை கொண்ட இந்த புதிய 8035எக்ஸ்.எம் இ-ஸ்மார்ட் டிப்பர் லாரி ஆனது 16 கம் (Cum) (ராக் (Rock)), 18 கம் (ராக்), 20 கம் (பாக்ஸ் (Box)), 23 கம் (பாக்ஸ்) என 4 விதமான உடலமைப்புகளில் விற்பனை செய்யப்பட உள்ளது. மொத்தம் 12 சக்கரங்களை கொண்ட இந்த ஐச்சர் லாரியில் 240 ஆம்பியர் திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்படுகிறது.

இந்த பேட்டரி ஆனது லாரியினுள் இருக்கும் மற்ற மின்சாதனங்களை இயங்க வைக்கும் வேளையில், இந்த லாரியை இயங்க வைக்க அளவில் பெரியதான 7698சிசி VEDX8 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக சுமார் 350 எச்பி மற்றும் 1350 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

eicher pro 8035xm tipper truck

என்ஜின் உடன் ஈட்டன் நிறுவனத்தின் 9-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. தொழிற்நுட்ப அம்சங்களை பொறுத்தவரையில், எம்-பூஸ்டர்+, க்ரூஸ் கண்ட்ரோல், ஃபியுல் கோச்சிங் மற்றும் ஐச்சர் லைவ் உள்ளிட்ட தொழிற்நுட்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஐச்சர் புரோ 8035எக்ஸ்.எம் லாரியில் தொழிற்சாலையிலேயே படுக்கையும், ஏசி வசதியும் வழங்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கமர்ஷியல் வாகனங்களை உற்பத்தி செய்வதில் ஐச்சர் நிபுணத்துவம் வாய்ந்த நிறுவனமாக உள்ளது. வால்வோவின் உதவியுடன் ஐச்சரின் கமர்ஷியல் வாகனங்கள் பல வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த டிப்பர் லாரியின் விலை ரூ.65 லட்சம் என்கிற அளவில் நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கிறோம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 22, 2025, 11:55 [IST]
English summary
Auto expo 2025 eicher pro 8035xm tipper truck showcased
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X