ஆட்டோவை பார்த்து சாதாரணமா நெனைக்காதீங்க... 500 கிலோ எடையை அசால்ட்டா தூக்கிட்டு போகுமாம்!!
2025 பாரத் மொபிலிட்டி குளோபல் ஆட்டோ எக்ஸ்போ (Bharat Mobility Global Auto Expo) கண்காட்சியில் பங்கேற்றுள்ள இவி ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுள் கோதாவரி எலக்ட்ரிக் மோட்டார்ஸ் பிரைவேட் லிமிடெட் (Godawari Electric Motors Private Limited) ஒன்றாகும். இந்த நிறுவனத்தில் இருந்து எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் (Electric Scooters) மட்டுமின்றி, எலக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஷா (Electric Auto Richshaw)-களும் காட்சிக்கு நிறுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில், கண்காட்சியில் பார்வையாளர்களை கவர்ந்த கோதாவரி எப்லு (Eblu) எலக்ட்ரிக் ஆட்டோவை பற்றித்தான் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சட்டீஸ்கர் மாநிலம், ராய்பூரை தலைமை இடமாக கொண்டு செயல்படும் கோதாவரி நிறுவனம் தனது எலக்ட்ரிக் வாகனங்களை எப்லு பிராண்டின் கீழ் விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனத்திற்கு ராய்பூரில் 1 லட்சம் சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்டமான உற்பத்தி தொழிற்சாலை உள்ளது.

2025 ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் கோதாவரி நிறுவனத்தில் இருந்து நிறைய எப்லு வாகனங்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. அவற்றுள், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் எலக்ட்ரிக் ஆட்டோக்கள் அடங்குகின்றன. அவற்றுள் ஒன்று, எப்லு ரெய்னோ (Reino) ஆகும். இது, 3-சக்கரங்கள் உடன் எலக்ட்ரிக்கில் இயங்கக்கூடிய சரக்கு ஆட்டோ ஆகும்.
எப்லு ரெய்னோ எலக்ட்ரிக் சரக்கு ஆட்டோ முதல்முறையாக 2023ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது 2025 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டு இருப்பது, மேம்படுத்தப்பட்ட எப்லு ரெய்னோ எலக்ட்ரிக் ஆட்டோ ஆகும். 2023இல் அறிமுகம் செய்யப்பட்ட சமயத்தில் எப்லு ரெய்னோவின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது ரூ.3 லட்சத்து 34,999 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

ஒரேயொரு வேரியண்ட்டில் விற்பனை செய்யப்படும் எப்லு ரெய்னோ எலக்ட்ரிக் ஆட்டோவில் 10KWh திறன் கொண்ட 200 ஆம்பியர் லித்தியம்-இரும்பு பேட்டரி பொருத்தப்படுகிறது. இதனை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால், அதிகப்பட்சமாக 167 கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம் என்கிறது கோதாவரி நிறுவனம். இந்த 10KWh பேட்டரி பொருத்தப்படும் எலக்ட்ரிக் மோட்டார் ஆனது அதிகப்பட்சமாக 8 கிலோவாட்ஸ் மற்றும் 36 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வழங்கக்கூடியதாக உள்ளது.
இந்த 3-சக்கர சரக்கு ஆட்டோ ரிக்ஷா ஆனது வழக்கமான ஆட்டோ ரிக்ஷாக்களை காட்டிலும் அகலம் குறைவானது ஆகும். ரெய்னோ மட்டுமின்றி, மற்ற எப்லு ஆட்டோ ரிக்ஷாக்களும் அகலம் குறைவாக மெல்லியதான தோற்றத்தில்தான் உருவாக்கப்படுகின்றன. இதற்கேற்ப எப்லு ஆட்டோ ரிக்ஷாக்கள் நன்கு நீளமானவைகளாக வடிவமைக்கப்படுகின்றன.

968 கிலோ எடை கொண்ட எப்லு ரெய்னோ வாகனத்தில் அதிகப்பட்சமாக 500 கிலோ வரையில் எடை கொண்ட பொருட்களை எடுத்து செல்லலாம். தற்சமயம் விற்பனையில் உள்ள எப்லு ரெய்னோ எலக்ட்ரிக் ஆட்டோவிற்கு 5 வருட/ 80 ஆயிரம் கிமீ உத்தரவாதத்தை கோதாவாரி மோட்டார்ஸ் நிறுவனம் வழங்குகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்வதில் கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக ஈடுப்பட்டுவரும் அனுபவம் வாய்ந்த நிறுவனமாக கோதாவரி எலக்ட்ரிக் மோட்டார்ஸ் விளங்குகிறது. இந்த நிறுவனத்தின் எலக்ட்ரிக் வாகனங்களை சார்ஜிங் செய்வதற்கு போதிய சார்ஜிங் வசதிகள் இல்லை என்பதுதான் ஒரே குறையாக உள்ளது. அதனை சரி செய்துவிட்டால், இந்த நிறுவனத்தின் எலக்ட்ரிக் வாகனங்களை தாராளமாக வாங்கலாம்.


Click it and Unblock the Notifications









