டாடா எலக்ட்ரிக் கார் எல்லாம் இனி இப்படித்தான் இருக்கும்! இந்திய சாலைகள் வேற லெவலுக்கு மாற போகுது!!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தில் இருந்து ஆட்டோ எக்ஸ்போ 2025 கண்காட்சியில் 'அவின்யா' (Avinya) என்கிற பெயரில் புதிய எலக்ட்ரிக் கார் கான்செப்ட் (Electric Car Concept) வெளியீடு செய்யப்பட்டுள்ளது. தனது கவர்ச்சிக்கரமான தோற்றத்தின் மூலமாக ஆட்டோ எக்ஸ்போவில் பலரது கவனத்தை ஈர்த்துள்ள புதிய அவின்யா கான்செப்ட்டை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்வதில் கடந்த சில வருடங்களாகவே தீவிரமாக உள்ளது. இதற்கேற்ப இந்த நிறுவனத்தின் எலக்ட்ரிக் கார்களுக்கும் தொடர்ந்து வரவேற்பு அதிகரித்து வருகிறது. இதனை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புது, புது எலக்ட்ரிக் கார்களை தொடர்ச்சியாக அறிமுகம் செய்து வருகிறது.

tata motors showcased avinya ev

மேலும், எதிர்காலத்தில் கொண்டுவர உள்ள எலக்ட்ரிக் கார்களுக்கான கான்செப்ட்களையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. குறிப்பாக, 2 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ஆட்டோ எக்ஸ்போவில் டாடா மோட்டார்ஸில் இருந்து குறைந்தது ஒரு எலக்ட்ரிக் கார் கான்செப்ட்டை ஆவது பார்க்க முடியும். அந்த வகையில், இந்த 2025 ஆட்டோ எக்ஸ்போவிலும் அவென்யா என்கிற எலக்ட்ரிக் கார் கான்செப்ட்டை டாடா மோட்டார்ஸ் வெளியீடு செய்துள்ளது.

கடந்த 2023 ஆட்டோ எக்ஸ்போவிலும் அவின்யா இவி கான்செப்ட் காட்சிப்படுத்தப்பட்டு இருந்த நிலையில், தற்போது மீண்டும் கான்செப்ட்டாகவே இந்த எலக்ட்ரிக் கார் காட்சிக்கு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், அவின்யா இவி கான்செப்ட்டில் உருவாக்கப்பட்ட எலக்ட்ரிக் காரின் அறிமுகத்தை அடுத்த 2026ஆம் ஆண்டில் எதிர்பார்க்கிறோம். இந்த கான்செப்ட்டில் இருந்து உருவாக்கப்படும் அவின்யா இவி எலக்ட்ரிக் காரின் தோற்றத்தை சற்று வேறுப்பட்டதாக எதிர்பார்க்கிறோம்.

tata motors showcased avinya ev

இருப்பினும், நீளம், அகலம் மற்றும் உயரத்தில் பெரியதாக மாற்றம் இருக்காது. ஆட்டோ எக்ஸ்போவில் டாடா அவின்யா இவி கான்செப்ட் ஆனது அளவில் நன்கு பெரியதாக டிராவல் வேன் போன்றதான தோற்றத்தை கொண்டுள்ளது. ஜாகுவார் லேண்ட் ரோவரின் எலக்ட்ரிக் மாடுலர் ஆர்ச்சிடெக்சர் பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்பட்ட இந்த கான்செப்ட்டில் இருந்து பல்வேறு டாடா எலக்ட்ரிக் கார்கள் உருவாக்கப்பட உள்ளன.

இந்த அவின்யா இவி கான்செப்ட்டை போன்றுதான் அதில் இருந்து உருவாக்கப்படும் எலக்ட்ரிக் கார்கள் இருக்கும் என்று அர்த்தம் இல்லை. வெவ்வேறான உடலமைப்புகளிலும் எலக்ட்ரிக் கார்களை உருவாக்க முடியும். அவின்யா இவி கான்செப்ட்டின் வெளிப்பக்க தோற்றம் மட்டுமின்றி, உட்புற கேபினின் தோற்றமும் மிகவும் அட்வான்ஸான ஸ்டைலில் உள்ளது.

tata motors showcased avinya ev

இந்த எலக்ட்ரிக் கார் கான்செப்ட்டிற்கு உள்ளே பயன்படுத்தப்பட்டுள்ள மெட்டீரியல்கள் யாவும் பசுமையான போக்குவரத்துக்கு ஏற்றவை என டாடா தெரிவித்துள்ளது. மாடர்ன் டாடா கார்களுக்கே உண்டான ஸ்டேரிங் சக்கரத்தை இந்த கான்செப்ட் வாகனத்தினுள் பார்க்க முடிகிறது. ஆனால், டேஸ்போர்டில் அளவில் பெரியதான திரைகள் எதையும் பார்க்க முடியவில்லை. காருக்கு இரு பக்கங்களிலும் கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 2023 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட டாடா அவின்யா இவி எலக்ட்ரிக் கார் கான்செப்ட்டிற்கும், தற்போது வெளியீடு செய்யப்பட்டிருக்கும் அவின்யா இவி கான்செப்ட்டிற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. முக்கியமாக சொல்ல வேண்டுமென்றால், தற்போது காட்சிப்படுத்தப்பட்டுள்ள அவின்யா இவி கான்செப்ட் ஆனது நிறைய விஷயங்களில் மேம்படுத்தப்பட்டதாக உள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, January 17, 2025, 12:56 [IST]
English summary
Auto expo 2025 tata motors showcased avinya ev concept
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X