எத்தனாலில் இயங்கும் டாடா ஏஸ் வாகனமா? இதெல்லாம் நம்ம லிஸ்ட்லயே இல்லையே!!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors), கார்கள் விற்பனையில் மட்டுமின்றி, கமர்ஷியல் வாகனங்கள் விற்பனையிலும் முன்னணியில் உள்ள நிறுவனம். கடந்த ஜனவரி 17ஆம் தேதியில் இருந்து டெல்லியில் நடைபெற்றுவரும் பாரத் மொபிலிட்டி க்ளோபல் ஆட்டோ எக்ஸ்போ 2025 (Bharat Mobility Global Auto Expo 2025) கண்காட்சியில் கலந்துக் கொண்டுள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனம், இந்த கண்காட்சியில் பல்வேறு விதமான கமர்ஷியல் வாகனங்களை காட்சிப்படுத்தி உள்ளது. அவற்றுள் ஒன்றுதான், டாடா ஏஸ் ஃபிளெக்ஸ் ஃபியுல் (Ace Flex Fuel) வாகனம் ஆகும்.

ஃபிளெக்ஸ் ஃபியுல் என்பது எத்தனால் (Ethanol) கலக்கப்பட்ட பெட்ரோல் ஆகும். தற்போது அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் 13% எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோல் தான் வழங்கப்பட்டு வருகிறது. அந்த பெட்ரோலை தான் நாம் அனைவரும் 2-வீலர்களில் இருந்து பெரிய பெரிய கனரக வாகனங்களுக்கு வரையில் பயன்படுத்தி வருகிறோம். 2026 மார்ச் மாதத்திற்குள் எத்தனாலின் சதவீதத்தை 20% ஆக அதிகரிக்க மத்திய அரசு இலக்காக கொண்டுள்ளது.

tata unveils ace flex fuel

அதாவது, 80% பெட்ரோல், 20% எத்தனால் ஆகும். இதன் மூலமாக, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்யின் அளவை குறைக்க முடியும் என்பது மத்திய அரசின் நோக்கமாக உள்ளது. இதற்கேற்ப இன்றைய கால மாடர்ன் வாகனங்கள் அனைத்தும் 20% எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோலை ஏற்கும் வகையில் ஏற்கனவே மாற்றப்பட்டுவிட்டன. ஆனால், அவை அனைத்தும் ஃபிளெக்ஸ்-ஃபியுல் வாகனங்கள் என அழைக்கப்படுவது இல்லை.

ஃபிளெக்ஸ்-ஃபியுல் வாகனம் என்பது சுமார் 85% வரையில் எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோலை ஏற்கக்கூடியவை ஆகும். அதாவது, வெறும் 15% பெட்ரோல், 85% எத்தனால் ஆகும். தற்போது ஆட்டோ எக்ஸ்போ 2025 கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஏஸ் ஃபிளெக்ஸ்-ஃபியுல் வாகனம் 20% எத்தனாலில் இருந்து 85% எத்தனால் வரையில் ஏற்கக்கூடியது என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

tata unveils ace flex fuel

இந்தியாவில் டாடா ஏஸ் வாகனங்கள் மிகவும் பிரபலமானவை என்பதை நான் கூற வேண்டியது இல்லை. அப்படிப்பட்ட வாகனம் ஃபிளெக்ஸ்-ஃபியுல் தரத்தில் வருவது கஸ்டமர்களை ஈர்க்கும் மற்றும் இந்த வாகனத்தை பயன்படுத்துபவர்களுக்கு அதிக இலாபத்தை ஈட்டித்தரும். அடாஸ் (ADAS) தொழிற்நுட்ப வசதியை கொண்ட புதிய ஏஸ் ஃபிளெக்ஸ்-ஃபியுல் வாகனத்தில் அதிகப்பட்சமாக 900கிமீ வரையில் எடை கொண்ட பொருட்களை ஏற்றிச் செல்லலாம்.

நீண்ட தொலைவு பயணங்களின்போது அதிக மைலேஜை பெற, ஃபியுல் எக்கனாமி ஸ்விட்ச் மற்றும் கியர் ஷிஃப்ட் அட்வைசர் உள்ளிட்டவை இந்த ஏஸ் ஃபிளெக்ஸ்-ஃபியுல் வாகனத்தில் வழங்கப்பட்டுள்ளன. மேலும், ஓனர்கள் வாடகைக்கு விடப்பட்ட தங்களது ஏஸ் ஃபிளெக்ஸ்-ஃபியுல் வாகனத்தை தொடர்ந்து கண்காணிக்கவும், வாகனத்தை ஓட்டும் டிரைவர் எத்தகைய நிலையில் உள்ளார் என்பதையும் உடனுக்குடன் இருக்கும் இடத்தில் இருந்தே தெரிந்துக் கொள்ளவும் முடியும்.

tata unveils ace flex fuel

1840மிமீ உயரம், 1500மிமீ அகலத்தை கொண்ட இந்த புதிய டாடா ஃபிளெக்ஸ்-ஃபியுல் வாகனத்தில் 694சிசி, 2-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. 26 லிட்டர்கள் கொள்ளளவில் பெட்ரோல் டேங்கை கொண்ட இந்த வாகனத்தில் முன்பக்கத்தில் டிஸ்க் பிரேக்குகளும், பின்பக்கங்களில் டிரம் பிரேக்குகளும் வழங்கப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஃபிளெக்ஸ்-ஃபியுல் வாகனங்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இத்தகைய வாகனங்களின் மூலமாக அதிக மைலேஜையும் பெற முடியும் என்பதால், லோடு ஏற்றி செல்லும் தொழில்களுக்கு ஏஸ் ஃபிளெக்ஸ்-ஃபியுல் வாகனம் மிகவும் ஏற்றதாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும். மேலும், இந்த வாகனத்தில் நிறைய மாடர்ன் தொழிற்நுட்ப வசதிகளும் வழங்கப்பட்டு இருப்பது கவனிக்கத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Tuesday, January 21, 2025, 12:06 [IST]
English summary
Auto expo 2025 tata motors unveils ace flex fuel vehicle
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X