பார்வையாளர்களை அங்கிருந்து நகர விடாமல் செய்த வாகனங்கள்... கமர்ஷியல் வாகனங்கள் என்றால் மட்டும் என்ன சும்மாவா?
பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 (Bharat Mobility Global Expo 2025) கண்காட்சி டெல்லியில் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. சுமார் 9 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்றனர். நேரடியாக மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் நடைபெற்றதால் இந்த முறை பல முன்னணி நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் கண்காட்சியில் பங்கேற்றன. இந்த கண்காட்சியின் ஒருபகுதியாக ஆட்டோ எக்ஸ்போ 2025 (Auto Expo 2025) என்கிற மோட்டார் கண்காட்சி டெல்லியில் துவார்கா பகுதியில் நடைபெற்றது.
இந்த காண்காட்சியில் பல தனித்துவமான வாகனங்கள் காட்சிக்கு நிறுத்தப்பட்டன. மேலும், எதிர்காலத்தில் உருவாக்கப்பட உள்ள வாகனங்களுக்கான கான்செப்ட் (Concept)-களும் காட்சிப்படுத்தப்பட்டன. அந்த வகையில் கமர்ஷியல் வாகனங்களும் காட்சிக்கு நிறுத்தப்பட்டன. அவற்றுள் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்த 5 கமர்ஷியல் வாகனங்களை பற்றித்தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

டாடா பிரிமா ஜி.55எஸ் (Tata Prima G.55S): டாடா பிரிமா ஆனது திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் இயங்கக்கூடிய டாடா மோட்டார்ஸின் கனரக லாரி ஆகும். ஒருமுறை டேங்கை முழுவதுமாக நிரப்பிவிட்டால், சுமார் 2400கிமீ தொலைவிற்கு இயங்கக்கூடிய இந்த டாடா கனரக லாரி ஆனது மற்ற டீசல் லாரிகளை காட்டிலும் குறைந்த காற்று மாசுவை ஏற்படுத்தக்கூடியது மற்றும் எரிபொருள் செலவையும் குறைவாக கொண்டது.

டாடா இண்டர்சிட்டி இவி 2.0 (Tata Intercity EV2.0): இது ஒரு குறுகிய தொலைவு பயணத்திற்கான டாடா மோட்டார்ஸின் எலக்ட்ரிக் பேருந்து ஆகும். நகரத்திற்குள் அல்லது குறைந்த தொலைவில் உள்ள இரு நகரங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கு இதனை பயன்படுத்தலாம். சிங்கிள் சார்ஜில் சுமார் 400கிமீ-க்கும் அதிகமான ரேஞ்சை வழங்கக்கூடியது.

அசோக் லேலண்ட் சாதி (Ashok Leyland SAATHI): தனது பெயரின் மூலமாக 2025 ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் கவனத்தை ஈர்த்துள்ள குறைந்த எடை கொண்ட கமர்ஷியல் வாகனம். நீண்ட தொலைதூர பயணங்களுக்கு பயன்படுத்த முடியாத இந்த சாதி வாகனத்தில் குறை-நைட்ரஜன் டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளதால் வாகனத்தில் இருந்து வெளிப்படும் காற்று மாசுவும் குறைவாக இருக்கும் என அசோக் லேலண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மோண்ட்ரா எலக்ட்ரிக் சூப்பர் கார்கோ (Montra Electric Super Cargo): டெலிவிரி பணிகளுக்கான எலக்ட்ரிக் 3-சக்கர வாகனம். சூப்பர் கார்கோவின் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால், அதிகப்பட்சமாக 200கிமீ-க்கும் அதிகமான தொலைவிற்கு பயணிக்கலாம். அதிகப்பட்சமாக 580 கிலோ வரையில் எடை கொண்ட பொருட்களை இதில் கொண்டு செல்லலாம்.

கோதாவரி இப்ளூ ரோஸி இசிஓ (Godawari Eblu Rozee ECO): கோதாவரி எலக்ட்ரிக் மோட்டார்ஸ் நிறுவனம் சார்பில் 2025 ஆட்டோ எக்ஸ்போவில் பல்வேறு எலக்ட்ரிக் 3-வீலர்கள் காட்சிப்படுத்தப்பட்டன. அவற்றுள் ரோஸி இசிஓ ஒன்றாகும். இந்தியாவிலேயே முதல்முறையாக எடை குறைவான பிளாஸ்டிக் மெட்ட்ரீயல்களை வலுவானதாக மாற்றி உருவாக்கப்பட்ட முதல் 3-வீலர் ரோஸி இசிஓ ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கார் & பைக்குகளுக்கு இணையாக இந்த முறை கமர்ஷியல் வாகனங்களும் ஆட்டோ எக்ஸ்போவில் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தன. இந்த தொகுப்பில் நாங்கள் குறிப்பிட்டுள்ளவை டாப்-5 கமர்ஷியல் வாகனங்களை மட்டுமே. மொத்தமாக பார்த்தால், பல்வேறு விதமான கமர்ஷியல் வாகனங்களும், அவற்றிற்கான கான்செப்ட்களும் கண்காட்சியில் இடம்பெற்றன.


Click it and Unblock the Notifications









