அடி மாட்டு விலையில் வரப்போகும் குட்டி கார்! அமெரிக்க நிறுவனங்களை தூக்கி சாப்பிடும் தமிழ்நாட்டு தயாரிப்பு!
உலகம் முழுக்க தற்போது எலெக்ட்ரிக் கார்கள் (Electric Cars) மிக வேகமாக பிரபலமடைந்து வருகின்றன. எனவே புதிய எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதில், பல்வேறு முன்னணி நிறுவனங்களும் தீவிரம் காட்டி வருகின்றன. இதில், வின்ஃபாஸ்ட் (VinFast) நிறுவனமும் ஒன்று. வியட்நாம் (Vietnam) நாட்டை சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம் இந்திய சந்தைக்கு புதியதாகும். இந்திய சந்தையில் இன்னும் ஒரு எலெக்ட்ரிக் காரை கூட வின்ஃபாஸ்ட் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவில்லை. ஆனால் வின்ஃபாஸ்ட் எலெக்ட்ரிக் கார்கள் வெகு விரைவிலேயே, இந்திய சாலைகளில் ஆதிக்கம் செலுத்தவுள்ளன.
அந்த எலெக்ட்ரிக் கார்கள் எல்லாம் நமது தமிழ்நாட்டில் (Tamil Nadu) தயாரிக்கப்படவுள்ளன என்பது கூடுதல் சிறப்பு ஆகும். ஆம், வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் தொழிற்சாலை தமிழ்நாட்டின் தூத்துக்குடி (Thoothukudi) பகுதியில் அமைகிறது. இதற்கான கட்டுமான பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்த தொழிற்சாலையில் எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்யும் பணிகள் நடப்பு 2025ம் ஆண்டின் மத்தியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை தொடர்ந்து நடப்பு 2025ம் ஆண்டிலேயே இந்திய சந்தைக்கான வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் முறைப்படி விற்பனைக்கு கொண்டு வரப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்கு முன்னதாக இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் 2025 ஆட்டோ எக்ஸ்போ (2025 Auto Expo) வாகன திருவிழாவில், வின்ஃபாஸ்ட் நிறுவனம் பல்வேறு எலெக்ட்ரிக் கார்களை காட்சிக்கு வைத்துள்ளது. இதில், வின்ஃபாஸ்ட் விஎஃப் 3 (VinFast VF 3) எலெக்ட்ரிக் காரும் ஒன்றாகும்.

2025 ஆட்டோ எக்ஸ்போவில் வின்ஃபாஸ்ட் நிறுவனம் காட்சிக்கு வைத்துள்ள எலெக்ட்ரிக் கார்களில் நிறைய தயாரிப்புகள் அதிகாரப்பூர்வமாக சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி வின்ஃபாஸ்ட் விஎஃப் 3 எலெக்ட்ரிக் காரும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டால், எம்ஜி கோமெட் இவி (MG Comet EV) மற்றும் டாடா டியாகோ இவி (Tata Tiago EV) போன்ற எலெக்ட்ரிக் கார்களுக்கு எல்லாம் மிக கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 2 டோர்களை கொண்ட சிறிய எலெக்ட்ரிக் எஸ்யூவி (Electric SUV) ரக கார் ஆகும்.
ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 215 கிலோ மீட்டர்கள் தூரம் வரை பயணம் செய்யக்கூடிய வகையிலான பேட்டரி ஆப்ஷனை வின்ஃபாஸ்ட் விஎஃப் 3 எலெக்ட்ரிக் கார் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 215 கிலோ மீட்டர்கள் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) என்பது தினசரி பயன்பாடுகளுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும்.
வின்ஃபாஸ்ட் விஎஃப் 3 எலெக்ட்ரிக் காரில், 4 பேர் பயணம் செய்ய முடியும். 10 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ரியர் பார்க்கிங் சென்சார்கள், ஏர்பேக்குகள், ஏபிஎஸ் மற்றும் இபிடி என ஏராளமான வசதிகளையும் (Features) வின்ஃபாஸ்ட் விஎஃப் 3 கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: வின்ஃபாஸ்ட் நிறுவனம் அமெரிக்காவின் டெஸ்லா (Tesla) நிறுவனத்திற்கு சவால் அளிக்க கூடிய ஒன்றாக கருதப்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட ஒரு நிறுவனம் தமிழ்நாட்டில் தொழிற்சாலையை கட்டமைத்து வருவது முதலில் நாம் மகிழ்ச்சி கொள்ள வேண்டிய ஒரு விஷயம் ஆகும்.
முதற்கட்டமாக தூத்துக்குடியில் 4 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்வதற்கு வின்ஃபாஸ்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது மிகப்பெரிய அளவிலான முதலீடு என்பதால், இந்திய சந்தையில் வின்ஃபாஸ்ட் நிறுவனம் ஏராளமான எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய போகிறது என்பது 100 சதவீதம் உறுதி.
இதில், வின்ஃபாஸ்ட் விஎஃப் 3 எலெக்ட்ரிக் காரும் ஒன்றாக இருந்தால் மகிழ்ச்சி. ஏனெனில் இது மிகவும் விலை குறைவான ஒரு எலெக்ட்ரிக் கார் ஆகும். இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டால், அனேகமாக வின்ஃபாஸ்ட் விஎஃப் 3 எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை (Price) வெறும் 9 அல்லது 10 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கும் என நாங்கள் கருதுகிறோம்.
இதன் மூலம் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை விஎஃப் 3 பெறலாம். டெஸ்லாவிற்கு சவால் அளிக்க கூடியதாக கருதப்படும் வின்ஃபாஸ்ட் நிறுவனத்திடம் இருந்து இவ்வளவு குறைவான விலையில் வரவுள்ள எலெக்ட்ரிக் கார் என்பதால், விஎஃப் 3 வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.


Click it and Unblock the Notifications








