அரசாங்கத்தின் மானியமே விலையை ரூ.1.5 லட்சம் குறைச்சிடும்! நம்ம தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு குடுத்து வைக்கல!

எலக்ட்ரிக் வாகனங்களின் தாக்கம் அனைத்து விதமான வாகனங்களிலும் வந்துவிட்டது. எல்லா வாகனங்களிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பேட்டர்னில் தான் என்ஜின் வழங்கப்படுவதால், அவற்றை எலக்ட்ரிக் மோட்டாராக மாற்றுவதில் எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு பெரியதாக எந்த பிரச்சனையும் இல்லை. இதனாலேயே டிராக்டர்களில் கூட எலக்ட்ரிக் டிராக்டர்கள் (Electric Tractors) வர ஆரம்பித்துவிட்டன. அந்த வகையில், மஹாராஷ்டிராவில் எலக்ட்ரிக் டிராக்டர் ஒன்று பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்தியாவில் பல டிராக்டர் தயாரிப்பு நிறுவனங்கள் எலக்ட்ரிக்கில் டிராக்டர்களை உருவாக்க துவங்கிவிட்டன என்றாலும், எதுவும் இன்னும் அதிகாரப்பூர்வமாக பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படாமல் இருந்த நிலையில், இந்தியாவிலேயே முதல் எலக்ட்ரிக் டிராக்டர் ஆர்டிஓ-இல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆட்டோநெக்ஸ்ட் (AutoNXT) என்கிற நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட 'எக்ஸ்45எச்2' (X45H2) என பெயர் கொண்ட இந்த எலக்ட்ரிக் டிராக்டர் தான் தற்போது மஹாராஷ்டிராவில் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. இந்த எலக்ட்ரிக் டிராக்டரின் அறிமுக நிகழ்ச்சியில் மஹாராஷ்டிரா மாநில போக்குவரத்து அமைச்சர் பிரதாப் சர்னாய்க் கலந்துக் கொண்டு இந்த எலக்ட்ரிக் டிராக்டருக்கு உத்தரவாதம் அளித்துள்ளார்.

https://www.facebook.com/share/r/1EkUrF9s1Z/

இந்த டிராக்டரின் பெயரில் உள்ள '45எச்பி' என்பது டிராக்டரில் இருந்து அதிகப்பட்சமாக கிடைக்கும் இயக்க ஆற்றலை குறிக்கிறது. இது பசுமையான சுற்றுச்சூழலுக்கு வழிவகுப்பது மட்டுமின்றி, குறைவான பராமரிப்பு செலவு மூலம் குறைந்த செலவிலான பயன்பாட்டிற்கும் வழிவகுப்பதாக மஹாராஷ்டிரா அமைச்சர் தெரிவித்து உள்ளார்.

மேலும், இவ்வாறான எலக்ட்ரிக் டிராக்டர்கள் இந்தியாவின் விவசாயத்தை மாற்ற கூடும் எனவும் நம்பிக்கை உடன் கூறிய அமைச்சர் பிரதாப் சர்னாய்க், ஒரு ஏக்கர் நிலத்தை டீசல் (Diesel) டிராக்டரில் உழ தற்சமயம் ரூ.1,200இல் இருந்து ரூ.1,500 வரையில் செலவாகும் நிலையில் இந்த எலக்ட்ரிக் டிராக்டரில் வெறும் ரூ.300 மட்டுமே செலவாகும் என்று தெரிவித்து உள்ளார்.

autonxt x45h2 electric tractor introduced

இந்த அறிமுக நிகழ்ச்சியில் அமைச்சர் மட்டுமின்றி, சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகளும் கடந்துக் கொண்டனர். இந்திய அரசாங்கம் 2030ஆம் ஆண்டிற்குள் குறைந்தப்பட்சம் சாலையில் இயங்கும் 20- 30% வாகனங்களை எலக்ட்ரிக் வாகனங்களாக மாற்றுவது என்கிற கொள்கை உடன் செயல்பட்டு வருகிறது. இதனை சுட்டிக்காட்டி பேசிய பாஜக மாநில அமைச்சர் பிரதாப் சர்னாய்க் மத்திய அரசின் அந்த நோக்கத்தை நிஜமாக்க ஆதரவளித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அமைச்சர், இதற்காக எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவோருக்கு நேரடியாக மானியங்களை வழங்கவும், சுங்க கட்டணங்களில் இருந்து விலக்கு அளிக்கவும் அரசாங்கம் திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். மஹாராஷ்டிரா மாநில எலக்ட்ரிக் வாகன திட்டம் 2025இன் படி எலக்ட்ரிக் டிராக்டரை வாங்குவோர் ரூ.1.5 லட்சம் வரையிலான மானியம் பெறலாம்.

autonxt x45h2 electric tractor introduced

ஆதலால், ஆட்டோநெக்ஸ்ட் எக்ஸ்45எச்2 எலக்ட்ரிக் டிராக்டரை வாங்கி விவசாயிகள் பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார். இந்த எலக்ட்ரிக் டிராக்டரை கடந்த ஜூன் 29ஆம் தேதி மஹாராஷ்டிராவின் தானேவில் உள்ள ஆர்டிஓ அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். எக்ஸ்45எச்2 எலக்ட்ரிக் டிராக்டரில் 35kWh திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் இந்த பேட்டரி பொருத்தப்படும் எலக்ட்ரிக் மோட்டார் ஆனது 8 மணிநேரத்திற்கு, 8 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தை உழுவதற்கு போதுமானதாக இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டீசல் டிராக்டர்களில் இருந்து கார்பன் மாசுக்கள் வெளிவருவதால், அவற்றை காட்டிலும் விவசாயத்திற்கு எலக்ட்ரிக் டிராக்டர்களே சிறந்தவை ஆக இருக்கும். இதனாலேயே நாடு முழுக்க எலக்ட்ரிக் டிராக்டர்களை பயன்பாட்டிற்கு கொண்டுவர மத்திய அரசு தீவிரமாக உள்ளது. அந்த முயற்சியில் மஹாராஷ்டிராவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இவ்வாறான எலக்ட்ரிக் டிராக்டர்களை தமிழ்நாட்டிலும் பயன்பாட்டிற்கு கொண்டுவரலாம்.

Source: Times of India (https://timesofindia.indiatimes.com/)

Translated and published for our readers in Tamil.

More from DriveSpark

Article Published On: Friday, July 4, 2025, 16:35 [IST]
English summary
Autonxt introduces x45h2 electric tractor in maharashtra check all details here
மேலும்... #electric vehicles #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+