பைக் விலையில் சேல்ஸ்க்கு வர இருக்கும் இ-ஆட்டோ.. ஸ்டிக்கரால முழுசா மறைச்சிருந்தா கண்டுபிடிக்காம விட்ருவோமா!
இந்தியாவிற்காக பிரபல இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் ஆட்டோ ரிக்சா (Electric Auto Rickshaw)-வை தயார் செய்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த வாகனமே தற்போது கேமிராவின் கண்களில் சிக்கி இருக்கின்றது. சாலையில் சோதனையோட்டம் மேற்கொண்டபோதே அது கேமிராவின் கண்களில் சிக்கி இருக்கின்றது. இந்த படங்களே இப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகிக் கொண்டிருக்கின்றன.
நாட்டில் மின்சார வாகனங்களுக்கான வரவேற்புத் தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக, எலெக்ட்ரிக் டூ-வீலர் மற்றும் கார்களுக்கு நம்ப முடியாத வரவேற்பு நாட்டு மக்கள் மத்தியில் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதேபோல் இ-கமர்சியல் வாகனங்களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்த வண்ணம் இருக்கின்றது.

இந்த மாதிரியான சூழலைக் கருத்தில் கொண்டே பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்த விலை குறைவான எலெக்ட்ரிக் மூன்று சக்கர வாகனத்தை தயார் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஓர் பிரீமியம் பைக்கிற்கு இணையான விலையில் விற்பனைக்குக் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ரூ. 2.50 லட்சத்திற்கும் குறைவான விலையில் இது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் இதுபற்றிய அதிகாரப்பூர்வ வார்த்தைகள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. விரைவில் இது வெளியாகிவிடும் என்றே நம்பப்படுகின்றது. இந்த புதிய எலெக்ட்ரிக் ஆட்டோவை விற்பனைக்குக் கொண்டு வருவதற்கான வேலைகளை ஏற்கனவே பஜாஜ் ஆட்டோ தொடங்கிவிட்டது என்பது கவனிக்கத்தகுந்தது.

சமீபத்தில்கூட ஓர் புதுமுக ஆட்டோவிற்கான பேடண்ட் உரிமத்தை அது பெற்றிருந்தது என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த நிலையிலேயே முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில் இ-ஆட்டோ இந்திய சாலையில் தரிசனம் தந்திருக்கின்றது. முழுமையாக மறைக்கப்பட்ட இருந்த காரணத்தினால் அதன் தோற்றம் மற்றும் சிறப்பம்சங்கள் பற்றிய துள்ளியமான தகவலை எங்களால் இங்கே வழங்க முடியவில்லை.
அதேவேளையில், அது மிகவும் எளிமையான உருவத்தைக் கொண்டிருப்பதை நம்மால் மட்டும் காண முடிகின்றது. குறிப்பாக, பெட்டி போன்ற தோற்றத்தை அதுக் கொண்டிருக்கின்றது. இதன் உருவத்தை வைத்து பார்க்கையில் இரண்டு தாராளமாக அமர்ந்துச் செல்லக் கூடிய வாகனமாக இது இருக்கும் என நம்பப்படுகின்றது.

மிக முக்கியமாக இதன் மேற்கூரை வழக்கமான ஆட்டோக்களில் இருப்பதை சாஃப்ட் டாப் (Soft Top)ஆக அல்லாமல் ஹார்டு டாப் (Hard Top)ஆக இருக்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது. ஸ்பை படத்தில் இடம் பெற்றிருக்கும் படங்களும் இதையே உறுதிப்படுத்துகின்றது. இதேபோல், நவீன தொழில்நுட்ப வசதிகளைத் தாங்கியிருப்பதில் இதில் பெரிய அளவில் குறைச்சல் இருக்காது என நம்பப்படுகின்றது.
விலையைக் குறைவாக கொண்டிருந்தாலும் பாதுகாப்பு அம்சம் மற்றும் பாதுகாப்பு தரம் என எதிலும் இந்த ஆட்டோவில் குறைச்சல் இருக்காது என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. அந்தவகையில், அதிக பாதுகாப்பு திறன்மிக்க பேட்டரி பேக், தரமான கட்டுமானம் ஆகியவற்றையே இந்த எலெக்ட்ரிக் ஆட்டோ தாங்கியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே எலெக்ட்ரிக் ஆட்டோ ரிக்சா காதலர்களைக் கவரும் விதமாக பஜாஜ் ஆட்டோ இந்த இ-ஆட்டோவை தயாராகிக் கொண்டிருக்கின்றது. இதன் வருகை எப்போது அமையும் என்கிற தகவல் வெளியாகவில்லை. இருப்பினும், 2026 ஆம் ஆண்டிற்குள் இது விற்பனைக்கு வந்துவிடும் என்று அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
Source: Rushlane


Click it and Unblock the Notifications









