ஸ்விஃப்ட், வேகன் ஆர் எல்லாம் ஓரம்போ ! இந்த கார் தான் நம்பர்1 இடத்துல சேல்ஸ் ஆகுது!
இந்தியாவில் அதிகம் விற்பனையான கார்கள் பட்டியலில் 10வது இடத்தில் இரக்கம் கார் இந்தியாவில் சிறப்பாக விற்பனையான பிரிமியம் ஹேட்ச்பேக் காராக இருக்கிறது. மாருதி நிறுவனத்தின் பலேனோ கார் தான் இந்த பெயரை பெற்றுள்ளது. இந்தகார் எவ்வளவு விற்பனையாகியுள்ளது. இதில் என்னென்ன அம்சங்கள் உள்ளன? இந்த கார் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் பிரிமியம் ஹேட்ச்பேக் செக்மெண்டில் மாருதி பலேனோ தான் அதிகம் விற்பனையான காராக இருக்கிறது. இந்த காருக்க ஒவ்வொர மாதமும் டிமாண்ட் அதிகரகித்து விற்பனையும் அதிகமாகி வருகிறது. இந்த காரில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் சேஃப்டி ரேட்டிங் இந்த காரின் விற்பனையை அதிகரிக்க உதவியுள்ளது.

கடந்த ஜூலை மாதம் மொத்தம் 12,600 கார்கள் விற்பனையாகியுள்ளன. இந்த கார் ஒட்டு மொத்தமாக இந்தியாவில் விற்பனையான டாப் 10 கார் பட்டியலில் 10 இடத்தில் இருக்கிறது . மார்கெட்டில் விற்பனையாகி வரும் ஹூண்டாய் ஐ20, டொயோட்டா கிளான்ஸா, டாடா அல்ட்ராஸ், ஆகிய கார்களுக்கு போட்டியாக விற்பனையாகி வருகிறது.
மாருதி பலேனோ காரை பொருத்தவரை ரூ6.70 லட்சம் என்ற விலையில் விற்பவனையாகி வருகிறது. இந்த கரில் 1.2 லிட்டர் 4 சிலிண்டர் கே12என் பெட்ரோல் இன்ஜி் பொருத்தப்பட்டுள்ளது. இது 83 பிஎச்பி பவரை வெளிப்படுத்துகிறது. இது போக 1.2 லிடர் டுயல் ஜெட் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 90 பிஎச்பி பவரை வெளிப்படுத்துகிறது இது மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் பொரததப்பட்டுள்ளது.

இந்த காரில் சிஎன்ஜி வெர்ஷனும் விற்பனையாகி வருகிறது. இந்த காரில் டுயல் ஜெட் பெட்ரேல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரில் 78 பிஎஸ் பவர் மற்றும் 99 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த காரின் அளவுகளை பொருத்தவரை 3990 மிமீ நீளமும், 1745 மிமீ அகலமும், 1500 மீ உயரமும் 2520 மிமீ வீல் பேஸூம் கொண்டதாக இருக்கிறது.இந்த காரின் உள்ளே மறு வடிவமைப்பு செய்யப்பட்ட ஏசி வென்ட்கள், பெரிய ஃப்ரீ ஸ்டான்டிங் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 360 டிகிரி கேமரா, 9 இன்ச் ஸ்மார்ட் பிளே ப்ரோ பிளஸ் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இது வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளேவை சப்போர்ட் செய்யும்.

இந்த காரில் பாதுகாப்பிற்காக 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ், ஐஎஸ்ஓ சைல்டு ஃபிக்ஸ், ரிவர்ஸ் கேமரா, ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. இந்த காரில் ஸிக்மா, டெல்டா, ஸெட்டா, ஆல்ஃபா ஆகிய 4 விதமான வேரியன்ட்கள் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் பிரிமியம் ஹேட்ச்பேக் காராக இந்த கார் இருக்கும் நிலையில் பலர் இந்த காரை வாங்கி வருகின்றனர். மக்கள் மத்தியில் பிரிமியம் கார் மோகம் அதிகரித்துள்ள நிலையில் இந்த கார் குறைந்த விலையில் பிரிமியம் அம்சங்களை வழங்குவதால் பலர் இந்த காரை வாங்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications









