சீட்டுக்கு அடியில, பின்னால ஃபேன் வச்ச மாதிரி இருக்கும்.. காற்றோட்டத்துக்கு பஞ்சமே இருக்காத கார் மாடல்கள்!

கார்களில் பயணிக்கும்போது சொகுசான டிராவல் அனுபவத்தை வழங்குவதில் இருக்கைகள் முக்கிய பங்கினை வகிக்கின்றன. இந்த இருக்கை இப்போது மிகப் பெரிய பரிணாம வளர்ச்சியைக் கண்டிருக்கின்றது என்றே கூறலாம். மிகவும் மிருதுவானதாக மட்டுமல்ல அதிக சொகுசானதாகவும் அவை மாறியிருக்கின்றன. குறிப்பாக, வெண்டிலேட் வசதிக் கொண்ட இருக்கை (Ventilated Seat)-கள் கார்களில் வழங்கப்படுவது வாகன உலகின் அடுத்தக் கட்ட வளர்ச்சியாக பார்க்கப்படுகின்றது. இந்த அம்சத்திற்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

இதை தாங்கியிருக்கும் கார் மாடல்கள் சிலவற்றை பற்றியே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். குறிப்பாக, ரூ. 15 லட்சம் அல்லது அதற்கும் கம்மியான விலையில் வெண்டிலேட் இருக்கையுடன் விற்பனைக்குக் கிடைக்கும் கார் மாடல்கள் லிஸ்ட்டையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

Top affordable cars with ventilated seats

ஹூண்டாய் வெர்னா (Hyundai Verna): இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் பிரீமியம் அம்சங்கள் நிறைந்த செடான் ரக கார் மாடல் ஆகும். இந்த காரில் பயணிகளின் சௌகரியமான பயணத்திற்காக பலதரப்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. அதில் மிக முக்கியமான அம்சமாக வெண்டிலேட் வசதிக் கொண்ட இருக்கை இருக்கின்றது.

இந்த கார் மாடலின் உயர்நிலை வேரியண்டுகளில் மட்டுமே வெண்டிலேட் வசதிக் கொண்ட இருக்கைகள் வழங்கப்படுகின்றன. எஸ்எக்ஸ் (ஓ) மற்றும் எஸ்எக்ஸ் (ஓ) டர்போ ஆகியவையே அவை ஆகும். முதல் ஒன்று ரூ. 14.75 லட்சம் என்கிற விலையிலும், இரண்டாவது ஒன்று ரூ. 16.08 லட்சம் என்கிற விலையிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இரண்டு எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும்.

Car ventilated seats

டாடா நெக்ஸான் (Tata Nexon): இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி ரக கார் மாடல்களில் இதுவும் ஒன்றாகும். இந்த கார் பலதரப்பட்ட வேரியண்டுகளில் வெண்டிலேட் வசதிக் கொண்ட இருக்கை வழங்கப்படுகின்றது. ஃபியர்லெஸ் பிளஸ் பிஎஸ் டிடி என்கிற வேரியண்டிலேயே காற்றோட்டத்தை உறுதிப்படுத்தக் கூடிய இருக்கைகள் வழங்கப்படுகின்றன.

இந்த ஒற்றை வேரியண்டை 1.2 லிட்டர் பெட்ரோல் மேனுவல் மற்றும் 7டிசிஏ, 1.5 லிட்டர் டீசல் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிஎன்ஜி ஆகிய ஆப்ஷன்களில் டாடா மோட்டார்ஸ் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த நான்கிலும் வெண்டிலேட் வசதிக் கொண்ட இருக்கைகையைப் பெற்றுக் கொள்ள முடியும். இந்த அம்சம் கொண்ட தேர்வு ரூ.13.59 லட்சம் தொடங்கி ரூ.14.99 லட்சம் என்கிற விலையில் விற்கப்படுகின்றது. இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 (Maruti Suzuki XL6 MPV): இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் பிரீமியம் அம்சங்கள் நிறைந்த எம்பிவி ரக கார் மாடல் இதுவாகும். இந்த கார் மாடலின் உயர்நிலை தேர்வான ஆல்ஃபா-வில் மட்டுமே வெண்டிலேட் வசதிக் கொண்ட இருக்கை வழங்கப்படுகின்றது.

இந்த ஆல்ஃபா வேரியண்டை 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் வாங்கிக் கொள்ள முடியும். இரண்டிலும் வெண்டிலேட் இருக்கையைப் பெற்றுக் கொள்ள முடியும். ரூ. 12.61 மற்றும் ரூ. 14.01 லட்சம் என்கிற விலையிலேயே இது விற்கப்படுகின்றது.

கியா சொனெட் (Kia Sonet): இந்த கார் மாடலிலேயே மிக அதிக வேரியண்டுகளில் வெண்டிலேட் வசதிக் கொண்ட இருக்கை வசதி வழங்கப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. கிட்டதட்ட 12வேரியண்டுகளில் வெண்டிலேட் இருக்கையை கியா நிறுவனம் சொனெட் கார் மாடலில் வழங்குகின்றது. ரூ.11.71 லட்சம் விலைக் கொண்ட தேர்விலேயே இந்த அம்சத்தை வழங்கி இருப்பது கவனிக்கத்தகுந்தது. அதுமட்டுமல்ல ரூ.14.91 லட்சமே இதன் அதிகபட்ச விலை ஆகும். அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.

டாடா பன்ச் இவி (Tata Punch EV): இந்தியாவில் பன்முக அவதாரத்தில் விற்பனைக்குக் கிடைக்கும் கார் மாடலில் இதுவும் ஒன்றாகும். பெட்ரோல், சிஎன்ஜி மற்றும் எலெக்ட்ரிக் ஆகிய அவதாரங்களிலேயே இது விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் மின்சார வெர்ஷனிலேயே டாடா மோட்டார்ஸ் வெண்டிலேட் வசதிக் கொண்ட இருக்கையை வழங்குகின்றது.

எம்பவர்டு பிளஸ் எனும் வேரியண்டிலேயே அது வழங்கப்படுகின்றது. இதன் விலை ரூ. 13.97 லட்சம் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். வெண்டிலேட் வசதிக் கொண்ட இருக்கை மட்டுமே இன்னும் பல பிரீமியம் அம்சங்களை இதில் பெற்றுக் கொள்ள முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது.

எம்ஜி விண்ட்ஸர் இவி (MG Windsor EV): இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். இந்த எலெக்ட்ரிக் கார் மாடலின் உயர்நிலை தேர்வான எஸ்ஸென்ஸ்-இல் மட்டுமே வெண்டிலேட் வசதிக் கொண்ட இருக்கை வழங்கப்பட்ட இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.15.99 லட்சம் ஆகும். அதேவேளையில், 'பேட்டரி-அஸ்-எ-சர்வீஸ்' திட்டத்தின்கீழ் வாங்கும்போது இதைவிட ரூ.3 லட்சம் வரை குறைவான விலையில் இந்த காரை வாங்கிக் கொள்ள முடியும்.

கியா சைரோஸ் (Kia Syros): இந்தியாவில் சமீபத்தில் விற்பனைக்கு வந்த கார் மாடலாக சைரோஸ் உள்ளது. இது ஓர் டால் பாய் உருவம் கொண்ட எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். இந்த கார் மாடலில் முன் மற்றும் பின் என இரண்டு பக்கங்களிலும் வெண்டிலேட் வசதிக் கொண்ட இருக்கைகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

முன் பக்கத்தில் முதுகு மற்றும் உட்காரும் பகுதிக்கும், பின் பக்கத்தில் உட்காரும் பகுதிக்கும் மட்டும் வெண்டிலேட் வசதி வழங்கப்பட்டு இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த கார் மாடலின் உயர் நிலை வேரியண்டுகளான எச்டிஎக்ஸ் மற்றும் எச்டிஎக்ஸ் பிளஸ் ஆகியவற்றிலேயே வெண்டிலேட் வசதிக் கொண்ட இருக்கைகள் வழங்கப்படுகின்றன. ரூ. 13.29 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து இது விற்பனைக்குக் கிடைக்கும். அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.

டாடா அல்ட்ராஸ் ரேசர் (Tata Altroz Racer): டாடா மோட்டார்ஸ் பிரீமியம் அம்சங்கள் நிறைந்த ஹேட்ச்பேக் ரக கார் மாடலாக ரேசர் உள்ளது. இதன் அதிக ஆற்றலை வெளியேற்றும் ஓர் பதிப்பே அல்ட்ராஸ் ரேசர் ஆகும். இதன் ஆர்3 எனும் வேரியண்டில் மட்டுமே வெண்டிலேட் இருக்கை வழங்கப்படுகின்றது. இதன் விலை ரூ.10.99லட்சம் ஆகும். மிக மிக குறைவான விலையில் வெண்டிலேட் வசதியுடன் விற்பனைக்குக் கிடைக்கும் கார் மாடல் இதுவை ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: லிஸ்ட்டில் பார்த்த அனைத்தும் ரூ. 15 லட்சத்திற்கும் குறைவான விலையில் வெண்டிலேட் வசதிக் கொண்ட இருக்கையுடன் விற்பனைக்குக் கிடைக்கும் கார் மாடல் ஆகும். இவற்றில் பயணிக்கும்போது ஏசி-யே இல்லை என்றால் சீரான காற்றோட்டத்தை முதுகு மற்றும் உட்காரும் பகுதிக்குப் பெற்றுக் கொள்ள முடியும்.

More from DriveSpark

Article Published On: Thursday, February 27, 2025, 15:29 [IST]
English summary
Best affordable cars with ventilated seats below rs 15 lakh
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+