அதிக விலை எல்லாம் இல்லை, 10 லட்ச ரூபாய் இருந்தால் போதும்... ஆட்டோமேட்டிக் கார் வாங்கி மாஸ் காட்டலாம்!

மேனுவல் (Manual) காரை ஓட்டுபவர்களுக்கும், ஆட்டோமேட்டிக் (Automatic) காரை ஓட்டுபவர்களுக்கும் இடையே இணையத்தில் எப்போதுமே ஒரு விவாதம் இருப்பதை பார்க்க முடியும். குறிப்பாக, மேனுவல் காரை பயன்படுத்தி வருபவர்கள் தான் ஆட்டோமேட்டிக் காரை பயன்படுத்துபவர்களை வேண்டுமென்றே வம்புக்கு இழுப்பது வழக்கம். ஆட்டோமேட்டிக் காரை பயன்படுத்துவதில் எந்தவொரு சுவாரஸ்யமும் இல்லை என்று கூறியே மேனுவல் கார்களை பயன்படுத்துபவர்கள் கிண்டல் செய்கின்றனர்.

ஏனெனில், இப்போதுதான் ஆட்டோமேட்டிக் கார்கள் எல்லாம் உள்ளன. ஆனால், மேனுவல் கார்கள் முதல்முறையாக கார் கண்டுப்பிடிக்கப்பட்ட காலத்தில் இருந்தே உள்ளன. இருப்பினும், ஆட்டோமேட்டிக் கார்களுக்கு தொடர்ந்து வரவேற்பு அதிகரித்துவரும் நிலையில், இந்தியாவில் ரூ.10 லட்சத்திற்குள் கிடைக்கக்கூடிய ஆட்டோமேட்டிக் கார்களுள் சிறந்த ஐந்து கார் மாடல்களை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

best automatic cars price under rs 10 lakh

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift): ஸ்விஃப்ட் ஆனது இந்தியாவில் பிரபலமான ஹேட்ச்பேக் (Hatchback) ரக கார் ஆகும். சவுகரியமான பயண அனுபவம் மற்றும் அதிகமான மைலேஜ் என்பதுதான் ஸ்விஃப்ட் காரின் தனித்துவமான அம்சமாக இருக்கும் நிலையில், மேனுவல் கியர்பாக்ஸ் உடன் மட்டுமின்றி, ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் ஸ்விஃப்ட் கார் விற்பனை செய்யப்படுகிறது.

best automatic cars price under rs 10 lakh

டாடா பஞ்ச் (Tata Punch): டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரபலமான எஸ்யூவி (SUV) ரக கார்களுள் ஒன்று, பஞ்ச் ஆகும். இந்தியாவில் அதிக பேரால் வாங்கப்படும் கார்களுள் ஒன்றாக விளங்கும் பஞ்ச் காரிலும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வழங்குகிறது. ஆனால், ஸ்விஃப்ட் காரை போன்று பஞ்ச் காரும் டீசல் என்ஜின் (Diesel Engine) உடன் விற்பனை செய்யப்படுவது இல்லை.

best automatic cars price under rs 10 lakh

ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter): இந்தியாவின் சப்-காம்பெக்ட் எஸ்யூவி (Sub-Compact SUV) கார் பிரிவில் சமீபத்தில் நுழைந்த மாடல், எக்ஸ்டர் ஆகும். டாடா பஞ்ச் காருக்கு விற்பனையில் போட்டியாக இருக்கும் எக்ஸ்டரில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. பஞ்ச் காரை போலவே, அளவில் சிறியதாக இருப்பினும் தொழிற்நுட்ப வசதிகள் மற்றும் சவுகரியமான பயணத்திற்கு இந்த ஹூண்டாய் கார் ஏற்றதாக உள்ளது.

best automatic cars price under rs 10 lakh

ஹோண்டா அமேஸ் (Honda Amaze): ஹோண்டா நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் விற்பனை செய்யப்படும் வெறும் இரு கார்களுள் ஒன்று, அமேஸ் ஆகும். ஹோண்டாவின் சப்-காம்பெக்ட் செடான் (Sedan) ரக காரான அமேஸின் சிறப்பம்சமே அதன் சிறப்பான ஹேண்ட்லிங் ஆகும். அத்துடன், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைப்பதும் அமேஸ் காரின் சிறப்பு ஆகும்.

best automatic cars price under rs 10 lakh

ஹூண்டாய் ஐ20 (Hyundai i20): இந்த தொகுப்பில் நாம் பார்த்த கார்களிலேயே சற்று விலைமிக்கது மற்றும் அதிக உட்புற இடவசதியை கொண்ட காராக ஐ20 விளங்குகிறது. மேலும், ஸ்டைலிஷான தோற்றம் கொண்ட காராக விளங்கும் இந்த ஹூண்டாய் காரின் சில எண்ட்ரீ-லெவல் வேரியண்ட்களின் விலைகள் தான் ரூ.10 லட்சத்திற்குள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட கார்களை பயன்படுத்துவது மக்களிடையே சமீப காலத்தில் அதிகரித்து உள்ளது. குறிப்பாக, இன்றைய கால இளம் தலைமுறையினர் ஆட்டோமேட்டிக் கார்களை பயன்படுத்த அதிகம் விரும்புகின்றனர். அத்தகையவர்களுள் ஒருவர்தான் நீங்கள் என்றால், மேலே குறிப்பிடப்பட்ட ரூ.10 லட்சத்திற்குள் விலை கொண்ட ஆட்டோமேட்டிக் கார்களுள் ஒன்றை வாங்கலாம்.

More from DriveSpark

Article Published On: Sunday, August 10, 2025, 5:00 [IST]
English summary
Best automatic cars under 10 lakh rupees maruti suzuki swift to hyundai i20
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X