எந்த காராக இருந்தாலும் கஸ்டமர்களை உடனடியாக கவரும் அம்சம்... 10 லட்ச ரூபாய்க்குள் கார் வாங்க போறீங்களா?

இந்த 2025ஆம் ஆண்டு முடியும் தருவாயில், சுற்றுலா பயணங்கள் மற்றும் அன்றாடப் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில், இந்திய ஆட்டோமொபைல் சந்தையில், பத்து லட்ச ரூபாய்க்குள் ரூஃப் ரெயில்கள் (Roof Rails)-ஐக் கொண்ட கார் மாடல்கள் பல உள்ளன. காரின் மேற்கூரையில் பொருட்களை கட்டி எடுத்து செல்வதற்கு ரூஃப் ரெயில்கள் பயன்படுகின்றன. இத்தகைய வசதி உடன் ரூ.10 லட்சத்திற்குள் கிடைக்கும் கார்களை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

roof rails10 lakh rupee cars

டாடா பன்ச் (Tata Punch): இது ஒரு மைக்ரோ-எஸ்யூவி (Micro-SUV) கார் மாடலாகும். சன்ரூஃப் (Sunroof) உடன் கிடைக்கும் இதன் அட்வென்ச்சர் (Adventure) மற்றும் அதற்கு மேற்பட்ட வேரியண்ட்களில் ரூஃப் ரெயில்கள் வழங்கப்படுகின்றன. தற்சமயம், ரூ.5.50 லட்சம் முதல் ரூ.9.30 லட்சம் வரையிலான ஆரம்ப விலையுடன், பன்ச் மிகவும் மலிவான ஆப்ஷன்களில் ஒன்றாகும்.

roof rails10 lakh rupee cars

ஹுண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter): டாடா பன்ச் காருக்கு நேரடிப் போட்டியாக விளங்கும் இந்த ஹூண்டாய் காரின் தோற்றத்திற்குப் வலுசேர்க்கும் விதமாக, ஸ்போர்ட்டியான ரூஃப் ரெயில்கள் வழங்கப்படுகின்றன. இதன் விலை ரூ.5.68 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. பெரும்பாலான சிறப்பம்சங்கள் நிறைந்த வேரியண்ட்களும் பத்து லட்ச ரூபாய் வரம்பிற்குள் கிடைக்கின்றன.

roof rails10 lakh rupee cars

டாடா நெக்ஸான் (Tata Nexon): அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் (Ground Clearance) மற்றும் கம்பீரமான தோற்றத்திற்குப் பெயர் பெற்ற இந்த டாடா சப்-காம்பாக்ட் எஸ்யூவி காரின் பெரும்பாலான மிட் மற்றும் டாப் வேரியண்ட்களில் காரின் மேற்கூரை ஆனது ஒருங்கிணைக்கப்பட்ட ரூஃப் ரெயில்களுடன் வருகிறது. நெக்ஸானின் ஆரம்ப விலை சுமார் ரூ.7.32 லட்சம் ஆகும்.

roof rails10 lakh rupee cars

மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO): முன்பு விற்பனையில் இருந்த எக்ஸ்யூவி300 காரின் அப்டேட் செய்யப்பட்ட பதிப்பான எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரில் ரூஃப் ரெயில்கள் வழங்கப்படுகின்றன. இது அதன் எஸ்யூவி (SUV) தோற்றத்தை மேலும் மேம்படுத்துகிறது. இந்த மஹிந்திரா காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.7.28 லட்சத்தில் இருந்து தொடங்குகின்றன.

roof rails10 lakh rupee cars

ஹுண்டாய் வென்யூ (Hyundai Venue): இது ஒரு கொரியன்-ஸ்டைல் காம்பாக்ட் எஸ்யூவி கார் ஆகும். இதன் மிட் மற்றும் டாப் வேரியண்ட்களில் ரூஃப் ரெயில்கள் கிடைக்கின்றன. வென்யூ காரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.7.90 லட்சம் ஆகும். பத்து லட்ச ரூபாய்க்குள் இந்த காரின் பல வேரியண்ட்களின் விலைகள் உள்ளன.

roof rails10 lakh rupee cars

கியா சொனெட் (Kia Sonet): இந்த கொரியன்-ஸ்டைல் எஸ்யூவி காரிலும் ரூஃப் ரெயில்கள் கிடைக்கின்றன. இது அதன் பிரீமியம் மற்றும் துணிச்சலான வடிவமைப்பிற்கு மேலும் கவர்ச்சி சேர்க்கிறது. ரூ.7.30 லட்சத்தில் இருந்து கிடைக்கும் இந்த காரின் பல வேரியண்ட்கள் பத்து லட்ச ரூபாய்க்குள் சிறப்பம்சங்கள் நிறைந்த அனுபவத்தை அளிக்கின்றன.

roof rails10 lakh rupee cars

மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza): நம்பகத்தன்மைக்கு இது ஒரு பிரபலமான தேர்வாகும். இதில் கவர்ச்சிகரமான ரூஃப் ரெயில்கள் இடம்பெற்றுள்ளன. இதன் சில டாப் வேரியண்ட்களின் விலைகள் பத்து லட்ச ரூபாயை மிஞ்சினாலும், குறைந்த மற்றும் மிட் வேரியண்ட்களின் விலைகள் சுமார் ரூ.8.26 லட்சத்தில் இருந்து தொடங்குகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பெரும்பாலான பட்ஜெட் ரக கார்களில், ரூஃப் ரெயில்கள் வெறும் அழகியல் அம்சமாக மட்டுமே இடம்பெறும் நிலையில், சில கார்களில் இவை லக்கேஜ் கேரியர்களை பொருத்துவதற்கு ஏற்ற வகையில் செயல்பாட்டிற்கான அம்சமாகவும் உள்ளன. இத்தகைய சிறப்புமிக்க அம்சத்தை ரூ.10 லட்சத்திற்குள் கிடைக்கும் கார்களில் கூட பெற முடிவது அசத்தலான அம்சமாகும்.

More from DriveSpark

Article Published On: Monday, December 22, 2025, 22:54 [IST]
English summary
Best cars priced under 10 lakh rupee with roof rails tata punch and hyundai exter
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X