ரூ.10 லட்சத்திற்குள் இதில் எந்த காரை வாங்குறது என்பதில்தான் குழப்பமே வரும்! எல்லாமே 5-ஸ்டார் ரேட்டிங்!
மைலேஜ் (Mileage) பார்த்து கார் வாங்கிய காலம் போய், இப்போது கார் எந்த அளவிற்கு பாதுகாப்பானது என்பது குறித்த மதிப்பீடுகளை பார்த்த பின்பே வாங்கும் சூழல் உள்ளது. இதற்காகவே குளோபல் என்சிஏபி (Golbal NCAP), ஆசியன் என்சிஏபி (Asian NCAP) என கிராஷ் டெஸ்ட் (Crash Test) குழுக்கள் உலகம் முழுக்கவே செயல்படுகின்றன.
இந்தியாவிற்காக பாரத் என்சிஏபி (Bharat NCAP)-ஐ 2023இல் மத்திய அரசு அறிமுகப்படுத்தியதை கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். இந்த கிராஷ் டெஸ்ட் சோதனைகளில் சிறந்த மதிப்பீடுகளை பெற்ற கார்கள் ஏராளமானவை உள்ளன. அவற்றில் சிறந்தவற்றை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

டாடா நெக்ஸான் (Tata Nexon): டாடா கார்கள் என்றாலே பாதுகாப்பானவை என்கிற ஸ்டாண்டர்டை உருவாக்கிய கார்களுள் நெக்ஸானும் ஒன்றாகும். குளோபல் என்சிஏபி மற்றும் பாரத் என்சிஏபி என 2 கிராஷ் டெஸ்ட்களிலும் முழு 5 நட்சத்திரங்களை நெக்ஸான் பெற்றுள்ளது. குறிப்பாக, குளோபல் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டாரை பெற்ற முதல் இந்திய கார் நெக்ஸான் ஆகும்.

டாடா பஞ்ச் (Tata Punch): நெக்ஸானை பின்பற்றி, அதனை காட்டிலும் அளவில் சிறியதான காரை உருவாக்கும் முயற்சியில் விற்பனைக்கு வந்தது பஞ்ச் ஆகும். இதனால், நெக்ஸானை போல் குளோபல் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் முழு 5 நட்சத்திரங்களை பெற்ற காராக பஞ்ச் விளங்குகிறது. குறைந்த விலையில் பாதுகாப்பான காரை வாங்க விரும்புபவர்களுக்கு பஞ்ச் சிறந்த தேர்வாக இருக்கும்.

டாடா அல்ட்ராஸ் (Tata Altroz): இந்தியாவின் பாதுகாப்பான காராக இந்த தொகுப்பில் நாம் பார்க்கும் மற்றொரு டாடா கார், அல்ட்ராஸ் ஆகும். வருடக்கணக்கில் பெரியதாக அப்டேட் செய்யப்படவில்லை என்றாலும், தனது வலிமையான உடல் கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு வசதிகள் மூலம் டாடாவின் விற்பனையில் கவனிக்கத்தக்க பங்களிப்பை கொண்டிருக்கும் அல்ட்ராஸ் காரும் குளோபல் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றது ஆகும்.

மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO): மஹிந்திரா நிறுவனத்தின் லேட்டஸ்ட் கார்களுள் ஒன்றான எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ, சமீபத்தில் பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் உட்படுத்தப்பட்டது. இதில், எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காருக்கு 5-ஸ்டார் ரேட்டிங் வழங்கப்பட்டது. முன்பு விற்பனையில் இருந்த மஹிந்திரா எக்ஸ்யூவி300 காருக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டது, எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ ஆகும்.

மாருதி சுஸுகி டிசைர் (Maruti Suzuki Dzire): இந்தியாவில் பிரபலமாக இருக்கும் ஒரேயொரு செடான் கார், டிசைர் ஆகும். அந்த அளவிற்கு ரூ.10 லட்சத்திற்குள் குறைந்த விலையில் டிசைர் கிடைக்கிறது. ஒவ்வொரு மாதமும் சராசரியாக 15 ஆயிரம் யூனிட்கள் விற்பனை செய்யப்படும் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Swift) காரின் செடான் ரக வெர்சன், டிசைர் ஆகும். குளோபல் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் டிசைர் கார் 5-ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மோதல் சோதனைகளில் 5-ஸ்டார் ரேட்டிங்ஸ் அவ்வளவு எளிதாக ஒன்றும் கொடுக்கப்படுவது இல்லை. பல்வேறு விதமான வழிகளில் கார்களில் மோதல்கள் மூலம் ஆய்வுகள் செய்யப்பட்ட பிறகே வழங்கப்படுகின்றன. மேற்கூறப்பட்ட கார்கள் மோதல் சோதனைகளில் என்னென்ன மதிப்பெண்களை பெற்றன என்பது குறித்து விரிவான விபரங்களை அறிய நமது டிரைவ்ஸ்பார்க் செய்தித்தளத்தை அணுகவும்.


Click it and Unblock the Notifications









