10 லட்ச ரூபாய்க்குள் விலை ரொம்ப கம்மினு நெனைக்காதீங்க! 4-சிலிண்டர் என்ஜின் உடன் வாங்குவதற்கு ஏற்ற கார்கள்!

இந்தியாவில் பத்து லட்ச ரூபாய்க்குள் கிடைக்கும் பல சிறந்த மற்றும் சிக்கனமான கார்களில், பெரும்பாலும் நான்கு சிலிண்டர்களை கொண்ட என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த பிரிவில் மாருதி சுஸுகி (Maruti Suzuki) மற்றும் ஹூண்டாய் (Hyundai) ஆகிய நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன. டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் கூடுதலாக ஒரு வலுவான டீசல் ஆப்ஷனையும் வழங்குகிறது. பத்து லட்ச ரூபாய்க்குள் கிடைக்கும் சிறந்த நான்கு சிலிண்டர் என்ஜின் கார்களை இங்கே காணலாம்.

10 lakh rupee price cars with 4-cylinder engine option

மாருதி சுஸுகி பலேனோ: இந்த பிரீமியம் ஹேட்ச்பேக் கார் 1.2 லிட்டர் டூயல்ஜெட் நான்கு சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் உடன் வருகிறது. மென்மையான செயல்பாடு, அதிக எரிபொருள் சிக்கனம் (ஒரு லிட்டருக்கு 22.94கிமீ வரை மைலேஜ்) மற்றும் 9 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 360 டிகிரி கேமரா போன்ற அம்சங்கள் உடன் உருவாக்கப்படும் இந்த மாருதி காரின் விலைகள் ரூ.6.66 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)-இல் இருந்து தொடங்குகின்றன.

10 lakh rupee price cars with 4-cylinder engine option

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ்: ஒரு நேர்த்தியான 1.2 லிட்டர் கப்பா நான்கு சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் மூலம் இயங்கும் இந்த ஹூண்டாய் ஹேட்ச்பேக் கார், மென்மையான ஓட்டும் அனுபவத்தையும், சிறப்பான உட்புற அமைப்பையும் வழங்குகிறது. இந்த பிரிவில் நான்கு சிலிண்டர் என்ஜின் உடன் கிடைக்கும் ஒரு சில ஹேட்ச்பேக் கார்களில் இதுவும் ஒன்று ஆகும்.

10 lakh rupee price cars with 4-cylinder engine option

டொயோட்டா கிளான்சா: மேலே குறிப்பிடப்பட்ட மாருதி சுஸுகி பலேனோவின் அடிப்படையிலான மறுபெயரிடப்பட்ட பதிப்பான டொயோட்டா கிளான்சா, அதே 1.2 லிட்டர் நான்கு சிலிண்டர் என்ஜின் மற்றும் அம்சங்களை வழங்குகிறது. டொயோட்டாவின் நம்பகத்தன்மை இதற்கு கூடுதல் சிறப்பு ஆகும். இதன் வேரியண்ட்கள் பொதுவாக ரூ.6.39 லட்சம் முதல் ரூ.9.15 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரையிலான விலைகளில் கிடைக்கின்றன.

10 lakh rupee price cars with 4-cylinder engine option

ஹூண்டாய் அவ்ரா: மேலே கண்ட டிசையரை காட்டிலும் ஸ்டைலான காம்பாக்ட் செடான் காரான அவ்ராவிலும் 1.2 லிட்டர் நான்கு சிலிண்டர் என்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இது பல நவீன தொழிற்நுட்ப அம்சங்களுடன், மென்மையான செயல்பாடு மற்றும் எரிபொருள் சிக்கனத்திற்கு பெயர் பெற்றது. அவ்ரா காரின் வேரியண்ட்கள் ரூ.10 லட்சத்திற்கும் குறைவாக (எக்ஸ்-ஷோரூம்) விலைகளில் கிடைக்கின்றன. மேலும் சிஎன்ஜி ஆப்ஷன்களும் உண்டு.

10 lakh rupee price cars with 4-cylinder engine option

நிசான் மேக்னைட்: சாலையில் கம்பீரமான எஸ்யூவி தோற்றத்தை விரும்புபவர்களுக்கு, பத்து லட்ச ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைக்கும் இவ்வாறான கார்கள் ஏற்றவை ஆகும். நிசான் மேக்னைட்டின் என்ட்ரி-லெவல் வேரியண்ட்களை 4-சிலிண்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் உடன் ரூ.10 லட்சத்திற்கும் குறைவான விலையில் வாங்க முடியும். எஸ்யூவி போன்ற தோற்றத்துடன், சிறந்த எரிபொருள் சிக்கனம் மேக்னைட் காரின் சிறப்பம்சங்கள் ஆகும்.

10 lakh rupee price cars with 4-cylinder engine option

மாருதி சுஸுகி பிரெஸ்ஸா: இந்த மாருதி எஸ்யூவி காரின் பெரும்பாலான வேரியண்ட்கள் ரூ.10 லட்சம் வரம்பை மீறினாலும், பிரெஸ்ஸாவின் சில குறைந்த விலை வேரியண்ட்கள் இந்த பட்ஜெட்டில் நான்கு சிலிண்டர் என்ஜின் உடன் கிடைக்கின்றன. நம்பகமான மற்றும் தொழிற்நுட்ப அம்சங்கள் நிறைந்த காம்பாக்ட் எஸ்யூவி காரான பிரெஸ்ஸாவின் என்ட்ரி-லெவல் எல்.எக்ஸ்.ஐ வேரியண்ட் ரூ.10 லட்சத்திற்கும் குறைவாக (எக்ஸ்-ஷோரூம்) விலையில் கிடைக்கிறது.

10 lakh rupee price cars with 4-cylinder engine option

மஹிந்திரா பொலிரோ நியோ: பொலிரோ நியோ, 1.5 லிட்டர் நான்கு சிலிண்டர் டீசல் என்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இது பட்டியலில் உள்ள மற்ற கார்களை விட உறுதியான, லேடர்-ஃப்ரேம் அடிப்படையிலான எஸ்யூவி ஆகும். இதன் வேரியண்ட்களின் விலைகள் ரூ.7.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் தொடங்குகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: முந்தைய காலங்களில் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்களில் 3-சிலிண்டர் என்ஜின் தான் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 4 சிலிண்டர்களை கொண்ட என்ஜின் நிலையான அம்சமாக மாறிவிட்டது. இருப்பினும், இத்தகைய என்ஜின் உடன் ரூ.10 லட்சத்திற்குள் சிறந்த காரை வாங்க நினைப்பவர்கள் மேலே குறிப்பிடப்பட்டு உள்ள கார்களுள் ஒன்றை வாங்கலாம்.

More from DriveSpark

Article Published On: Sunday, October 26, 2025, 21:20 [IST]
English summary
Best cars with 4 cylinder engine option priced under 10 lakhs maruti suzuki baleno hyundai nios
மேலும்... #car engine #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X