10 லட்ச ரூபாயில் இதில் ஒரு காரை தான் வாங்குகிறீர்களா என்பதை கவனியுங்க! இருக்கை ஹெட்ரெஸ்ட்டுக்கு சிறந்தவை!
இந்தியாவில் பத்து லட்சம் ரூபாய்க்குள் கிடைக்கும் பல கார்களில், ஓட்டுநர்களுக்கும் பயணிகளுக்கும் வசதியையும் பாதுகாப்பையும் அதிகரிக்கும் வகையில், சரிசெய்யக்கூடிய முன் தலையணைகள் (headrests) வழங்கப்படுகின்றன. சில கார்களில் பின் இருக்கைகளிலும் இந்த வசதி உண்டு. இதன் மூலமாக சவுகரியமான பயண அனுபவத்தை பெற முடிகிறது.
அட்ஜெஸ் செய்யக்கூடிய முன் இருக்கை தலையணைகள் இன்றைய நிலவரப்படி கிட்டத்தட்ட அனைத்து கார்களிலும் வழங்கப்படுகின்றன. குறிப்பாக, ரூ.10 லட்சத்திற்குள் துணை காம்பாக்ட் எஸ்யூவிகள் மற்றும் பிரீமியம் ஹேட்ச்பேக்குகள் இந்த வசதியை வழங்கும் சிறந்த தேர்வுகளில் அடங்குகின்றன. அத்தகைய கார்களை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO): மஹிந்திரா நிறுவனத்தின் இது ஒரு காம்பாக்ட் எஸ்யூவி கார் ஆகும். இதன் பல்வேறு வேரியண்ட்களில் சரிசெய்யக்கூடிய தலையணைகள் உள்ளன. சிறப்பான சஸ்பென்ஷன் அமைப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்களுக்காக எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ கார் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

டாடா நெக்ஸான் (Tata Nexon): பாதுகாப்பு மற்றும் வசதிக்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு பிரபலமான காம்பாக்ட் எஸ்யூவி காரான இது இந்திய சாலைகளுக்கு ஏற்ற மென்மையான சஸ்பென்ஷன் உடன் வருகிறது. மேலும், இந்த டாடா காரில் பின் இருக்கைகளில் பயணிகளுக்கு சரிசெய்யக்கூடிய தலையணைகள் வழங்கப்படுகின்றன.

ஹூண்டாய் வென்யூ (Hyundai Venue): மிக சமீபத்தில் புதிய தோற்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள வென்யூ காரின் பல வேரியண்ட்கள் பத்து லட்சம் ரூபாய் பட்ஜெட்டிற்குள் தேவைக்கேற்ப சரிசெய்யக்கூடிய தலையணைகள் உடன் வருகின்றன. இதன் நவீன கேபின், அதிக தொழிற்நுட்ப அம்சங்கள் மற்றும் வசதியான இருக்கைகள் இந்த காரை ஒரு சிறந்த தேர்வாக விளங்க வைக்கின்றன.

ஹூண்டாய் அவ்ரா (Hyundai Aura): இது ஒரு ஹூண்டாய் காம்பாக்ட் செடான் கார் ஆகும். மேலும், ஹூண்டாய் விற்பனை செய்யும் ஒரேயொரு விலை குறைவான செடான் காரான இதன் பிரீமியம் மற்றும் விசாலமான கேபின், பின் இருக்கை பயணிகளுக்கும் ஏசி வென்ட்கள் மற்றும் சரிசெய்யக்கூடிய தலையணைகள் பல வேரியண்ட்களில் கிடைக்கின்றன.

மாருதி சுஸுகி இக்னிஸ் (Maruti Suzuki Ignis): பெரியதாக அதிக எண்ணிக்கையில் விற்பனையாகாத மிகவும் சில மாருதி சுஸுகி கார்களுள் ஒன்றான இதன் டெல்டா மற்றும் அதற்கு மேற்பட்ட வேரியண்ட்களில், பின் இருக்கைகளில் சரிசெய்யக்கூடிய தலையணைகள் வழங்கப்படுகின்றன. இந்த லிஸ்ட்டில் மிகவும் மலிவு விலையிலான கார்களில் ஒன்றான இதன் விசாலமான கேபின் மற்றும் உயரமான ஓட்டுநர் நிலை பலரால் பாராட்டப்படுகிறது.

ரெனால்ட் கைகர் (Renault Kiger): இது ஒரு பிரெஞ்சு-ஸ்டைல் ரெனால்ட் எஸ்யூவி கார் ஆகும். டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் தரமான சஸ்பென்ஷன் அமைப்பைக் கொண்டுள்ள இந்த காரின் பல வேரியண்ட்களில் சரிசெய்யக்கூடிய தலையணைகள் கிடைக்கின்றன. 2025ஆம் ஆண்டிற்கான கைகர் ஃபேஸ்லிஃப்ட் கார் கடந்த ஆகஸ்ட் மாதத்தில்தான் ரூ.6.29 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: காரில் இருக்கை தலையணைகள் சரியான உயரத்தில் இருப்பது பயணிகளுக்கு சவுகரியத்தை தருவது மட்டுமின்றி, விபத்து சமயங்களில் சிறந்த பாதுகாப்பையும் வழங்குகின்றன. காரில் பயணித்தால் கழுத்து வலி ஏற்படுவது போன்ற அசம்பாவித நிகழ்வுகளை தற்போதைய மாடர்ன் கார்கள் முற்றிலுமாக தவிர்த்துவிட்டன என்றுதான் சொல்ல வேண்டும். அத்தகைய கார்கள் ரூ.10 லட்சத்திற்குள் இத்தனை கிடைக்கின்றன என்பது நல்ல விஷயம் ஆகும்.


Click it and Unblock the Notifications









