மொபைல் போன் உடன் இணைத்தால் போதும்... 10 லட்ச ரூபாய் கார்களிலும் நாவிகேஷன் வசதி!!

பத்து லட்ச ரூபாய்க்கும் குறைவான விலையுள்ள கார்களில், நவீன வழிக்காட்டும் (Navigation) வசதிகள், பெரிய தொடுதிரைகள் மூலமாகவும், ஸ்மார்ட்போன் (Android Auto மற்றும் Apple CarPlay) வாயிலாகவும் கிடைக்கின்றன. விலையுயர்ந்த சொகுசு கார்களில் உள்ள பில்ட்-இன் நாவிகேஷன் மென்பொருள் அளவிற்கு இல்லையென்றாலும், ரூ.10 லட்சத்திற்குள் விலை குறைவான கார்களில் ஸ்மார்ட்போன் இணைப்பு வசதி முக்கியப் பங்கு வகிக்கிறது.

இது, இன்றைய காலத்தில் கார் ஓட்டும் ஸ்டைலையே மாற்றியுள்ளது. எந்த பக்கம் திரும்ப வேண்டும், எங்கெல்லாம் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ளது என்பதை எல்லாம் வரைப்படத்துடன் காட்டக்கூடியதாக இந்த வசதி உள்ளது. பத்து லட்ச ரூபாய்க்கும் குறைவான விலையில், சிறந்த நாவிகேஷன் வசதிகளைக் கொண்ட சில கார்களை இனி தொகுப்பில் பார்க்கலாம்.

10 lakh rupee cars with advanced navigation systems

ஹூண்டாய் ஐ20 (Hyundai i20): இந்த ஹூண்டாய் கார், அதன் சிறப்பான பயண அனுபவம் மற்றும் கனெக்டெட் வசதிகளுக்காக அறியப்படுகிறது. இந்த காரில் 10.25 இன்ச் தொடுதிரை இன்போடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. இது நாவிகேஷன் மற்றும் வாய்ஸ் கண்ட்ரோல் வசதியை வழங்கக்கூடியதாக உள்ளது. ஹூண்டாயின் ப்ளூலிங்க் (Bluelink) கனெக்டெட் கார் தொழில்நுட்பம் மூலம், ஓவர்-தி-ஏர் (OTA) மேப் அப்டேட்கள் வழங்கப்படுகின்றன. இது, நாவிகேஷன் எப்போதும் புதுப்பிக்கப்பட்ட நிலையில் இருப்பதை உறுதி செய்கிறது. மேலும், இந்த காரின் சில வேரியண்ட்களில் வயர்டு ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே வசதிகளும் உள்ளன.

10 lakh rupee cars with advanced navigation systems

டாடா நெக்ஸான் (Tata Nexon): இந்தியாவின் பிரபலமான காம்பாக்ட் எஸ்யூவி காரான இது, கனெக்டெட் தொழில்நுட்பத்தையும், பெரிய டிஸ்பிளேவையும் வழங்குகிறது. இதில் 10.25 இன்ச் இன்போடெயின்மென்ட் ஸ்கிரீன் உள்ளது. இது லைவ் டிராஃபிக் அப்டேட்களுடன் கூடிய நாவிகேஷனை ஒருங்கிணைத்து வழங்குகிறது. இந்த காரில் உள்ள டாடாவின் IRA 2.0 கனெக்டெட் தொழில்நுட்பம் ஆனது வாகனத்தின் ஆரோக்கியம் குறித்த தகவல்கள் மற்றும் ஜியோஃபென்சிங் போன்ற வசதிகளைக் கொடுக்கிறது. இதன் திரை, சூரிய ஒளியிலும் தெளிவாகத் தெரியும் அளவுக்கு உயர் தரம் வாய்ந்தது என்று பாராட்டப்படுகிறது.

10 lakh rupee cars with advanced navigation systems

மாருதி சுஸுகி ஃபிரான்க்ஸ் (Maruti Suzuki Fronx): நவீன உட்புற வடிவமைப்பு மற்றும் சிறந்த ஸ்மார்ட்போன் இணைப்புக்கு பெயர் பெற்ற இந்த மாருதி சுஸுகி காரில் மேம்பட்ட நாவிகேஷனை வழங்க 9 இன்ச் ஸ்மார்ட்பிளே புரோ+ தொடுதிரை உள்ளது. இந்த திரை ஆனது வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே இணைப்பை ஏற்கக்கூடியதாக உள்ளது. இதன் மூலம் கூகுள் மேப்ஸ் அல்லது ஆப்பிள் மேப்ஸ் போன்ற செயலிகளைப் பயன்படுத்தி சிரமமில்லாது பயணத்திற்கான வழிக்காட்டியை பெற முடியும்.

10 lakh rupee cars with advanced navigation systems

மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO): பல அம்சங்கள் நிறைந்த இந்த மஹிந்திரா காரின் சில உயர் வேரியண்ட்களில், மேம்பட்ட டிரைவர் உதவி அமைப்புகள் (ADAS) கூட வழங்கப்படுகின்றன. பத்து லட்ச ரூபாய்க்கும் குறைவான விலை கொண்ட வேரியண்ட்களில், 7 இன்ச் இன்போடெயின்மென்ட் டிஸ்பிளே இடம்பெறுகிறது. இதில், வரைப்படத்துடன் கூடிய டர்ன்-பை-டர்ன் நாவிகேஷன் வசதி உள்ளது. மேலும், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே வசதிகளும் இந்த காரின் இன்ஃபோடெயின்மெண்ட் திரையில் வழங்கப்படுகின்றன.

10 lakh rupee cars with advanced navigation systems

டாடா அல்ட்ராஸ் (Tata Altroz): டாடா மோட்டார்ஸின் பிரீமியம் ஹேட்ச்பேக் காரான இது, சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட போது 10.25 இன்ச் இன்போடெயின்மென்ட் தொடுதிரை டிஸ்பிளேவை பெற்றது. இது ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே இணைப்பு வசதிகளுடன் வருகிறது. இத்தகைய சிறப்புமிக்க இந்த இன்ஃபோடெயின்மெண்ட் டிஸ்பிளே வேகமான ரியாக்‌ஷனை வழங்குகிறது. மேலும், ஒவ்வொரு திருப்புதலுக்கும் எச்சரிக்கைகள், கேபினை சுற்றிலும் விளக்குகள் மற்றும் வாய்ஸ் கண்ட்ரோல் உடன் 7 இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளேவும் இதில் உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புது இடங்களுக்கு சென்றால் இப்போதெல்லாம் வழிக்கேட்டு செல்வது மிகவும் குறைந்துவிட்டதற்கு காரணம், கூகுள் மேப் போன்ற ஆன்லைன் வரைப்படங்கள் ஆகும். இந்த வசதி, பல லட்ச ரூபாய் கொடுத்து வாங்கப்படும் கார்களில் வழங்கப்படுவதில் ஆச்சிரியம் ஒன்றுமில்லை. இருப்பினும், பெரிய திரையில் வரைப்படத்தை பார்த்தப்படியோ அல்லது அதன் சொல்லை கேட்டப்படியோ வாகனம் ஓட்டுவது தனி சந்தோஷம் ஆகும். அத்தகைய சந்தோஷத்தை 10 லட்ச ரூபாய்க்குள் விலை கொண்ட கார்களிலும் பெறலாம் என்பது இரட்டிப்பு மகிழ்ச்சி ஆகும்.

More from DriveSpark

Article Published On: Thursday, November 13, 2025, 5:00 [IST]
English summary
Best cars with advanced navigation systems under 10 lakh rupees hyundai i20 and tata nexon
மேலும்... #auto news #cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X