10 லட்ச ரூபாய் கார்களில் இந்த வசதி கூட இல்லைனா எப்படி? மழைக்காலத்தில் இது முக்கியமா தேவை!

தற்போதைய இந்திய மார்க்கெட் நிலவரப்படி, ரூ.10 லட்சத்திற்குள் விலை குறைவான கார்களில் அதிநவீன டிராக்‌ஷன் கண்ட்ரோல் (Traction Control) சிஸ்டம் ஆனது வழங்கப்படுகிறது. எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம் (ESP) அல்லது வைகல் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மெண்ட் (VSM) தொழிற்நுட்பத்தின் ஒரு பகுதியாக டிராக்‌ஷன் கண்ட்ரோல் ஆனது வழங்கப்படுகிறது.

காரில் டிராக்‌ஷன் கண்ட்ரோல் இருப்பது பாதுகாப்பை வழங்குவது மட்டுமின்றி, காரை ஹேண்ட்லிங் (Handling) செய்வதையும் சவுகரியமாக்குகிறது. குறிப்பாக, ஈரப்பதத்தினால் வழுக்கக்கூடிய சாலைகளில் செல்லும்போது கார்களில் டிராக்‌ஷன் கண்ட்ரோலின் தேவை அதிகமாக உள்ளது. அந்த வகையில் ரூ.10 லட்சத்திற்குள் அட்வான்ஸ்டு டிராக்‌ஷன் கண்ட்ரோல் வசதி உடன் கிடைக்கும் கார்களை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

cars with advanced traction control system

மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO): மஹிந்திரா நிறுவனத்தின் லேட்டஸ்ட் எஸ்யூவி காராக எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ விளங்குகிறது. கடந்த ஆண்டு மத்தியில் புதுமையான தோற்றத்தில் மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த கார், பாரத் என்சிஏபி (Bharat NCAP) கிராஷ் டெஸ்ட்டில் 5க்கு முழு 5 நட்சத்திர மதிப்பெண்களை பெற்றதற்கு இந்த காரில் டிராக்‌ஷன் கண்ட்ரோல், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்படுவது முக்கிய காரணமாகும்.

cars with advanced traction control system

டாடா பஞ்ச்/ பஞ்ச் இவி (Tata Punch/ Punch EV): டாடா மோட்டார்ஸின் மைக்ரோ-எஸ்யூவி காராக விளங்கும் பஞ்ச் காரும் அதன் வலிமையான உடல் தரத்திற்காகவும், பாதுகாப்பு தொழிற்நுட்ப வசதிகளுக்காகவும் பெயர் பெற்றது ஆகும். அந்த வகையில், எலக்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் வசதி மூலமாக பஞ்ச் கார்களில் டிராக்‌ஷன் கண்ட்ரோல் ஆனது வழங்கப்படுகிறது.

cars with advanced traction control system

டாடா நெக்ஸான் (Tata Nexon): டாடா மோட்டார்ஸின் சப்-காம்பெக்ட் எஸ்யூவி காரான நெக்ஸானிலும் எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், டிராக்‌ஷன் கண்ட்ரோல் மற்றும் கார் ரோல்-ஓவர் ஆகுவதை தடுக்கும் வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. இதன் மூலமாக கடினமான பாதைகளிலும் இயங்கக்கூடிய திறன் கொண்டதாக விளங்கும் நெக்ஸானின் சில வேரியண்ட்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.10 லட்சத்திற்குள் உள்ளன.

cars with advanced traction control system

மாருதி சுஸுகி ஃபிரான்க்ஸ் (Maruti Suzuki Fronx): மாருதி சுஸுகி நிறுவனத்தில் இருந்து 2023ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட காரான ஃபிரான்க்ஸ், மாருதி சுஸுகி பலேனோவில் இருந்து உருவாக்கப்பட்டது ஆகும். இதனால், பலேனோ காரை போன்று ஃபிரான்க்ஸ் காரிலும் ரூ.10 லட்சத்திற்குள் டிராக்‌ஷன் கண்ட்ரோல் வசதி வழங்கப்படுகிறது.

cars with advanced traction control system

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் & டிசைர் (Maruti Suzuki Swift & Dzire): மாருதி சுஸுகி நிறுவனத்தின் மிக பிரபலமான கார்களான இவற்றில் கடந்த 2024ஆம் ஆண்டில்தான் டிராக்‌ஷன் கண்ட்ரோல் வசதி புதிய அப்டேட்டாக வழங்கப்பட்டது. ஸ்விஃப்ட் ஆனது மாருதி சுஸுகியின் ஹேட்ச்பேக் (Hatchback) ரக காராகவும், டிசைர் (Dzire) ஆனது செடான் (Sedan) ரக காராகவும் விளங்குகின்றன.

cars with advanced traction control system

ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter): டாடா பஞ்ச் காருக்கு போட்டியாக ஹூண்டாய் விற்பனை செய்யும் மைக்ரோ-எஸ்யூவி காரான எக்ஸ்டரில் விலைமிக்க டாப் வேரியண்ட்களில் எலக்ட்ரிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் வசதி மூலமாக டிராக்‌ஷன் கண்ட்ரோல் வசதி வழங்கப்படுகிறது. டாப் வேரியண்ட்டாக இருப்பினும், அவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.10 லட்சத்திற்குள் தான் உள்ளன. இவற்றுடன், ஹில்-ஹோல்ட் அசிஸ்ட் வசதியும் இந்த ஹூண்டாய் காரில் வழங்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: காரின் அளவு எந்த அளவிற்கு இருந்தாலும், அதில் டிராக்‌ஷன் கண்ட்ரோல் வசதி இருப்பது முக்கியமாகும். ஏனெனில், கார் விபத்துகள் பலவற்றை டிராக்‌ஷன் கண்ட்ரோல் ஆனது தடுத்துள்ளது. இத்தகைய வசதி உடன் காரை ரூ.10 லட்சத்திற்குள் வாங்க விரும்புபவர்கள் மேலே குறிப்பிடப்பட்ட கார்களுள் ஒன்றை வாங்கலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, September 8, 2025, 5:00 [IST]
English summary
Best cars with advanced traction control under 10 lakhs mahindra xuv 3xo and tata punch
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X