10 லட்ச ரூபாய் காரில் இது கூட இல்லைனா எப்படி...? காஸ்ட்லீயானதுனு நெறைய பேர் நெனைச்சிட்டு இருக்காங்க!
இந்தியாவில் ரூ.10 லட்சத்துக்கும் குறைவான விலையில் அலாய் சக்கரங்களுடன் கிடைக்கும் ஏராளமான கார்கள் சந்தையில் உள்ளன. பல பிரபலமான ஹேட்ச்பேக்குகள் (Hatchbacks), செடான்கள் (Sedans) மற்றும் காம்பாக்ட் எஸ்யூவி (Compact SUV) கார்களின் உயர் ரக வேரியண்ட்களில் அலாய் சக்கரங்கள் இடம்பெறுகின்றன. அவற்றில் சிறந்த சில தேர்வுகளை இங்கே காணலாம்.

டாடா அல்ட்ராஸ் (Tata Altroz): பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பவர்களுக்கு, இது ஒரு சிறந்த தேர்வு. குளோபல் என்சிஏபி (Global NCAP) பாதுகாப்பு சோதனையில் பெரியவர்களுக்கான பாதுகாப்பிற்கு 5-நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. 10 லட்ச ரூபாய்க்குள் கிடைக்கும் இதன் எக்ஸ்.இசட்+ (XZ+) போன்ற உயர் ரக வேரியண்ட்களில் அலாய் சக்கரங்கள் உள்ளன.

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift): இந்தியாவின் பிரபலமான மற்றும் நம்பகமான ஹேட்ச்பேக் காரான இது, செயல்திறன் மற்றும் எரிபொருள் சிக்கனம் ஆகிய இரண்டிலும் சமநிலையை வழங்குகிறது. இதன் டாப்-ஸ்பெக் ZXi பிளஸ் வேரியண்ட் ஸ்டைலான அலாய் வீல்களுடன் வருகிறது.

டாடா பன்ச் (Tata Punch): வலுவான கட்டுமானத் தரம் மற்றும் 5-நட்சத்திர குளோபல் என்சிஏபி பாதுகாப்பு மதிப்பீட்டிற்காக அறியப்படும் டாடா மைக்ரோ-எஸ்யூவி கார் இது ஆகும். 10 லட்ச ரூபாய்க்குள் விலை கொண்ட டாடா பன்ச்சின் உயர் ரக வேரியண்ட்களில் அலாய் வீல்கள் பொருத்தப்படுகின்றன.

மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO): இது ஒரு ஸ்டைலான மற்றும் அம்சங்கள் நிறைந்த காம்பாக்ட் எஸ்யூவி கார் ஆகும். இதன் விலைமிக்க உயர் ரக வேரியண்ட்களில் அலாய் வீல்களுடன் விசாலமான மற்றும் நன்கு வசதியுள்ள கேபினும் வழங்கப்படுகிறது. விலைமிக்க வேரியண்ட்களாக இருப்பினும் அவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-Showroom Prices) ரூ.10 லட்சத்திற்கும் உள்ளாகவே உள்ளன.

ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter): டாடா பன்ச்க்கு போட்டியாக, ஹூண்டாயின் மைக்ரோ-எஸ்யூவி ரக காரான எக்ஸ்டர், சிறந்த தொழிற்நுட்ப அம்சங்களையும், நடைமுறைப் பயன்பாட்டிற்கான வசதிகளையும் வழங்குகிறது. இந்த காரின் டாப் வேரியண்ட்டான எஸ்.எக்ஸ் (ஆப்ஷ்னல்) (SX (O))-இல் அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன.

மாருதி சுஸுகி டிசையர் ((Maruti Suzuki Dzire): மேலே கண்ட ஸ்விஃப்ட் காரின் செடான் வெர்சனான டிசையர், நல்ல மைலேஜ் தரும் நம்பகமான செடான் காராக விளங்குகிறது. குறிப்பாக இதன் சிஎன்ஜி (CNG) வேரியண்ட்கள் மிக சிறப்பான மைலேஜ் வழங்குகின்றன. இதன் டாப் ZXi மற்றும் ZXi பிளஸ் வேரியண்ட்களில் அலாய் வீல்கள் பொருத்தப்படுகின்றன.

ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber): மேற்கூறப்பட்ட கார்கள் அனைத்தையும் விட அளவில் பெரியதான எம்பிவி (MPV) ரக கார் இதுவாகும். குறைந்த பட்ஜெட்டில் 7 இருக்கைகள் கொண்ட கார் தேவைப்படுவோருக்கு டிரைபர் ஒரு சிறந்த தேர்வாகும். இதன் டாப் வேரியண்ட்களில் அலாய் வீல்களுடன், மிகவும் நடைமுறைக்கு உகந்த மற்றும் மாடுலர் கேபினும் வழங்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இன்றைய காலத்தில் கிட்டத்தட்ட அனைத்து கார்களிலும் அலாய் சக்கரங்கள் பெறுவதற்கான வசதி வந்துவிட்டது. அதாவது, இரும்பு சக்கரங்களை காட்டிலும் கொஞ்சம் செலவு செய்தால், அலாய் சக்கரங்களை வாங்கிவிடலாம் என்கிற நிலை உள்ளது. மிகவும் அதிகமாக இல்லாமல், ரூ.10 லட்சத்திற்குள் இத்தகைய கார்களை வாங்கி விடலாம் என்பது சற்று ஆச்சிரியமாக உள்ளது.


Click it and Unblock the Notifications









