இந்த கார்களின் ஏசி சிஸ்டத்தை பார்த்து மயங்கி போனவர்கள் நிறைய பேர்! ரூ.10 லட்சத்திற்குள் கிடைப்பதுதான் சிறப்பே!

இன்றைய கால கார்களில் அத்தியவாசியமானதாக மாறி போன ஒன்று, கிளைமேட் கண்ட்ரோல் (Climate Control) ஆகும். அதாவது, காருக்குள் எவ்வாறான வெப்பநிலை நிலவ வேண்டும் என்பதை தீர்மானிக்கும் கண்ட்ரோல் சிஸ்டம் ஆகும். கார்களில் இந்த வசதி ஆரம்ப காலத்தில் மேனுவலாக கண்ட்ரோல் செய்யும் வகையில் வழங்கப்பட்டு வந்த நிலையில், சமீப காலமாக இது ஆட்டோமேட்டிக் ஆக செயல்படும் வகையில் வழங்கப்படுகிறது.

அதுவும், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் (ACC) மற்றும் ட்யூயல்-ஸோன் (Dual-zone) க்ளைமேட் கண்ட்ரோல் என்கிற இரு விதமான வகைகளில் கார்களில் ஆட்டோமேட்டிக் ஏசி கண்ட்ரோல் (AC Control) வசதி வழங்கப்படுகிறது. இதில், ட்யூயல்-ஸோன் வசதி ஆனது சற்று விலையுயர்ந்த கார்களில் மட்டுமே வழங்கப்படுகிறது.

best cars with automatic climate control

இதற்கு காரணம், காரின் முன் இருக்கை வரிசையிலேயே டிரைவருக்கு ஒரு மாதிரியான வெப்பநிலையிலும், முன் இருக்கை பயணிக்கு வேறு மாதிரியான வெப்பநிலையிலும் ஏசி-ஐ வழங்கக்கூடியதாக ட்யூயல்-ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல் வசதி விளங்குவதினால் ஆகும். ட்யூயல்-ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல் வசதியில் டிரைவர் மற்றும் முன் இருக்கை பயணி தனித்தனியான வெப்ப நிலைகளில் ஏசி காற்றை பெறலாம்.

இதனால், இந்தியாவில் ரூ.10 லட்சத்திற்குள் கிடைக்கும் எந்த காரிலும் ட்யூயல்-ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல் வசதி வழங்கப்படுவதில்லை. இதற்கு பதிலாக, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் வசதி உடன் ரூ.10 லட்சத்திற்குள் கிடைக்கும் சிறந்த கார்களை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

best cars with automatic climate control

மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO): மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து கடந்த 2024ஆம் ஆண்டின் மத்தியில் அறிமுகம் செய்யப்பட்ட கார். முன்னதாக விற்பனையில் இருந்த மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரின் மேம்படுத்தப்பட்ட வெர்சனாக அதன் இடத்தில் எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ அறிமுகம் செய்யப்பட்டது.

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தில் பணியாற்றிய பிரபல கார் டிசைனர் பிரதாப் போஸ் (Car Designer Pratap bose) அவர்கள் மஹிந்திராவுக்கு மாறிய பின்பு வடிவமைத்த முதல் காரான எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரில் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் வசதி வழங்கப்படுகிறது.

best cars with automatic climate control

ஹூண்டாய் வென்யூ (Hyundai Venue): ட்யூயல்-ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல் வசதி உடன் கார் வாங்க விரும்புபவர்களுக்கு எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ எந்த அளவிற்கு சரியான தேர்வாக உள்ளதோ அந்த அளவிற்கு வென்யூ காரும் சரியான தேர்வாக இருக்கும். ஏனெனில், எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரை போன்று 4 மீட்டர்களில் நீளம் கொண்ட வென்யூ காரிலும் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் வசதி வழங்கப்படுகிறது.

ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter): ஹூண்டாய் நிறுவனத்தின் அளவில் சிறியதான எஸ்யூவி (SUV) ரக காரான எக்ஸ்டரில் மிட்-வேரியண்ட்டான எஸ்.எக்ஸ் வேரியண்ட்டில் இருந்து ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் வசதி வழங்கப்படுகிறது. எக்ஸ்டர் எஸ்.எக்ஸ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-Showroom Prices) தற்சமயம் ரூ.9.70 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவை இல்லாமல், டாடா பஞ்ச் (Tata Punch), ரெனால்ட் கைகர் (Renault Kiger) உள்ளிட்ட கார்களையும் இந்த லிஸ்ட்டில் சேர்க்கலாம். இருப்பினும், அவை அளவில் மிகவும் சிறியதாக உள்ளதால், போதுமான இடவசதி மற்றும் சிறந்த ஆட்டோமேட்டிக் ஏசி சிஸ்டத்துடன் கார் வாங்க விரும்புபவர்களுக்கு மேலே குறிப்பிடப்பட்டுள்ள கார்கள் ஏற்றவையாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, August 19, 2025, 5:00 [IST]
English summary
Best cars with automatic climate control under 10 lakh rupees tata nexon and hyundai exter
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X