ரூ.10 லட்சத்திற்குள் இந்த வசதி இல்லாம கார் வாங்காதீங்க! நிறைய பேருக்கு இது தெரிய மாட்டிங்குது!

இன்றைய கால மாடர்ன் கார்களில் தொழிற்நுட்ப அம்சங்கள் பல விதங்களில் பரிணாம வளர்ச்சியை அடைந்துள்ளன. குறிப்பாக, பயணிகளின் பாதுகாப்பிற்கான தொழிற்நுட்ப அம்சங்கள் சமீப காலத்தில் வெகுவாக அதிகரித்துள்ளன. அந்த வகையில், தற்போதைய கார்களில் அத்தியவாசியமானதாக மாறி போன பாதுகாப்பு அம்சங்களுள் ஒன்று, க்ரூஸ் கண்ட்ரோல் (Cruise Control) ஆகும். க்ரூஸ் கண்ட்ரோலின் பயன் என்னவென்றால், ஆக்ஸலரேட்டர் (Accelerator) பெடலை பயன்படுத்துவதை குறைத்து, காரை ஒரே அளவிலான வேகத்தில் இயங்க வைக்கும். அந்த வேகம் எந்த அளவிற்கு இருக்க வேண்டும் என்பதை டிரைவர் தேர்வுச் செய்துக் கொள்ளலாம்.

நெடுஞ்சாலை பயணத்தின்போது அதிகம் பயன்படுத்தக்கூடிய இந்த வசதி ஆனது, ஓட்டுனரின் கவன குறைவால் ஏற்படும் விபத்துகளை தடுப்பது மட்டுமின்றி, காரை சீரான வேகத்தில் இயக்கி காரில் அதிக மைலேஜையும் பெற வைக்கிறது. இத்தகைய சிறப்புமிக்க க்ரூஸ் கண்ட்ரோல் வசதி உடன் இந்தியாவில் ரூ.10 லட்சத்திற்குள் கிடைக்கும் கார்களை இனி ஒன்றன்பின் ஒன்றாக பார்க்கலாம்.

best cars with cruise control under rs 10 lakhs

ரெனால்ட் டிரைபர் (Renault Triber): இந்தியாவில் தனது பிராண்டில் இருந்து சிறப்பாக விற்பனையாகும் கார்களுள் ஒன்றான டிரைபர் என்கிற எம்பிவி (MPV) ரக காரை சமீபத்தில் புதிய தோற்றத்தில் ரெனால்ட் நிறுவனம் அறிமுகம் செய்தது. புதிய டிரைபர் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-showroom Prices) ரூ.6.30 லட்சத்தில் இருந்து நிர்ணயிக்கப்பட்டாலும், க்ரூஸ் கண்ட்ரோல் ஆனது ரூ.8.65 லட்சத்தை விலையாக கொண்ட எமோஷன் வேரியண்ட்டில் இருந்து கிடைக்கிறது.

best cars with cruise control under rs 10 lakhs

மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ (Mahindra XUV 3XO): புதிய ரெனால்ட் டிரைபர் காரை போன்று மார்க்கெட்டில் கடந்த வருடத்தில் அறிமுகம் செய்யப்பட்ட லேட்டஸ்ட் கார், எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ ஆகும். இந்த மஹிந்திரா எஸ்யூவி (SUV) ரக காரின் மிட்-வேரியண்ட்டான எம்.எக்ஸ்3 வேரியண்ட்டில் இருந்து க்ரூஸ் கண்ட்ரோல் கிடைக்கிறது. இந்த வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.9.74 லட்சம் ஆகும். இது மட்டுமில்லாமல், ரூ.10 லட்சத்திற்குள் ரூ.9.99 லட்சத்தில் விலையை கொண்ட எம்.எக்ஸ்3 புரோ வேரியண்ட்டிலும் க்ரூஸ் கண்ட்ரோல் வழங்கப்படுகிறது.

best cars with cruise control under rs 10 lakhs

டாடா டிகோர் (Tata Tigor): சிறந்த கார்கள் வரிசையில் இந்த காரை பார்த்தாலும், டிகோரின் விற்பனை சமீப காலமாக வெகுவாக குறைந்து கொண்டே வருகிறது. இருப்பினும், குறைந்த விலையில் க்ரூஸ் கண்ட்ரோல் உடன் காரை வாங்க விரும்புபவர்களுக்கு டிகோர் ஏற்றதாக இருக்கும். ஏனெனில், இந்த டாடா செடான் காரின் எக்ஸ்.இசட் பிளஸ் வேரியண்ட்டில் இருந்து க்ரூஸ் கண்ட்ரோல் வசதி கிடைக்கிறது. இந்த வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.8 லட்சமாக உள்ளது.

best cars with cruise control under rs 10 lakhs

சிட்ரோன் சி3 (Citroen C3): கார் சிறியதாக இருந்தாலும் பரவாயில்லை, ஆனால் ஸ்டைலிஷாக இருக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு பிரெஞ்சு-ஸ்டைல் காரான சி3 ஏற்றதாக இருக்கும். மேலும், வெறும் ரூ.7.91 லட்சத்தில் எக்ஸ்-ஷோரும் விலையை கொண்ட இந்த காரின் ஷைன் எக்ஸ் வேரியண்ட்டில் இருந்து க்ரூஸ் கண்ட்ரோல் வசதி ஆனது வழங்கப்படுகிறது. சிட்ரோன் சி3 காரில் புதியதாக சி3 எக்ஸ் என்கிற வேரியண்ட்கள் மிக சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவற்றிலும், க்ரூஸ் கண்ட்ரோல் வழங்கப்பட்டு உள்ளது.

best cars with cruise control under rs 10 lakhs

மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno): தற்சமயம் இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் வாங்கும் கார்களுள் ஒன்று, பலேனோ ஆகும். மாருதி சுஸுகியின் பிரீமியம் தரத்திலான ஹேட்ச்பேக் (Hatchback) ரக காரான பலேனோவின் ஆல்பா வேரியண்ட்டில் க்ரூஸ் கண்ட்ரோல் கிடைக்கிறது. மேனுவல் மற்றும் ஏஜிஎஸ் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும் பலேனோ ஆல்பா காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.9.46 லட்சம் மற்றும் ரூ.9.96 லட்சம் ஆக தற்சமயம் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சிறந்த தொழிற்நுட்ப அம்சங்களை கொண்ட கார்களை வாங்கவே நம்மில் அனைவரும் விரும்புவோம். அந்த வகையில், இன்றைய கால கார்களில் அடிப்படை அம்சமாக மாறி போன க்ரூஸ் கண்ட்ரோல் உடன் கார்களை வாங்க முயற்சிக்கலாம். நெடுஞ்சாலை பயணங்களின் போது அவசியமாக தேவைப்படுகின்ற க்ரூஸ் கண்ட்ரோல் உடன் ரூ.10 லட்சத்திற்குள் கார் வாங்கலாம் என்பது அற்புதமான விஷயமாகும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, August 12, 2025, 23:29 [IST]
English summary
Best cars with cruise control in india under rupees 10 lakhs new renault triber to maruti baleno
மேலும்... #car technology #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X